பேரரசு இயக்கத்தில் பார்த்திபன் நடிக்கும் ‘திகார்’ வேகமாக வளர்கிறது.
காயத்திரி பிலிம்ஸ் இண்டர்நேஷனல் பட நிறுவனம் சார்பாக ரேகா அஜ்மல் தயாரிக்கும் படம் ‘ திகார்’. இந்த படத்தில் பார்த்திபன் கதாநாயகனாக நடிக்கிறார்.
இன்னொரு நாயகனாக உன்னிமுகுந்தன் நடிக்கிறார். கதாநாயகியாக அகன்ஷாபுரி நடிக்கிறார். மற்றும் எம்.எஸ்.பாஸ்கர், ரியாஸ்கான், கார்த்திகேயன், பிரியங்கா, தேவன், மும்பைசங்கர் நடிக்கிறார்கள். ஈரான் நடிகர் ஜியாத்கான் வில்லனாக அறிமுகமாகிறார். மற்றும் ஏராளமான நட்சத்திரங்களும் நடிக்கிறார்கள்.
கதை, திரைக்கதை, வசனம்,பாடல்கள் எழுதி இயக்குகிறார் பேரரசு.
சந்திரமுகி,சிவகாசி படங்களின் ஒளிப்பதிவாளர் சேகர்.வி.ஜோசப் ஒளிப்பதிவு செய்கிறார்.இசை – ஆர்.ஏ.ஷபீர் -கலை – வல்சன் ,தயாரிப்பு – ரேகா அஜ்மல்
படம் பற்றி இயக்குநர் பேரரசுவிடம் கேட்டோம்….
”பார்த்திபன் – உன்னிமுகுந்தன் என இரண்டு தாதாக்களின் ஆக்ரோஷமான மோதல் போராட்டம் தான் திகார் படத்தின் ஒற்றை வரிக் கதை.
வழக்கமான கமர்ஷியல் படங்களான என் படைப்புகளில் அம்மா சென்டிமென்ட், தங்கை சென்டிமெண்ட் இருக்கும். ஆனால் முதன் முதலாக திகாரில் அப்பா சென்டிமென்ட்டை வைத்திருக்கிறோம். வழக்கமான என் படங்கள் மாதிரி திகார் இருக்காது. ஏறக்குறைய எட்டு அதிரடியான ஸ்டன்ட் காட்சிகள் தியேட்டரை அதிர வைக்கும். அட்வான்ஸ் டெக்னிகலாக இதை உருவாக்கி இருக்கிறோம். நான் வழக்கமான ஊர்ப்பெயரை வைத்தே படமெடுத்து வருகிறேன். என் கதைகளுக்காக அது யதார்த்தமாக அமைந்து விட்டது. இந்த படத்திற்கு திகார் என்று பெயர் வைத்ததுமே இந்த இசை வெளியீட்டுக்கு திகாரின் பெண் புலி கிரண்பேடி அவர்களை அழைத்தால் சிறப்பாக இருக்கும் என்று யோசித்தோம். அது நிறைவேறி விட்டது. காஞ்சி என்றால் அண்ணா, ஈரோடு என்றார் பெரியார், பசும்பொன் என்றால் முத்துராமலிங்க தேவர், விருதுநகர் என்றால் காமராஜர் அது போல திகார் என்றால் கிரண்பேடி .
அதே மாதிரி இசைத்தகட்டை பெற்றுக்கொள்ள கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி யின் பேரன் சி.வ.சிதம்பரம் அவர்கள் ஒப்புக்கொண்டது எங்களது குழுவுக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி ”என்றார் பேரரசு.