சேரனால் சி2ஹெச்-ல் வெளியிடப்பட்ட ‘ஜே.கே எனும் நண்பனின் வாழ்க்கை’ முதல் நாளில் 10 லட்சம் டி.வி.டிக்கள் விற்பனையாகி சாதனை படைத்திருக்கிறது.
மார்ச் 5-ம் தேதி தமது நீண்ட நாள் திட்டமான சி2ஹெச் திட்டத்தை தொடங்கினார் இயக்குநர் சேரன். திரையரங்குகள் கிடைக்காமல் இருக்கும் படங்களை வீடுகளே அதிகாரபூர்வமாக டி.வி.டிக்களை கொண்டு போய் சேர்ப்பதே சி2ஹெச் திட்டத்தின் நோக்கமாகும்.
இத்திட்டத்தில் முதல் படமாக சேரன் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைப்பில் சர்வானந்த், நித்யா மேனன், சந்தானம் மற்றும் பலர் நடிப்பில் உருவான ‘ஜேகே எனும் நண்பனின் வாழ்க்கை’ வெளியிடப்பட்டது.
முதல் நாளில் மட்டும் 10 லட்சத்துக்கும் அதிகமான டிவிடிக்கள் விற்பனையாகி சாதனை படைத்திருக்கிறது. முதல் படத்துக்கே பெரும் வரவேற்பு கிடைத்திருப்பதால் இயக்குநர் சேரன் பெரும் மகிழ்ச்சியில் இருக்கிறார்.
இயக்குநர் சேரனின் சி2ஹெச் முயற்சிக்கு தயாரிப்பாளர் சங்கம், நடிகர் சங்கம் உள்ளிட்ட திரையுலக சங்கங்கள் ஆதரவு தெரிவிக்கின்றன. ‘ஜே.கே எனும் நண்பனின் வாழ்க்கை’ படத்தைத் தொடர்ந்து ‘அர்ஜுனனின் காதலி’, ‘அப்பாவின் மீசை’, ‘ஆவி குமார்’ உள்ளிட்ட பல படங்கள் சி2ஹெச் மூலம் வெளியாக இருக்கின்றன.