சூப்பர்ஸ்டார் பத்மவிபூஷன் “ரஜினிகாந்த்” நடிப்பில் வெளிவந்து உலகளவில் மாபெரும் வசூலில் சரித்திரம் படைத்து வெற்றி பெற்ற “கபாலி“ திரைப்படத்தை தொடர்ந்து “ V கிரியேஷன்ஸ்“ கலைப்புலி எஸ் .தாணு மற்றும் “3“, எதிர்நீச்சல் , வேலை இல்லா பட்டதாரி , காக்கிசட்டை , காக்கா முட்டை , மாரி , நானும் ரவுடி தான் , தங்க மகன் , விசாரணை , அம்மா கணக்கு போன்ற பல வெற்றி படங்கள் முலம் பல விருதுகள் மற்றும் பல வசூல் சாதனைகளையும் படைத்த தனது வுண்டர்பார் பட நிறுவனம் மூலம் தனுஷ் இணைந்து முழுமையாக இளைஞர்கள் பட்டாளத்துடன் தயாரிக்கும் புதிய திரைப்படம் “வேலை இல்லா பட்டதாரி – 2“.
தனுஷ் கதாநாயகனாக நடிக்க வேலை இல்லா பட்டதாரி முதல் பாகத்தில் கதாநாயகியாக நடித்த நடிகை அமலாபால் இப்படத்திலும் நடிக்கிறார் மற்றும் பத்ம ஸ்ரீ “ விவேக் , சரண்யா பொன்வண்ணன், பி. சமுத்திரக்கனி, ரிஷிகேஷ் ஆகியோரும் மிக முக்கியமான கதாபாத்திரமேற்று நடிக்கிறார்கள் .இவர்களுடன் இந்திய திரையுலகில் பெரிய ரசிகர் பட்டாளத்தை கொண்ட நடிகையான “கஜோல்” முதன்முறையாக தனுஷ் உடன் இணைந்து நடிக்கிறார்.
நீண்ட இடைவெளிக்கு பிறகு தமிழில் நடிக்கிறார்,. தனுஷ் கதாநாயகனாக நடித்து கதை,வசனம் எழுதும் இப்படத்தை 2014-ஆம் ஆண்டு சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் இந்திய திரையுலகில் “Photo Realistic Motion capture” 3D – என்னும் தொழில் நுட்பத்தை இந்தியாவில் முதன்முறையாக அறிமுகப்படுத்தி “கோச்சடையான்” எனும் படத்தை இயக்கிய சௌந்தர்யா ரஜினிகாந்த் திரைக்கதை எழுதி இயக்குகிறார் .
சமீர் தாஹிர் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்துக்கு ஷான் ரோல்டன் இசையமைக்கிறார். படத்தொகுப்பு – சத்யராஜ், கலை – சதீஷ் குமார், உடை வடிவமைப்பு – பூர்ணிமா, சண்டை பயிற்சி – “அனல்“அரசு, தயாரிப்பு வடிவமைப்பு – அர்விந்த் அசோக் குமார், இணை தயாரிப்பு – D.பரந்தாமன் ,A.K.நட்ராஜ்,
தயாரிப்பு – கலைப்புலி எஸ். தாணு, தனுஷ்.
“வேலை இல்லா பட்டதாரி – 2” திரைப்படத்தின் படபிடிப்பு சென்னையில் இனிதே தொடங்கியது. இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் உருவாகிறது.