கார்த்தி நாயகனாக நடிக்கும் ‘சர்தார் 2’ படத்தின் பூஜை!

கார்த்தி கதாநாயகனாக நடிக்கும் சர்தார் 2 படத்தின் பூஜை, சமீபத்தில் மிக விமரிசையாக நடைபெற்றது. சர்தார் படத்தின் பிரம்மாண்ட வெற்றியைத் தொடர்ந்து, PS மித்ரன் இயக்கத்தில் பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகும் சர்தார் 2 படத்தின் படப்பிடிப்பு, ஜூலை 15 ஆம் தேதி முதல் சென்னையில் துவங்கி நடக்க உள்ளது. மிக பெரிய பொருட் செலவில் தயாராகும் இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசை அமைக்கிறார்.

ஒளிப்பதிவு – ஜார்ஜ் சி வில்லியம்ஸ்.
சண்டை பயிற்சி – திலிப் சுப்பராயன்
கலை இயக்குநர் – ராஜீவன் நம்பியார்
படத்தொகுப்பு – வேலு குட்டி
தயாரிப்பு நிர்வாகம் – AP பால் பாண்டி
இணை தயாரிப்பு – A வெங்கடேஷ்
தயாரிப்பு – S லக்ஷ்மன் குமார்
மக்கள் தொடர்பு
சதீஷ்குமார் (S2 Media)