‘துணிவு’ படத்தின் புதிய புகைப்படங்கள்: ரசிகர்கள் உற்சாகம்!

எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘துணிவு’. இப்படத்தில் அஜித்தின் தோற்ற போஸ்டர் சமீபத்தில் வெளியாகி வைரலானது. இந்தப் படம் வங்கிக் கொள்ளையை மையமாக வைத்து தயாராவதாக கூறப்பட்டது.
உண்மைக் கதையில் அஜித் நடித்து வருவதாக தகவல் வெளிவந்தது. புதிய தோற்றத்தில் அஜித் வருகிறார். இதில் மஞ்சுவாரியர், சமுத்திரக்கனி, ஜி.எம்.சுந்தர், மகாநதி சங்கர், ஜான் கொக்கன் ஆகியோர் முக்கியமான பாத்திரங்களில் நடிக்கின்றனர். இப்படத்தின் தமிழ்நாடு வெளியீட்டு உரிமையை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் பெற்றுள்ளது.

இப்படம் 2023-ஆம் ஆண்டு பொங்கலுக்கு வெளியாகவுள்ளது. இதனிடையே அஜித் வெளிநாடுகளுக்குச் சுற்றுலா சென்ற புகைப்படங்கள் வெளியாகி இணையத்தில் பரவிவந்தது. இந்த நிலையில் நடிகர் அஜித்தின் ‘துணிவு’ படத்தின் புதிய புகைப்படங்களைப் படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது. கையில் துப்பாக்கியுடன் அஜித் இருக்கும் புகைப்படங்களுக்கு ரசிகர்கள் லைக்குகளைக் குவித்து வருகின்றனர். மேலும் இந்தப் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.