திருவள்ளுவர் கொடுத்த தலைப்பாக நல்ல தமிழில் உருவாகியுள்ள படம் ‘யாகாவாராயினும் நாகாக்க’.
தன் தந்தையின் தயாரிப்பில் அண்ணனின் இயக்கத்தில் ஆதி நடித்துள்ள படம் இது.
கதை:
ஆறடி மனிதன் ஆனாலும் அவனது மரியாதையும் கௌரவமும் அவன் பேசும் பேச்சில்தான் இருக்கிறது.அவனது மூன்று அங்குல நாக்கில் தான் அவனது கௌரவம் இருக்கிறது என்பார்கள்.எதை அடக்கா விட்டாலும் நாவை அடக்க வேண்டும். இப்படம். நடந்த ஓர் உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக்க் கொண்டு உருவாகி வருகிறது.
ஆதி மற்றும் மூன்று நண்பர்களைச் சுற்றியே கதை நிகழ்கிறது.
‘நான்கு வாலிபர்கள், ஓர் இரவு, ஒரு வார்த்தை’தான் கதைக்கரு அப்படி அவர்கள் பேசிய ஒரு வார்த்தை எப்படி அவர்களின் வாழ்க்கையை புரட்டிப் போட்டு திசைமாற்றியது என்பதே கதை.
இயக்குநர்:
படத்தை எழுதி இயக்குபவர் சத்யபிரபாஸ். ஆதியின் அண்ணனான இவர் இந்தியாவில் பிகாம் முடித்துவிட்டு லண்டனில் எம்.பி.ஏ. முடித்தவர்.தமிழில்ஜெயம்ராஜா தெலுங்கில் ஷிவ்குமார் என சில இயக்குநர்களிடம் உதவி இயக்குநராக பணியாற்றியவர். மேலும் சினிமாவைப் பற்றி ஆழமாக அறிந்து கொள்ள அமெரிக்காவில் லாஸ் ஏஞ்சல்லில் அமெரிக்கன் பிலிம் இன்ஸ்டிடியூட்டில் 2 ஆண்டுகள் சினிமா படித்தவர். அங்கு சிறந்த 28 மாணவர்களில் ஒருவராக தேர்வு செய்யப்பட்டு பதக்கமும் பரிசும் பெற்றவர். ஆஸ்கார் விருது விழாவில் மல்ட்டி கல்சரல் மோஷன் பிக்சர்ஸ் அசோசியேஷன் சார்பில் கௌரவிக்கப்பட்டவர்.
முதல் படமாக இதை இயக்கியுள்ளார். ஆதர்ஷ சித்ராலயா சார்பில் ஆதியின் தந்தை ரவிராஜா பினிசெட்டி தயாரிக்கிறார். இவர் தெலுங்கில் சுமார் 60 படங்கள் இயக்கியவர்.
நடிகர்கள்
ஒரு கதையை தயார் செய்துவிட்டு நடிக்க கதைக்கேற்ற ஒருவர் தேடியபோது அகப்பட்டவர்தான் ஆதி.
இது பாசிடிவ் நெகடிவ் இரண்டும் கலந்த பாத்திரம், பிரபல நாயகர்கள் நடிக்கத் தயங்குவார்கள். தன்னைப் பற்றிய இமேஜ் வட்டம் போடாதவர்,தன் மீது எந்த பிம்பமும் விழவிடாதவர் நடிகர்ஆதி.எனவேதான் ஆதியைத் தேர்வு செய்ததாக கூறுகிறார் இயக்குநர். ஆதியுடன் பயணிக்கும் இந்த 3 இளைஞர்களும் தெரிந்தும் தெரியாத முகங்களாக இருந்தவர்கள்.இப்படத்தின் மூலம் கார்த்திக், ஷ்யாம், சித்தார்த் என அந்தமூன்று புது முகங்களும் ஆதியின் மூன்று நண்பர்களாக அழுத்தமாக அறிமுகமாகிறார்கள்.
நிக்கி கல்ராணி, ரிச்சா பலோட் நடித்துள்ளனர்.
நிக்கி கல்ராணி நன்றாகத் தமிழ்பேசியதால் தேர்வாகியுள்ளார்.
இவர்கள் தவிர நரேன், பசுபதி, பிரகதி, கிட்டி, மகாதேவன்,பாண்டியநாடு ஹரிஷ் போன்ற அடர்த்தியான திறமை கொண்ட நடிகர்களும் நடித்து இருக்கிறார்கள். எல்லாவற்றுக்கும் மேலாக பாலிவுட் நடிகர் மிதுன் சக்கரவர்த்தி அறிமுகமாகி நடித்துள்ளார். இருபது நிமிடத்தில் கதை சொல்லி அவரைச் சம்மதிக்க வைத்துள்ளார் இயக்குநர்.
சென்னை, பாண்டிச்சேரி, கோவா, மும்பை, ஹைதராபாத் போன்ற இடங்களில் 111 நாட்கள் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது. பல இடங்களில் பின்புலம் சரியாக அமைய பலமாதங்கள் காத்திருந்து எடுத்துள்ளனர். உதாரணமாக சென்னை காசிமேடு கடற்கரையில் 300க்கும் மேல் இருக்கிற காலம் மீன்பிடி தடைகாலம். அக்காலத்தில்தான் கரையில் நிறைய படகுகள்இருக்கும். அதுவரை காத்திருந்து எடுத்துள்ளனர். அதே போல மும்பையில் பல சுரங்கப் பாதைகளில் ஆயிரம் பேர் துணை நடிகர்களுடன் ஆந்தேரியில்
இரவில் படப்பிடிப்பு நடந்துள்ளது. படத்தில் லொக்கேஷன்களும் அர்த்த முள்ள பாத்திரங்களாக பேசப்படும்.
தொழில் நுட்பக் கலைஞர்கள்
பாடல்களை விடவும் பின்னணி இசை முக்கியம் என்று உணரவைத்துள்ளார்கள்.
முன்னணி முகங்களாக தொழில் நுட்பக்கலைஞர்களை நாடாமல் இது தனக்கு ஒரு வாய்ப்பல்ல வாழ்க்கை என்று என்ணுபவர்ககளை மட்டுமே பயன்படுத்தியுள்ளார் இயக்குநர்.
பட அனுபவம் பற்றி நடிகர் ஆதி பேசும்போது “இது எனக்கு ஆறாவது படம்.நான் படங்களைத் தேர்ந்தேடுத்தே நடிப்பவன். இப்படத்தில் அண்ணனின் இயக்கத்தில் நடித்தது எனக்கு சௌகரியமாக இருந்தது இது வழக்கமான ஹீரோ ஹீரோயின்,வில்லன் பார்முலா கதையல்ல கண்முன் காண்கிற யதார்த்த மனிதர்களின் கதை. மிகைப் படுத்தலோ போலியான பாசாங்கோ இருக்காது. இயல்பு வாழ்க்கைக்கு நெருக்கமான கதையாக இருக்கும். ”என்கிறார்.
படத்தை இயக்கும் சத்ய பிரபாஸ் கூறும் போது.”இது தமிழ் தெலுங்கு என இரண்டு மொழிகளில் தயாராகிறது.
இது ஒரு த்ரில்லர் படம் என்றாலும் ரொமாண்டிக் காமடி, லவ், ப்ரண்ட்ஷிப் எல்லாமே இருக்கும்.
படத்தைப் பற்றி நானே பெரிதாகப் பேசக்கூடாது. ஆனால் படம் பார்த்தவர்கள் இதை பத்தோடு பதினொன்றாக ஒதுக்கி விட முடியாத படமாக இருக்கும் “என்று உத்திரவாதம் தருகிறார்.
முதலில் நினைத்த படத்தை நினைத்த மாதிரி எடுப்பது அதன் பிறகுதான் வியாபாரம் யாருக்கும் எதற்கும் சமரசம் ஆகப் போவதில்லை என்றிருந்துள்ளார் இயக்குநர். அப்படி எடுத்து முடித்து போட்டுக் காட்டிய போது பிடித்து வெளியிட சம்மதித்ததுள்ள நிறுவனம்தான் குளோபல் யுனைட்டட் மீடியா நிறுவனம். இது கேரளாவில் முன்னணி விநியோக நிறுவனமாகும்.
படவெளியீடு ஜூன் 26-ல் நிகழ்கிறது.