
நடிகர் விஷாலின் பிறந்த நாளை முன்னிட்டு திருவள்ளூர் மாவட்ட புரட்சி தளபதி விஷால் இளைஞர் அணி சார்பில் “ மாபெரும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா “ இன்று நடைபெற்றது. இவ்விழாவை துவக்கி வைத்து ஏழை எளிய மக்களுக்கு நடிகர் விஷால் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். விழாவிற்கான ஏற்பாடுகளை திருவள்ளூர் மாவட்ட இளைஞர் அணி தலைவர் ப. கண்ணன் செய்திருந்தார்.

சென்னை மாவட்ட புரட்சி நடிகர் தளபதி விஷால் ரசிகர்கள் நற்பணி மன்றம் சார்பில் மாபெரும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவை துவக்கி வைத்து ஏழை எளிய மக்களுக்கு நடிகர் விஷால் நலத்திட்ட உதவிகளை வழங்கினார் இவ்விழா ஏற்பாடுகளை சென்னை மாவட்ட தலைவர் எம். ராபர்ட் செய்திருந்தார்.