
போஸ்டரில் இடம்பெற்றுள்ள பலூன்கள் சுமந்த குழந்தை, கோப்புகளை வைத்திருக்கும் ஒரு மனிதர் , சுயநினைவற்ற தரையில் சரிந்து கிடக்கும் ஒரு பெண்மணி, ஒரு சைக்கிள்காரர் போன்று அப்போஸ்டரில் இடம்பெற்றுள்ள மனிதர்கள் பலரையும் நோசிக்கவைத்துள்ளது.அவை பல கேள்விகளையும் புதிர்களையும் அதிர்வலையையும் ஏற்படுத்தியுள்ளன.
கபாலி படத்தில் நடித்த லிஜேஷ் இதில் பிரதான பாத்திரம் ஏற்று நடிக்கிறார். இவர் லிங்கா, சேதுபதி ,சிந்துபாத் போன்ற படங்களிலும் நடித்தவர்.
மற்ற கலைஞர்கள் விவரம் விரைவில் வெளியாகும் .
சினிமா மீது தீவிர மோகத்தையும் யதார்த்த சினிமா மீது காதலையும் கொண்டு உள்ளவர்கள் சிலரில் பாவலும் ஒருவர். அவரது இப்படத்தையும் இயல்புத் தன்மை மாறாத ஒரு பரபரப்பான படமாக எதிர்பார்க்கலாம்.