
ஏவிஎம் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் வழங்கும் கிரீன் மேஜிக் என்டர்டெயின்மென்ட் தயாரிக்கும் அறிமுக நாயகன் ஆர்யன் ஷாம் நடிக்கும் ‘அந்த நாள்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இன்று மாலை வெளியிட்டார்.
கதாநாயகன் ஆரியன் ஷாம் புகழ் பெறவும் ‘ அந்த நாள் ‘ படம் வெற்றி பெறவும் வாழ்த்துக் கூறினார் .அந்த நிகழ்ச்சியில் ஏவி.எம் சரவணன், இயக்குநர் எஸ்.பி முத்துராமன், கதாநாயகன் ஆர்யன் ஷாம், திருமதி அபர்ணா குகன் ஷாம்’ படத்தின் இயக்குநர் வி வீ, ஒளிப்பதிவாளர் சதீஷ் கதிர்வேல் ஆகியோர் கலந்து கொண்டனர். கிரீன் மேஜிக் என்டர்டெயின்மென்ட் சார்பில் ஆர். ரகுநந்தன் தயாரிக்கிறார்.