அண்மையில் வெளியான ‘மெட்ரோ’ படம் .படத்தை மெட்ரோ புரொடக்ஷன்ஸுடன் இணைந்து இ5 எண்டர் டெயின்மெண்ட்ஸ் இந்தியா நிறுவனத்தின் ஜெயகிருஷ்ணன் தயாரித்துள்ளார். படம்ப ற்றி பலவித விமர்சனங்கள் இருந்தாலும் வணிக ரீதியில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. அதை முன்னிட்டு ‘மெட்ரோ’ படக்குழு ஊடகங்களை சந்தித்தது.
அப்போது இயக்குநர் ஆனந்த்கிருஷ்ணன் பேசும் போது ” இது ஒரு க்ரைம் த்ரில்லர். க்ரைம் என்ன என்று சொல்லும் போது அது பற்றி விரிவாகச் சொல்லா விட்டால் எடுபடாது. சென்னையில் பல இடங்களில் தனியே செல்லும் பெண்களிடம் செயின் பறிப்பு நடந்து கொண்டே இருக்கிறது. இதைச் செய்பவர்கள் தொழில் முறை திருடர்கள் மட்டுமல்ல எப்போதாவது செய்பவர்களும் உண்டு. இது நம்ப முடியாத செய்திதான். இது பற்றி நாங்கள் தகவல் திரட்டியபோது கிடைத்த உண்மை இது.
பணத் தேவைக்காகவும் காதலிக்கு பணம் செலவழிக்கவும் என்று படித்த இளைஞர்கள் கூட இந்த வேலையைச் செய்கிறார்கள்.
மெட்ரோ படம் செயின் அறுக்கக் கற்றுக் கொடுக்கிறதா?
என்று கேட்கிறார்கள். ஏன் இது பற்றி அறிந்து பெண்கள் விழிப்பாக இருக்கக் கூடாது?. விழிப்புணர்வு என்று பாசிட்டிவாக ஏன் எடுத்துக் கொள்ளக் கூடாது.? பெண்களுக்கு நகை போட உரிமை இல்லையா என்று கேட்சிறார்கள். அது அவர்களின் உரிமை. பாதுகாப்பாக இருங்கள் என்பதுதான் செய்தி.
இது 28 நாளில் எடுத்த படம்.படம் எடுத்து முடித்து விட்டோம். அதை மக்களிடம் கொண்டு சேர்க்கும் மகத்தான பணியை செய்தது ஊடகங்கள்தான். அதற்கு நன்றி .இது வெற்றி சந்திப்பு.
என்பதை விட படக்குழுவுக்கான அங்கீகாரமாக கருதுகிறேன். படத்தில் உள்ள நிறை குறை எல்லாவற்றையும் குறிப்பிட்டு விமர்சித்து இருக்கிறீர்கள். அடுத்த படத்தில் குறைகளை சரி செய்து கொள்வேன். படம் பார்த்து விட்டுணென்னோடு முன் அறிமுகம் இல்லாமலேயே பாராட்டிய ஜி. தனஞ்ஜெயன், விஜய்ஆண்டனி, சிபிராஜ் போன்ற நல்ல உள்ளங்களுக்கு நன்றி.
இவ்வாறு ஆனந்த்கிருஷ்ணன்பே சினார். நிகழ்ச்சியில் படத்தில் நடித்த சிரிஷ், செண்ட் ராயன், நிஷாந்த், சத்யா, மாயா, துளசி ,ஒளிப்பதிவாளர் என் எஸ். உதயகுமார், இசையமைப்பாளர் ஜோகன், படத்தொகுப்பாளர் ரமேஷ்பாரதி மற்றும் படக்குழுவினர் கலந்து கொண்டனர்.