7ஸ்க்ரீன் ஸ்டுடியோவின் அடுத்தடுத்த அசத்தல் படங்கள்!

தமிழ்சினிமாவின் மிகப்பிரம்மாண்டமான தயாரிப்பு நிறுனமான 7 ஸ்க்ரீன் ஸ்டுடியோ தங்கள் நிறுவனத்தின்  படங்களின் புதிய அண்மைத் தகவல்களை தெரிவித்துள்ளது இந்தியளவில் அதிக எதிர்பார்ப்பில் இருக்கும் படமான  விஜய் மற்றும் விஜய்சேதுபதி  இணைந்து நடித்துள்ள ‘மாஸ்டர்’ படத்தின் போஸ்ட் புரொடக்சன் வேலைகள் ஆரம்பமாகியுள்ளது. …

7ஸ்க்ரீன் ஸ்டுடியோவின் அடுத்தடுத்த அசத்தல் படங்கள்! Read More

அமேசான்பிரைம் வெளியிட்ட ‘பொன்மகள்வந்தாள்’ டிரெய்லர்!

பெரிதும்எதிர்பார்க்கப்படும் ‘பொன்மகள்வந்தாள்’ திரைப்படத்தின்டிரெய்லரை அமேசான்பிரைம்வீடியோ வெளியிட்டுள்ளது. பரபரப்பான இந்த திரைப்படம் பிரைம் வீடியோவில் உலகளாவிய அளவில் நேரடியாக வெளியாகும் முதல் தமிழ்த் திரைப்படமாகும். 2D எண்டர்டெயின்மெண்டால் தயாரிக்கப்பட்டுள்ள ‘பொன்மகள் வந்தாள்’ திரைப்படத்தில், ஜோதிகா, பார்த்திபன், K.பாக்யராஜ், தியாகராஜன், பிரதாப் போத்தன் மற்றும் பாண்டியராஜன் ஆகியோர் நடித்துள்ளனர். 200 நாடுகளில், பிரைம் வீடியோ வழியாக பிரத்தியேகமாக வெளியாகவுள்ள இத்திரைப்படத்தை ஜே.ஜே.ப்ரட்ரிக் இயக்கியுள்ளார். இப்படம் மே 29ஆம் தேதி முதல் அமேசான் ப்ரைமில் வெளியாகிறது. சமீபத்திய மற்றும் பிரத்தியேக திரைப்படங்கள், தொலைகாட்சி நிகழ்ச்சிகள், ஸ்டாண்ட்-அப் காமெடி, பிரைம் ஒரிஜினல் சீரீஸ் ஆகியவற்றின் அன்லிமிடெட் ஸ்ட்ரீமிங், அமேசான் பிரைம் மியூசிக் வழியாக விளம்பரம் அற்ற இசை, இந்தியாவின் மிகப்பெரிய தயாரிப்புகள் தொகுப்பிற்கான இலவச துரித டெலிவரி, முதன்மையான டீல்களுக்கான முன்கூட்டிய அணுகும் வசதி, பிரைம் ரீடிங் வழியாக அன்லிமிடெட் ரீடிங் போன்ற அற்புதமான மதிப்புமிக்க வசதிகளை பிரதி மாதம் வெறும் ₹129 கட்டணத்தில் பிரைம் வழங்குகிறது. அமேசான் பிரைம் வீடியோ இன்று மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ‘பொன்மகள் வந்தாள்’ திரைப்படத்தின் டிரெய்லரை வெளியிட்டுள்ளது. இது நேர்மையான ஒரு வழக்கறிஞர்  தவறாக தண்டிக்கப்பட்ட ஒரு அப்பாவி பெண்ணை விடுவிக்க முயற்சிக்கும் கதையாகும். 2D என்டர்டெயின்மென்ட் தயாரித்துள்ள இந்த சட்ட நாடகப் படத்தில், ஜோதிகா, பார்த்திபன், K.பாக்யராஜ், தியாகராஜன், பிரதாப் போத்தன் மற்றும் பாண்டியராஜன் ஆகியோர் உட்பட பல்வேறு ஆற்றல் மிக்க நடிகர்கள் உள்ளனர். அமேசான் பிரைம் வீடியோவில் நேரடியாக உலகளவில் திரையிடப்படவுள்ள முதல் தமிழ் படமாகத் திகழவுள்ள ‘பொன்மகள் வந்தாள்’, பிரைம் உறுப்பினர்களுக்கு மே 29 முதல் 200 க்கும் மேற்பட்ட நாடுகள் மற்றும் பிரதேசங்களில் வெளியாகவுள்ளது. இந்தப் படத்தின் கதை என்னவென்றால், 2004-ம் ஆண்டு முடிக்கப்பட்ட ஒரு வழக்கை மீண்டும் தொடங்குகிறார் ஊட்டியில் வசிக்கும் ‘பெட்டிஷன்’ பெதுராஜ். அவரது மகளான வெண்பா ஒரு ஆர்வமுள்ள வழக்கறிஞர்.  உண்மையை வெளிப்படுத்த அனைத்து நெளிவுசுளிவுகளிலும் பயணிக்கும் திறன் கொண்டவரான அவர் அந்த வழக்கின் உண்மையைக் கண்டறிகிறார். பொய்யாக ஜோடிக்கப்பட்ட அந்த வழக்கில், அனைத்து சவால்களையும் கடந்து, புத்திசாலித்தனமாக எவ்வாறு வாதாடுகிறார் என்பதே இப்படத்தின் திரைக்கதை.  ஜோதி நிரபராதி என்பதை வெண்பா நிரூபித்தாரா என்னும் பரபரப்பான இறுதிக்காட்சிகளை பிரைம் வீடியோ நேயர்கள் கண்டு களிக்கலாம். இது குறித்து அமேசான் பிரைம் வீடியோவின் உள்ளடக்க இயக்குநரான விஜய் சுப்பிரமணியம் கூறியுள்ளதாவது: “அமேசான் பிரைம் வீடியோவில் பிரத்தியேகமாக ‘பொன்மகள் வந்தாள்’ திரைப்படத்தை வெளியிடுவதில் மகிழ்ச்சியடைகிறோம், எங்கள் பார்வையாளர்களுக்கு இன்னொரு உயர்தர திரைப்படத்தை காண்பிப்பதிலும் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். இத்திரைப்படத்தை உலகாளவிய அளவில் 200க்கும் அதிகமான நாடுகளுக்கு கொண்டுசெல்வதன் மூலம் தமிழ்சினிமாவின் இந்த  இதுபோன்ற உலகளாவிய திரைப்படத் திரையிடல்கள் மூலம், எங்களுடைய வாடிக்கையாளர்களுக்கு அவர்களின் வசதிக்கேற்ப எப்போதும், எங்கேயும் பார்க்கும்படி தொடர்ந்து சிறப்பான திரைப்பட அனுபவங்களை தருகிறோம். இவ்வாறு விஜய் சுப்பிரமணியம் கூறியுள்ளார். இது குறித்து 2D என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் இணை தயாரிப்பாளரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான ராஜசேகர் கற்பூர சுந்தரபாண்டியன் கூறியுள்ளதாவது: “‘பொன்மகள் வந்தாள்’ வெளியீட்டிற்காக அமேசான் பிரைம் வீடியோவுடன் இணைவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம், இதன் மூலம் தமிழ் சினிமா ரசிகர்கள் இந்த அற்புதமான திரைப்படத்தை இந்தியாவிலும், உலகெங்கிலும் இருந்து பார்த்து ரசிக்க முடியும். தமிழ்மொழியில் பரபரப்பாக எழுதப்பட்டுள்ள இத்திரைப்படம், பார்வையாளர்களை தங்கள் இருக்கையின் விளிம்பிற்கு கொண்டுவரக்கூடிய அளவிற்கு உருவாக்கப்பட்டுள்ளது. ‘பொன்மகள் வந்தாள்’ மிகவும் எதிர்பார்க்கப்படும் திரைப்படம் ஆகும். படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கிற்கு, அற்புதமான வரவேற்பு கிடைத்தது, தொடர்ந்து பலரும் படம் குறித்த மேலும் தகவல்களை வெளியிடுமாறு பலரும் கோரிக்கை விடுத்தனர். இந்த படத்தை உலகளாவிய பார்வையாளர்களிடம் கொண்டு செல்வதற்கும், பார்வையாளர்களுக்கு தமிழ் சினிமாவின் சிறந்ததொரு படைப்பை வெளியிடும் நாளையும் நாங்கள் ஆவலோடு எதிர்நோக்கிக் காத்திருக்கிறோம்” என்றும் கூறினார். ‘பொன்மகள் வந்தாள்’ திரைப்படம், ஜோதிகா மற்றும் சூர்யாவின்  2D என்டர்டெயின்மென்ட்  நிறுவனத்தின் தயாரிப்பு ஆகும். சூரியா சிவகுமார் இப்படத்தை தயாரித்துள்ளார்.  ஜே.ஜே.ப்ரட்ரிக் இப்படத்தை இயக்கியுள்ளார். ‘பொன்மகள் வந்தாள்’ பிரைம் வீடியோ பட்டியலில் உள்ள, பல்வேறு தொலைகாட்சி நிகழ்ச்சிகள் மற்றும் ஹாலிவுட் மற்றும் பாலிவுட்டின் சமீபத்திய மற்றும் பிரத்தியேக திரைப்படங்களுடன் இணைந்துள்ளது. இதில்,  Paatal Lok, The Family Man, Four More …

அமேசான்பிரைம் வெளியிட்ட ‘பொன்மகள்வந்தாள்’ டிரெய்லர்! Read More

‘பொன்மகள் வந்தாள்’ கதை என் மனதுக்கு மிகவும் நெருக்கமானது: ஜோதிகா!

ஜே. ஜே .ப்ரட்ரிக் இயக்கத்தில் ஜோதிகா, பாக்யராஜ், பார்த்திபன், பாண்டியராஜன், தியாகராஜன், பிரதாப் போத்தன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘பொன்மகள் வந்தாள்’. 2டி நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படம் இந்திய திரையுலகில் ஓடிடி தளத்தில் வெளியாகும் முதல் படமாக அமைந்துள்ளது. …

‘பொன்மகள் வந்தாள்’ கதை என் மனதுக்கு மிகவும் நெருக்கமானது: ஜோதிகா! Read More

சிதறிப்போன தன் வாழ்வை மீட்கும் ‘நான்தான் சிவா’: இயக்குநர் ஆர்.பன்னீர்செல்வம்!

‘ரேணிகுண்டா’ மூலம் இயக்குநராக அறிமுகமானவர் இயக்குநர் ஆர்.பன்னீர்செல்வம். இதையடுத்து ’18 வயசு’ மற்றும் விஜயசேதுபதி நடித்த ‘கருப்பன்’ போன்ற படங்களை இயக்கினார். தற்போது, என்.லிங்குசாமி வழங்கும் ‘நான்தான் சிவா’ என்ற படத்தை இயக்கி வருகிறார். அப்படத்தைப் பற்றி அவர் கூறியதாவது : …

சிதறிப்போன தன் வாழ்வை மீட்கும் ‘நான்தான் சிவா’: இயக்குநர் ஆர்.பன்னீர்செல்வம்! Read More

ராதிகா, குஷ்பு, ஊர்வசி, சுகாசினி நடிப்பில் ஜேம்ஸ் வசந்தன் இசையமைத்து, இயக்கும் ‘ஓ அந்த நாட்கள்’ !

மிராக்கிள் எண்டர்டைன்மென்ட் தயாரிப்பில் இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் எழுதி, இசையமைத்து, இயக்கும் ரொமாண்டிக் காமெடி ‘ஓ அந்த நாட்கள்’ மும்மொழி திரைப்படத்தில், 1980’களின் நட்சத்திர நாயகிகள் ராதிகா, குஷ்பு, ஊர்வசி, சுகாசினி!! மிராக்கிள் எண்டர்டைன்மென்ட் தயாரிப்பில் ‘ஓ அந்த நாட்கள்’ எனும் …

ராதிகா, குஷ்பு, ஊர்வசி, சுகாசினி நடிப்பில் ஜேம்ஸ் வசந்தன் இசையமைத்து, இயக்கும் ‘ஓ அந்த நாட்கள்’ ! Read More

மே 29-ல் ‘பொன்மகள் வந்தாள்’அமேசான் ப்ரைமில் வெளியாகிறது!

2டி எண்டெர்டெயின்மெண்ட் சார்பில் நடிகை ஜோதிகாவும் நடிகர் சூர்யாவும் இனணந்து தயாரித்துள்ள “பொன்மகள் வந்தாள்” படம் வரும் மே 29-ஆம் தேதி அமேசான் ப்ரைமில் வெளியாக இருக்கிறது. இப்படத்தில் கதையின் நாயகியாக ஜோதிகா நடிக்க, கே.பாக்கியராஜ், ஆர்.பார்த்திபன், பிரதாப் போத்தன், பாண்டியராஜன், …

மே 29-ல் ‘பொன்மகள் வந்தாள்’அமேசான் ப்ரைமில் வெளியாகிறது! Read More

நிஜ கதாநாயகர்களான காவல் துறையினரிடம் ஆட்டோகிராப் வாங்கிய நடிகர் சூரி!

கொரோனா வைரஸ் பரவலிலிருந்து மக்களைக் காக்கும் காவல் துறையினருக்கு நன்றி சொல்ல நடிகர் சூரி இன்று திருவல்லிக்கேணி, வாலாஜா சாலையில் உள்ள D1 காவல் நிலையத்திற்கு வருகை தந்திருந்தார்.“கொரோனா வைரஸ் பரவலால் உலகமே பயந்து கொண்டிருக்கும் இந்த வேலையில்,கொரோனா வைரஸ் பரவலிலிருந்து …

நிஜ கதாநாயகர்களான காவல் துறையினரிடம் ஆட்டோகிராப் வாங்கிய நடிகர் சூரி! Read More

தூணிலுமிருக்கும் துரும்பிலுமிருக்கும்:வைரமுத்து கொரோனா கவிதை!

தூணிலுமிருக்கும்துரும்பிலுமிருக்கும்                       – கவிப்பேரரசு வைரமுத்து கவிதை! ஞாலமளந்த ஞானிகளும்சொல்பழுத்த கவிகளும்சொல்லிக் கேட்கவில்லை நீங்கள் கொரோனா சொன்னதும்குத்தவைத்துக் கேட்கிறீர்கள். உலகச் சுவாசத்தைக் கெளவிப்பிடிக்கும்இந்தத் தொண்டைக்குழி நண்டுக்குநுரையீரல்தான் நொறுக்குத் தீனி …

தூணிலுமிருக்கும் துரும்பிலுமிருக்கும்:வைரமுத்து கொரோனா கவிதை! Read More

வெகுண்டெழு தமிழகமே: கமல் ஆவேசம்!

வெகுண்டெழு தமிழகமே: கமல் அறிக்கை! தமிழர்காள் வணக்கம்.ஒரு வைரஸ் கிருமிக்கு இருக்கும் உயிர் வாழும் ஆசை கூட, தமிழ்நாட்டு மக்களுக்கு இருக்காது என திண்ணமாக நம்பும் ஒரு அரசு நமக்கு வாய்த்தது ஏன்? ஓட்டுக்கு காசு வாங்கி, 5 வருடம்  நம் வாழ்வை …

வெகுண்டெழு தமிழகமே: கமல் ஆவேசம்! Read More

கட்டில் திரைப்படக்குழு நடத்தும்கொரோனா விழிப்புணர்வு நடனப்போட்டிகள் பரிசு ரூ.50,000 !

கட்டில் திரைப்படக்குழு நடத்தும் “ஆடல் பாடல் கட்டில்”  சிறுவர்களுக்கான கொரோனா விழிப்புணர்வு நடனப்போட்டிரூ.50.000  பரிசுத்தொகைநமது மத்திய,மாநில அரசுகள் கொரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து, மக்களை மீட்க போர்க்கால நடவடிக்கை எடுத்து வரும் நிலையில் , வீட்டில் தனித்து இருப்பவர்களுக்காக மேப்பிள் லீஃப்ஸ் புரொடக்சன்ஸ் தயாரித்துள்ள …

கட்டில் திரைப்படக்குழு நடத்தும்கொரோனா விழிப்புணர்வு நடனப்போட்டிகள் பரிசு ரூ.50,000 ! Read More