யோகி பாபு – நிதின் சத்யா நடித்துள்ள காமெடி திரைப்படம் ” தாதா “
இம்மாதம் 9 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது
Any Time Money பிலிம்ஸ் என்ற படம் நிறுவனம் சார்பில் கின்னஸ் கிஷோர் கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்கியுள்ள படம் தாதா.
இந்த படத்தில் யோகி பாபு, நிதின் சத்யா இருவரும் கதாநாயகர்களாக நடித்துள்ளனர்.
கதாநாயகியாக காயத்ரி நடித்திருக்கிறார் மற்றும் நாசர், மனோபாலா, சிங்கமுத்து, புவனேஸ்வரி, உமா ஆகியோரும் நடித்துள்ளனர்.
ஒளிப்பதிவு – R.H.அசோக்
இசை – கார்த்திக் கிருஷ்ணா
எடிட்டர் – நாகராஜ்
நடனம் – பவர் சிவா
கலை இயக்குநர் – கே கே விஜய கோபால்.
மக்கள் தொடர்பு – மணவை புவன்
தயாரிப்பு – எனி டைம் மணி பிலிம்ஸ்
கதை திரைக்கதை வசனம் இயக்கம் கின்னஸ் கிஷோர்.



படம் பற்றி இயக்குனர் கின்னஸ் கிஷோர் பகிர்ந்தவை…
இது முழுக்க முழுக்க நகைச்சுவையை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள படம். இதில் சத்யா யோகி பாபு நாசர் அவர்கள் கூட்டணியில் காமெடி காட்சிகள் மிகச் சிறப்பாக வந்திருக்கிறது இந்த படத்தில் நாசர் அவர்கள் ஒரு வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் அது மக்களிடையே மிகுந்த வரவேற்பை பெறும்.
படம் இம்மாதம் 9 ம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது என்றார்.