இளைய திலகம் பிரபு, வெற்றி, கோமல் குமார்,அறிமுக நாயகி கிருஷ்ண பிரியா ,மன்சூர் அலிகான்,இமான் அண்ணாச்சி,ஆர். வி .உதயகுமார் ஆகியோர் நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் ‘ராஜபுத்திரன்’.இப்படத்தை மகா கந்தன் இயக்கியுள்ளார்.ஆலிவர் டெனி ஒளிப்பதிவு செய்துள்ளார் . மவுஃபுல் ராஜா இசையமைத்துள்ளார்.பாடல்களை வைரமுத்து மற்றும் மோகன் ராஜன் எழுதியுள்ளனர். க்ரசென்ட் சினி கிரியேஷன்ஸ் சார்பில் கே. எம் .சபி தயாரித்துள்ளார்.மே மாதம் 30 ஆம் தேதி வெளியாக இருக்கும் இப்படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா பரணி ஸ்டுடியோவில் நடந்தது.
விழாவில் படக்குழுவினருடன் திரையுலகப் பிரமுகர்கள் நடிகர் பிரபு, கலைப்புலி எஸ்.தாணு, தயாரிப்பாளர் -விநியோகஸ்தர் கே .ராஜன், இயக்குநர் எஸ். . சந்திரசேகரன், நடிகர் மன்சூர் அலிகான், இயக்குநர்கள் வசந்த், பாண்டியராஜன்,நந்தா பெரியசாமி, பேரரசு, திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத் தலைவர் அருள்பதி, , நடிகர் ஆரி, சக்தி ஃபிலிம் ஃபேக்டரி சக்திவேல்,தயாரிப்பாளர் ஜி தனஞ்செயன் உள்ளிட்ட திரையுலகப் பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.