தமிழ்ச்சினிமாவில் முதல் ஆம்பள விஷால்தான் என்று தயாரிப்பாளர் தடாலடியாகப் பேசினார்.
விஷால் நாயகனாக நடித்துத் தயாரித்துள்ள படம் ‘ஆம்பள’. ஹன்சிகா. வைபவ், சந்தானம், சதிஷ், மதுரிமா, பிரபு, ரம்யா கிருஷ்ணன், துளசி, கௌதம் நடித்துள்ளனர்.
சுந்தர்.சி இயக்கியுள்ளார். ஹிப் ஹாப் தமிழா இசையமைப்பாளராக அறிமுகமாகியுள்ளார்.
‘ஆம்பள’ பாடல்கள் வெளியீட்டு விழா சத்யம் திரையரங்கில் நடைபெற்றது.
இயக்குநர் சுசீந்திரன், தயாரிப்பாளர்அன்புச் செழியன் ஆகியோர் பாடல்களை வெளியிட இயக்குநர் எஸ்.ஏ. சந்திரசேகரனும் ஆர்யாவும் பெற்றுக் கொண்டனர்.
தயாரிப்பாளர் டி.சிவா பேசும் போது
“ஆம்பள’ தலைப்பு யாருக்குப் பொருந்துகிறதோ இல்லையோ நிச்சயம் விஷாலுக்குப் பொருந்தும். திருட்டு விசிடிக்காக தெருவில் இறங்கி தட்டிக் கேட்ட முதல் ஆம்பள அவர்.தமிழ்ச்சினிமாவில் முதல் ஆம்பள விஷால்தான்!வழக்கமான தயாரிப்பாளர்களே படம் எடுக்கப் பயப்படும் காலம் இது .பட்ஜெட் பற்றிக் கவலைப் படாமல் துணிச்சலாகப் படம் எடுக்கும்போது தயாரிப்பாளர்களில் இவர் ஆம்பள.தனக்கு மனதில்பட்ட கருத்துக்ளை பயப்படாமல் சொல்வதிலும் இவர் ஆம்பள ” என்றார்.
மன்சூர்அலிகான் பேசும் போது
” திருட்டு விசிடியை ஒரே நாளில் ஒழித்துக் காட்டுகிறேன். ஜெயிலுக்குப் போகிறவர்கள் என் பின்னால் வாருங்கள், ” என்றவர், விஷாலுக்கு ‘ஆக்ஷன் ஸ்டார்’ பட்டம் வழங்கினார்.
தயாரிப்பாளர் சுபாஷ் சந்திரபோஸ் பேசும் போது
“மீசை வச்சவன் எல்லாம் ஆம்பள இல்லை. நீங்கள் மீசை வைக்கவில்லை என்றாலும் .சொன்ன தேதியில் படத்தை அறிவித்து வெளியிடும் நீங்கள் ஆம்பளதான். சுந்தர்.சி இன்னொரு ஆம்பள.இருவருக்கும் வாழ்த்துக்கள். “என்றார். .
இயக்குநர் ஆர்.கே.செல்வமணி பேசும் போது,
” திருட்டு விசிடிக்காக ரோட்டில் இறங்கிப் போராடி அடித்த விஷால் முதல் ஆம்பள. திருட்டு விசிடியை எதிர்க்கும் உணர்வை தந்திருக்கும் விஷால் நிஜ ஆம்பள. “என்றார்.
இயக்குநர் எஸ்.ஏ. சந்திரசேகரன்
“நாங்கள் முன்பெல்லாம் பூஜையன்றே ரிலீஸ் தேதி அறிவித்துவிட்டுத்தான் படம் வெளியிடுவோம்.பல ஆண்டுகளுக்குப்பின் இன்று விஷால் செய்கிறார் வாழ்த்துக்கள்.” என்றார்.
ஆர்யா பேசும் போது
” விஷாலிடம் என்ன மச்சான் படம் எப்போ வெளியாகிறது என்றேன். பொங்கலுக்கு என்றார் .பொங்கலுக்கு என்றால் பெரிய படங்கள் வருமேப்பா என்றேன்.
எவன் இருந்தாலும் வெட்டுவேன் என்றார். விஷாலின் அந்த நம்பிக்கை எனக்குப் பிடித்தது.”என்றார்.
‘ஆம்பள’ இயக்கியுள்ள சுந்தர்.சி பேசும்போது.” இது ஒரு பேமிலி எண்டர் டெய்னர். படமே திருவிழா போன்ற உணர்வு தரும். நான் வேகமாக ஓடுபவன். என்னையே விரட்டி விரட்டி வேலை வாங்கியவர் விஷால்.” என்றார்.
நிகழ்ச்சியில் நடிகர்கள் விஷால், வைபவ் ரெட்டி, சதிஷ், நடிகைகள் குஷ்பூ, ஹன்சிகா, இயக்குநர்கள் சுசீந்திரன், திரு, தயாரிப்பாளர்கள் அன்புச்செழியன், முருகராஜ், கே.ஈ ஞானவேல்ராஜா இசையமைப்பாளர் ஹிப் ஹாப் தமிழா ஆதி ஆகியோரும் பேசினார்கள்.