‘மயில் ‘சிறகொடிந்தது : ஸ்ரீதேவி மறைவு!
தென்னிந்தியாவின் கனவுக்கன்னியாக அறியப்பட்ட நடிகை ஸ்ரீதேவி துபாயில் மாரடைப்பால் காலமானார். 1963 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 13 ஆம் தேதிவிருதுநகர் மாவட்டம் சிவகாசியில் ஐயப்பன் –ராஜேஸ்வரி தம்பதிகளுக்கு மகளாக பிறந்தஸ்ரீதேவி தனது நான்கு வயதிலேயே ஏ.பி.நாகராஜன் இயக்கிய ‘கந்தன் கருணை’ திரைப் படத்தில்குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர். 1967ஆம் ஆண்டு வெளியான அப்படம் தெலுங்கு, கன்னடம் மலையாளம் என்று வல்ல தென்னிந்திய மொழிகளிலும்குழந்தைநட்சத்திரமாக நடிக்கிற வாய்ப்பினை இவருக்குப் பெற்றுத் தந்தது. அதைத் தொடர்ந்து பல படங்களில் குழந்தைநட்சத்திரமாக நடித்து வந்த இவரை 1976ஆம்ஆண்டு மூன்று முடிச்சு படம் மூலம்கதாநாயகியாக அறிமுகப்படுத்தினார் இயக்குநர் சிகரம் கே.பாலசந்தர். இவர் அறிமுகமான முதல் படத்திலேயே கமல்ஹாசன், ரஜினிகாந்த் இருவரும் முக்கிய வேடத்தில் நடித்திருந்தனர். அந்தப் படம் வெற்றி படமாக அமையவே இவரது சினிமாவாழ்க்கையில் பெரும் திருப்பம் ஏற்பட்டது. தமிழ், தெலுங்கு, மலையாளம் என மூன்று மொழியிலும் இவர் கதாநாயாகியாக உயர்ந்தார்.முன்னணி கதாநாயகர்கள் படங்களிலும், முன்னணி இயக்குநர்களின் படங்களிலும் அவர்இருந்தார். பாரதிராஜாவின் பதினாறு வயதினிலே, சிவப்பு ரோஜாக்கள், பாலு மகேந்திராவின்மீண்டும் கோகிலா, மூன்றாம் பிறை என அவரது புகழ் உயர்ந்து பறந்தது. பதினாறு வயதினிலே படத்தில் அவர் ஏற்ற மயில் பாத்திரம் பரவலான பாராட்டைப்பெற்று இன்றளவும் பேசப்படும் பாத்திரமாகும். இந்தியிலும் வாய்ப்பு வரவே ,இந்திக்கும் சென்றார். முதல் படம் “சோல்வா சாவன்” தோல்வியைதழுவினாலும், இரண்டாவது வெளியான “ஹிம்மத்வாலா” மாபெரும் வெற்றியை தேடித் தந்தது.இந்தி திரைப்பட உலகில் ஒரு நட்சத்திர அந்தஸ்தையும் திருப்புமுனையையும் பெற்று தந்தபடம். அதன் பிறகு மூன்றாம் பிறை மீண்டும் “சத்மா” என்கிற பெயரில் உருவான போது அதிலும்நடித்தார். அதில் இவருக்கு பெரும் புகழும் பாராட்டும் கிடைத்தது. அதைத் தாண்டி,இன்றளவும் பல நடிகைகளுக்கு முன் மாதிரி படமாக திகழ்கிறது. அதன் பிறகு தொடர்ந்துஇந்தியில் இருபத்தி ஐந்து படங்களுக்கு மேல் நடித்து முன்னணி நடிகையாக திகழ்கிறார். …
‘மயில் ‘சிறகொடிந்தது : ஸ்ரீதேவி மறைவு! Read More