‘தாய் கிழவி’ விமர்சனம்

ராதிகா சரத்குமார், சிங்கம் புலி, பாலசரவணன், அருள்தாஸ், முனீஷ்காந்த், இளவரசு , ரேச்சல், வேட்டை முத்துக்குமார் , ஜார்ஜ் மரியான் மற்றும் பலர் நடித்துள்ளனர். சிவகுமார் முருகேசன் இயக்கி உள்ளார் .நிவாஸ் கே. பிரசன்னா இசையமைத்துள்ளார். ஒளிப்பதிவு -விவேக் விஜயகுமார் . …

‘தாய் கிழவி’ விமர்சனம் Read More

எம். ஆர். ராதா மகள் என்பதை நிரூபித்திருக்கிறேன்: ‘தாய் கிழவி’ ராதிகா !

பேஷன் ஸ்டுடியோஸ் மற்றும் சிவகார்த்திகேயன் புரொடக்‌ஷன்ஸ் இணைந்து தயாரித்திருக்க, அறிமுக இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்கத்தில் நடிகை ராதிகா நடிப்பில் உருவாகியுள்ள ‘தாய் கிழவி’ படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்வு இன்று நடைபெற்றது. நிகழ்வில் கலந்து கொண்ட சிவகார்த்திகேயன் புரொடக்‌ஷன்ஸ் கலை, …

எம். ஆர். ராதா மகள் என்பதை நிரூபித்திருக்கிறேன்: ‘தாய் கிழவி’ ராதிகா ! Read More

‘தி ப்ரூஃப் ‘ ( THE PROOF) திரைப்பட இசை வெளியீட்டு விழா !

கோல்டன் ஸ்டுடியோஸ் சார்பில் தயாரிப்பாளர் கோமதி தயாரிப்பில் நடன இயக்குநர் ராதிகா இயக்குநராகக் களமிறங்கியுள்ள திரைப்படம் தி ப்ரூஃப் THE PROOF. மாறுபட்ட களத்தில் பெண்கள் பாதுகாப்பை மையப்படுத்தி சமூக அக்கறையுடன், கமர்ஷியல் படைப்பாக உருவாகியுள்ள இப்படத்தில் சாய் தன்ஷிகா முதன்மைப் …

‘தி ப்ரூஃப் ‘ ( THE PROOF) திரைப்பட இசை வெளியீட்டு விழா ! Read More

தினமும் பரிசு மழை, பார்வையாளர்களும் Voot app மூலம் பங்கேற்கும் வாய்ப்பு!

சென்னை, 14 டிசம்பர், 2019: டிசம்பர் 23 ம் தேதி இரவு 8 மணிக்கு கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் நடிகை ராதிகா தொகுத்து வழங்கும் கோடீஸ்வரி கேம் ஷோ நிகழ்ச்சி துவங்குகிறது. தங்களை பற்றி மட்டுமல்லாமல் எப்போதும் தங்களது அன்பிற்குரியவர்களை பற்றி கனவு காண்பவர்கள் பெண்கள். அவர்களின் கனவுகளுக்கு இறக்கை கட்டி அவர்களை பறக்க செய்யும் நோக்கமாக, உலக அளவில் மிகவும் பிரபலமான ஒரு கேம் ஷோவை பெண்களுக்கு மட்டுமே பிரத்யேகமாக கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியும், ஸ்டூடியோ நெக்ஸ்ட் நிறுவனமும் அர்ப்பணிப்பதில் பெருமை கொள்கிறது. எப்போதும் திரை ரசிகர்களின் மனம் கவர்ந்த ராதிகா சரத்குமார், கோடீஸ்வரி நிகழ்ச்சியை தொகுத்தும், ஒருங்கிணைத்தும் வழங்குகிறார். நிப்பான் பெயிண்ட்ஸ், அருண் எக்ஸ்செல்லோ, கோடக் மகேந்திரா வங்கி மற்றும் தமிழ் மேட்ரீமோனி ஆப் ஆகியவை இந்த நிகழ்ச்சியின் விளம்பர பார்ட்னர்களாக தங்களை இணைத்து கொண்டுள்ளன. டிசம்பர் 23 ம் தேதி இரவு 8 மணிக்கு இந்த நிகழ்ச்சி கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிறது. மண்டல பொழுதுபோக்கு பரிவான Viacom18 பிளாட்பார்ம் ஆன VOOT ஆப் மூலமும் கோடீஸ்வரி நிகழ்ச்சியை கண்டுகளிக்கலாம். இதுதொடர்பாக மண்டல பொழுதுபோக்கு பிரிவான Viacom18 தலைவர் ரவீஸ் குமார் கூறும்போது, திரைப்படம், கலை, தொலைக்காட்சி போன்றவற்றிற்கான புரட்சிகரமான கருத்தாக்கங்களை உள்ளடக்கியது தமிழ் சந்தையாகும். கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சி துவக்கப்பட்டதில் இருந்தே புதுமையானவற்றை நாங்கள் சொல்லும் விதத்தில் மக்களிடம் கொண்டுபோய் சேர்க்கிறோம். ‘யாருக்கு கோடீஸ்வரராக விருப்பம்?’ என்ற உலகின் மிகவும் வெற்றிகரமான முதல் நிகழ்ச்சியை கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சி பெண்களுக்காக பிரத்யேக நிகழ்ச்சியாக ஒளிபரப்புகிறது. ஏனென்றால், தனக்காக மட்டுமல்லாமல் பிறருக்காகவும் வாழும் பெண்களுக்காகவே இந்த நிகழ்ச்சியை வழங்குகிறோம் என்றார். ஒரு பயன்மிக்க தொலைக்காட்சி நிகழ்ச்சியை நடத்துவது குறித்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்திய கலர்ஸ் தொலைக்காட்சியின் வர்த்தக தலைவர் அனுப் சந்திரசேகரன் கூறும்போது, பெண்களானவர்கள் அறிவாளிகள், விழிப்புணர்வு கொண்டவர்கள், ஸ்மார்ட்டானவர்கள் என்பதை உணர்த்தும் விதமாக அவர்களுக்கு அதிகாரம் அளிக்கும் ஒரு நிகழ்ச்சியை பரிட்சார்த்த முறையில் நடத்துவது எங்களுக்கு மிகந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. மிக அதிக அளவிலான தமிழ் பேசும் பெண்கள் நாடு முழுவதும் இருந்து இந்த நிகழ்ச்சியில் பங்கெடுத்துள்ளனர். அவர்களின் வாழ்க்கை கதைகள் அவர்கள் சொந்த அனுபவத்துடன் கூடிய வீரதீரமிக்கதாக உள்ளது. விளையாட்டை நடத்தும் முறையில் எந்த மாற்றமும் செய்யப்படாத நிலையிலும், எங்களின் முயற்சியானது பெண்கள் சவால்களை எதிர்கொண்டு வெற்றியை கைப்பற்றுவதே நோக்கமாகும். புரவலர், நண்பர், வழிகாட்டியாக செயல்படும், மிக பிரபலமான சூப்பர் ஸ்டார் நடிகையான ராதிகா சரத்குமாருடன் நாங்கள் பயணிப்பதில் மகிழ்ச்சி அடைகிறோம் என்றார். பார்வையாளர்கள் மத்தியில் மிக பிரபலமடைந்துள்ள இந்த நிகழ்ச்சியை நடத்தும் மற்றும் தொகுத்து வழங்கும் ராதிகா சரத்குமார், போட்டியாளர்களிடம் 15 கேள்விகளை கேட்பார். அந்த கேள்விகளுக்கு ரூ.1000 த்திலிருந்து ரூ.1 கோடி வரை பரிசாக கிடைக்கும். போட்டியாளர் அனைத்து 15 கேள்விகளுக்கும் வெற்றிகரமாக சரியான பதிலை அளித்துவிட்டால் அவருக்கு ரூ.1 கோடி பரிசு வழங்கப்படும். விளையாடிக்கொண்டிருக்கும்போது போட்டியாளர்கள் 50:50, ஆடியன்ஸ் போல் (பார்வையாளர்களை உதவிக்கு அழைத்தல்), ஆஸ்க் தி எக்ஸ்பெர்ட்( நிபுணர்களிடம் கேட்டு பதில் அளித்தல்), பிளிப் (சில பதில்களில் ஒன்றை தேர்ந்தெடுத்தல்) ஆகிய 4 விதமான ஹெல்ப் லைன் வசதிகளை பயன்படுத்திக் கொள்ளலாம். இந்த நிகழ்ச்சியை ஒருங்கிணைத்து நடத்தும் ராதிகா சரத்குமார் பல்வேறு மொழிகளில் 300க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்தவர். இந்த நிகழ்ச்சி குறித்து அவர் கூறும்போது, ஒரு சாதாரண பெண்ணை கோடீஸ்வரி ஆக்குவது என்ற எண்ணமே மகிழ்ச்சியை அளிக்கிறது. நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு நான் அறிமுகமானபோது எனது இதயத்திலும் கூட கனவுகளும், சிறிய ஆசைகளும் இருந்தன. எனது வேலையை சரிவர நிறைவேற்றியபோது ஆண்டுகள் செல்ல செல்ல அவை வளர்ந்து கொண்டே இருந்தன. என்னிடம் இருந்த அதே நோக்கத்தையே இந்த போட்டியில் பங்கேற்பவர்களிடமும் பார்க்கிறேன் என்றார். கோடீஸ்வரி நிகழ்ச்சியை தயாரிப்பது ஸ்டூடியோ நெக்ஸ்ட் ஆகும். இது சோனி பிக்சர்ஸ் நெட்வொர்க் நிறுவனத்தின் தயாரிப்பு பிரிவாகும். இந்த நிகழ்ச்சி தொடர்பான இந்தியாவில் உள்ள அனைத்து மொழிகளுக்கான லைசன்சை இந்த நிறுவனம் தன்னகத்தே கொண்டுள்ளது. சுமார் 9 மொழிகளில் 1,800 அதிகமான எபிசோட்களை தயாரித்து ஒளிபரப்பியுள்ளது. இந்த நிகழ்ச்சி தொடர்பான ஸ்டூடியோ நெக்ஸ்ட் தலைவர் இந்திராணி சக்கரபர்த்தி கூறும்போது, இந்த நிகழ்ச்சியில் பேசிய ஸ்டூடியோ நெக்ஸ்ட் தலைவர் இந்திராணி சக்கரவர்த்தி கூறும்போது, இந்த ஆண்டு பல்வேறு மொழிகளில் இந்த முத்தாய்ப்பான நிகழ்ச்சியை ஒளிபரப்பும் முழுபொறுப்பும் ஸ்டூடியோ நெக்ஸ்ட் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது, 2019 ம் ஆண்டு துவக்கப்பட்ட 6 நிகழ்ச்சியில் தமிழும் ஒன்று. இந்த கேம் ஷோ பல ஆண்டுகளாக நடத்தப்பட்டு வரும் நிலையில், கோடீஸ்வரி நிகழ்ச்சி மூலம் முதல் முறையாக அனைத்து போட்டியாளர்களும் பெண்களாக பங்கேற்கிறார்கள். போட்டியாளராக முன் இருக்கையில் அமரும் மிக சிறந்த வாய்ப்பை இந்த சீசன் அனைத்து பெண்களுக்கும் வழங்குகிறது என்றார். வூட்(VOOT) ஆப் மூலம் பார்வையாளர்கள் கலர்ஸ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் கோடீஸ்…

தினமும் பரிசு மழை, பார்வையாளர்களும் Voot app மூலம் பங்கேற்கும் வாய்ப்பு! Read More

ராதிகா சரத்குமாருக்கு அமிதாப் வாழ்த்து!

பாலிவுட்டின் முடிசூடா மன்னனாகத் திகழும் அமிதாப் பச்சன், தென்னிந்திய மக்களின் அபிமானத்தைப் பெற்று திரைப்படங்களிலும், சின்னத்திரை நிகழ்ச்சிகளிலும் முத்திரை பதித்திருக்கும் நடிகையான ராதிகா சரத்குமாருக்கு தனது பாராட்டுதலையும், வாழ்த்துக்களையும் தெரிவித்திருக்கிறார். 2019, டிசம்பர் மாதத்திலிருந்து கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில்   ஒளிபரப்பாகவிருக்கும் “கோடீஸ்வரி” என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதன் மூலம், சின்னத்திரையில் ஒரு பெரும்புயலை உருவாக்கியிருப்பதற்காகவே , அமிதாப் இந்த பாராட்டுதல்களை ராதிகா சரத்குமாருடன் பகிர்ந்து கொண்டிருக்கிறார்.பெண்கள் மட்டுமே கலந்து கொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்ட முழுமுதற் நிகழ்ச்சி  என்ற பெருமையினை கோடீஸ்வரி பெறுகிறது. தங்களது  அறிவையும், விவேகத்தையும் வெளிப்படுத்துவதற்கு பெண்களுக்கு ஒரு செயல்தள மேடையை வழங்குவதற்காக, ராதிகா சரத்குமாருக்கு பாலிவுட் சூப்பர்ஸ்டார் தன் வாழ்த்துக்களை அனுப்பியிருக்கிறார். இந்தப் போட்டியில் கலந்துகொண்டு ரூ.1 கோடி என்ற ஜாக்பாட் பரிசை வெல்வதற்கான, வாழ்நாளில் ஒருமுறையே கிடைக்கக்கூடிய அற்புதமான வாய்ப்பை, இதில் பங்கேற்கும் பெண்கள் பெறுகின்றனர்! அமிதாப் பச்சன் தனது வாழ்த்துச் செய்தியில், “ராதிகா ஜி, கோடீஸ்வரி நிகழ்ச்சியில் தொகுப்பாளினியாக இப்பயணத்தை நீங்கள் தொடங்குகின்றபோது, தேசியஅளவிலும் மற்றும் சர்வதேச அளவிலும் வரலாற்றில் முதன்முறையாக கேபிசி நிகழ்ச்சியின் போட்டியாளர்களாக பங்கேற்கும் அனைவரும் பெண்களாக இருக்கப்போவதால், உங்களை நான் கண்டிப்பாக வாழ்த்தி பாராட்ட வேண்டும். இதுவொரு தனித்துவமான நிகழ்வாக இருப்பதோடல்லாமல், பெண்களை மிகவும் ஊக்குவிப்பதாக, உத்வேகமளிப்பதாக மற்றும் நம்பிக்கையூட்டுவதாக இருக்கிறது. உங்களுக்கும், இப்போட்டியில் பங்கேற்கும் போட்டியாளர்களுக்கும் எனது மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்,” என்று குறிப்பிட்டிருக்கிறார்.

ராதிகா சரத்குமாருக்கு அமிதாப் வாழ்த்து! Read More

மூணு மணி நேரம் கதை கேட்பது எரிச்சலை உண்டாக்கும்: ஆர்யா

ரடான் உலக குறும்பட விழா முதல் பதிப்பின் இறுதிச்சுற்று  நடந்தது! உலக அளவில் அமெரிக்காவில் இருந்து கலந்து கொண்ட குழந்தைகள் பெற்றோரை விட்டுப் பிரிந்து அகதிகளாகச் செல்வதை மையப்படுய்படுத்தி எடுக்கப்பட்ட ‘ஓடம்’ முதல் இடத்தையும்,தொடர் பலி என்கிற திகில் கதையுடன் கூடிய …

மூணு மணி நேரம் கதை கேட்பது எரிச்சலை உண்டாக்கும்: ஆர்யா Read More

விஜயகாந்துக்கு அடிக்கும் பழக்கம் வந்தது எப்படி ?- சினிமா விழாவில் ராதிகா வெளியிட்ட ரகசியம்!

அடிக்கும் பழக்கம் விஜயகாந்துக்கு வந்தது எப்படி ?  அடிக்கும் பழக்கத்தை விஜயகாந்த் யாரிடம் கற்றுக் கொண்டார் என்பது பற்றி ராதிகா ஒரு சினிமா விழாவில்  ரகசியத்தை வெளியிட்டார். ‘6பேஸ்’ நிறுவனம் தயாரித்துள்ள படம் ‘ நையப்புடை’. இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகரன் கதையின்  முக்கிய …

விஜயகாந்துக்கு அடிக்கும் பழக்கம் வந்தது எப்படி ?- சினிமா விழாவில் ராதிகா வெளியிட்ட ரகசியம்! Read More

குறும் பட விழா மூலம் ஊடகத்துறையில் கால் பதிக்கும் ரயான் ராதிகா !

திரை உலகில் மட்டுமின்றி சின்னத் திரையிலும் அன்றும் இன்றும் கொடி கட்டி பறக்கும் ராதிகா சரத்குமாரின் மகள் ரயான் ராதிகா தனது தாயின் சுவடுகளில் நடந்து திரை வர்த்தகத்தில் ஈடுப்படுவது இயற்கையானது தான் . பொருளாதாரத்தில் பட்டப் ப்படிப்பு முடித்த இவருக்கு …

குறும் பட விழா மூலம் ஊடகத்துறையில் கால் பதிக்கும் ரயான் ராதிகா ! Read More