தொழிலதிபரும், நடிகருமான லெஜண்ட் சரவணனின் ‘தி லெஜண்ட்’ திரைப்படம் தற்போது ஒடிடி உலகிலும் நுழைந்திருக்கிறது. டிஸ்னி+ ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் மார்ச் 3 முதல் ஸ்ட்ரீம் கிறது.
விளம்பர படங்களில் நடித்த அருள் சரவணன், பின்னர் வெள்ளித்திரையில் ஹீரோவானார். அவர் நடிப்பில் உருவான ‘தி லெஜண்ட்’ திரைப்படம் சுமார் 600 திரை அரங்குகளில் கடந்த ஆண்டு ஜூலை மாதம் வெளியாகி இருந்தது. படம் வெளியாகி பல நாட்கள் ஆன போதும் படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த அறிவிப்பு வெளியாகாமல் இருந்தது. இந்த சூழலில் இந்தப் படம் மார்ச் 3 முதல் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தளத்தில் ஸ்ட்ரீம் ஆகிறது. தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் மலையாளத்தில் இந்தப் படம் ஸ்ட்ரீம் ஆகிறது.
கடந்த சில நாட்களாக கோலிவுட்டில் பல செய்திகள் தீயாக பரவி வந்தது. அதில் ஒன்று லெஜண்ட் சரவணன் காஷ்மீரில் இருக்கும் புகைப்படங்கள். நடிகர் விஜயின் லியோ படப்பிடிப்பு காஷ்மீரில் நடந்துக்கொண்டிருக்கும் நிலையில், லெஜண்ட் சரவணனும் காஷ்மிரில் இருக்க, அவரும் அந்த படத்தில் நடிக்கிறாரோ! என்று எதிர்பார்க்கப்பட்டு, அது பற்றிய கமெண்ட்கள் சோசியல் மீடியாவில் வைரலானது.


இந்தப் படத்தை ஜே.டி மற்றும் ஜெரி இயக்கி இருந்தனர். அருள் சரவணன், கீதிகா திவாரி, ஊர்வசி ரவுடேலா, விவேக், சுமன், நாசர், பிரபு, விஜயகுமார், லதா, தம்பி ராமையா ஆகியோர் இதில் நடித்துள்ளனர். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார்.
‘தி லெஜண்ட்’ திரைப்படம் தற்போது டிஸ்னி ஹாட்ஸ்டாரில் வெளியான சில மணி நேரங்களில் ரசிகர்களின் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளதாக சொல்லப்படுகிறது.