சோனி பிக்சர்ஸ் என்டர்டெயின்மென்ட் இந்தியா வழங்கும் இப்படத்தை ஆரோன் சோர்கின் எழுதி, இணைந்து தயாரித்து, இயக்கியிருக்கிறார்.
. மைக்கி மேடிசன், ஜெரமி ஆலன் ஒயிட், ஜெரமி ஸ்ட்ராங், பில்பர், பெட்டி கில்பின் நடித்துள்ளனர். ஒளிப்பதிவு ஜெப் க்ரோனன்வெத்,படத் தொகுப்பு ஆலன் பாம் கார்ட்டன் ,இசை அலெக்சாண்டர் டிஸ்ப்ளாட். இது சோனி பிக்சர்ஸ் என்டர்டெயின்மென்ட் இந்தியா வெளியீடு. ‘தி சோஷியல் ரெக்கனிங் ’ திரைப்படம்
வருகிற 9 ஆம் தேதி வெளியாகிறது.
‘தி சோஷியல் ரெக்கனிங்’ திரைப்படம், ‘தி சோஷியல் நெட்வொர்க் (2010)’ படத்தின் அடுத்த பாகம் என்றாலும் முந்தைய பாகத்தோடு தொடர்பில்லாத தனிப்படமாக உருவாக்கப்பட்டுள்ளது. இப்படம் 2021-ஆம் ஆண்டில் பிரான்சிஸ் ஹாகன் மற்றும் ஜெஃப் ஹார்விட்ஸ் ஆகியோரால் பகிரங்கப்படுத்தப்பட்ட ஃபேஸ்புக் தகவல் கசிவு பற்றிய ரகசியங்களை இப்படம் பேசுகிறது. இத்திரைப்படத்தின் உலகளாவிய அறிமுகச் சிறப்புத் திரையீடு முதலில் லண்டனில் உள்ள கர்ஸன் மேஃபேர் சினிமா திரையரங்கில் நடைபெற்றது.
இப்படத்தின் கதை என்ன?
சோஷியல் ரெக்கனிங் என்பதற்கு சமூகக் கணக்கீடு என்று பொருள்.இன்றைய சமூகத்தில் வாழக்கூடிய மனிதர்களின் மனத்தை தனது அல்காரிதம் மூலம் உணர்வுகளை அசையவைத்து ஆட்டி வைத்து அதன் மூலம் தங்களது வியாபாரத்தை அதிகாரத்தை அரசியலை வெற்றி பெற வைப்பதுதான் இன்றைய சமூக ஊடகங்களின் போக்காக இருக்கிறது. அதற்கு உலகில் பல நாடுகளில் நிகழ்ந்த அரசியல் மாற்றங்கள் உதாரணமாகச் சொல்லப்படுகின்றன.
அண்மையில் ஒரு தகவல் பரவிவருகிறது.இன்றைக்கு இணையம் வழியாகப் பொருள்களையோ சேவைகளையோ வாங்குவது தவிர்க்க முடியாத அம்சமாகிவிட்டது. இந்நிலையில், வாடிக்கையாளர்களின் மனங்களைத் திசைதிருப்புவதற்காக எத்தகைய மோசடியிலும் இறங்குவதற்குப் பல நிறுவனங்கள் தயாராக இருக்கின்றன. மார்க்கெட்டிங் துறையில், போலி விமர்சனங்களை உருவாக்கி அவை ஏதோ உண்மையான சாமானிய மக்கள் தாமாக முன்வந்து எழுதியது போலக் காட்டும் இந்த மோசடிக்கு ‘ஆஸ்ட்ரோடர்ஃபிங்’ (Astroturfing) என்று பெயர். முதலில் லேசாகக் குறைசொல்லிவிட்டுப் பிறகு புகழ்ந்து தள்ளுவதை ‘பிளெமிஷ் எஃபெக்ட்’ (Blemish Effect) என்பார்கள். இது படிப்பவர்களின் மூளையில் நம்பகத்தன்மையை மிக எளிதாக உருவாக்கிவிடும் ஓர் உளவியல் தந்திரமாகும். இன்றைக்கு இணையம் வழியாகப் பொருள்களையோ சேவைகளையோ வாங்குவது தவிர்க்க முடியாத அம்சமாகிவிட்டது. இந்நிலையில், வாடிக்கையாளர்களின் மனங்களைத் திசைதிருப்புவதற்காக எத்தகைய மோசடியிலும் இறங்குவதற்குப் பல நிறுவனங்கள் தயாராக இருக்கின்றன. மக்களிடம் செயற்கையான தாக்கம் ஏற்படுத்தும் சமூக ஊடகங்களின் பின்னணியில் இக்கதை உருவாகியுள்ளது.
இப்படி இன்று அனைவர் கரங்களிலும் கைபேசி வடிவில் அமர்ந்து கொண்டு அதைப் பார்ப்பவர் மனதை அசைய வைப்பவையாக கைபேசியில் மின்னி மின்னி வந்து விழுகின்ற ரீல்ஸ் முதல் பேச்சுகள் விவாதங்கள் போன்ற நீளமான காணொலிகள் வரை ஏராளம் கூறலாம்.
இந்தப் பின்னணியில் இப்படம் உலகில் நடந்த உண்மைகளை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. தி வால் ஸ்ட்ரீட் ஜர்னல் (The Wall Street Journal) என்கிற பத்திரிகையில், 2021-ஆம் ஆண்டில் வெளியான அதிரடி புலனாய்வுத் தொடர் ‘தி ஃபேஸ்புக் ஃபைல்ஸ்’ என்பதாகும். அந்தக் கட்டுரையை அடிப்படையாகக் கொண்டு இத்திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.
ஃபேஸ்புக்கின் இளம் பொறியாளரான பிரான்சிஸ் ஹாகன் (மைக்கி மேடிசன்), தி வால் ஸ்ட்ரீட் ஜர்னல் நிருபரான ஜெஃப் ஹார்விட்ஸ் (ஜெரமி ஆலன் ஒயிட்) என்பவரின் உதவியை நாடுகிறார். இவர்கள் இருவரும் இணைந்து மேற்கொள்ளும் ஓர் ஆபத்தான பயணம் இது. இறுதியாக ஃபேஸ்புக் எனும் சமூக ஊடகத்தின் மிக ரகசியமான உண்மைகளை அம்பலப்படுத்துவதில் முடிகிறது. இவ்வாறாக, 1000-க்கும் மேற்பட்ட முகநூலின் மிக முக்கியமான மற்றும் ரகசிய ஆவணங்களை அவர்கள் வெளியில் கொண்டு வருகின்றனர். இந்த உண்மைச் சம்பவத்தைத்தான் இத்திரைப்படம் விவரிக்கிறது.
பிரபலமான சமூக ஊடகங்களை மக்கள் நடுநிலை தவறாதவை என்று நினைக்கின்றனர். ஆனால் அவற்றுக்குப் பின்னே உள்ள வியாபார தந்திரங்களும் அதிகார வர்க்கச் சூட்சுமங்களும் பலருக்கும் தெரிவதில்லை .இந்த வகையில் சமூக ஊடகங்கள் அதிகாரப் போக்குகளை முடிவு செய்யும் காரணியாக இருப்பது பலருக்கும் தெரிவதில்லை. அவை மக்கள் உணர்வுகளைத்தூண்டித் தேர்தல் முடிவுகளை மாற்றுவதில் பெரும்பங்கு வகிக்கின்றன. அப்படிச் சமுதாயத்தில் அவை ஏற்படுத்திய தாக்கத்தையும் அதன் பின்னே உள்ள இருண்ட பக்கங்களையும் வெளிச்சம் போட்டி அம்பலப்படுத்தும் கதையாக இது உருவாகி இருக்கிறது.
இதில் நடித்திருக்கும் மைக்கி மேடிசன், ஜெரமி ஆலன் ஒயிட், ஜெரமி ஸ்ட்ராங், பில் பர்,பெட்டி கில்பின் என அனைவரும் இயல்பு கெடாமல் சிறப்பாக நடித்திருக்கிறார்கள். ஜெப் க்ரோனன்வெத்தின் கேமரா மூலம் பாத்திரங்களின் உணர்வுகளை முதன்மைப்படுத்தியே ஒளிப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஆர்ப்பாட்டம் இல்லாத அலெக்சாண்டர் டிஸ்ப்ளாட்டின் பின்னணி இசை கதையின் தீவிரத்தை உயர்த்திப்பிடிக்கிறது.
பொதுவாக ஆங்கிலப் படங்களில் நிறைய காட்சிப் பிரம்மாண்டங்கள் இருக்கும். ஆனால் இதில் பெரும்பாலும் ஒரு ஊடக
ங்கள் சம்பந்தப்பட்ட தேடல் பயணமாக இருப்பதால் நிறைய பேசிக் கொண்டிருக்கிறார்கள்.உரையாடல்க,ள் கருத்து பரிமாற்றங்கள், விவாதங்கள், விசாரணைகள் இப்படித்தான் இருக்கின்றன.
அந்தந்த கதாபாத்திர முரண்பாடுகளை வெளிப்படுத்தும் முகபாவனைகள் கொண்ட நடிப்புக் கலைஞர்களின் இயல்பான நடிப்பு ரசிக்கும்படி இருக்கின்றன.
நிறைய பேசிக் கொண்டிருப்பது போல் வருவது படத்தின் குறையாக உணரப்படலாம்.
திடுக் திருப்பங்கள் அதிரடி மாற்றங்கள் போன்றவை இல்லை.நீரோட்டம் போல் செல்கிறது கதை. அந்தக் கதை கேட்ட அளவிற்கான காட்சிகளே அமைக்கப்பட்டுள்ளன.
ஹாலிவுட் படங்களுக்கான அதிரடி இசை என்றோ இரைச்சலோ இல்லாமல் சம்பவங்களில் தீவிரத்தை க காட்டும் வகையில் மெல்லிய பின்னணி இசை அதன் தீவிரத்தை நமக்கு உணர்த்துகிறது.
மொத்தத்தில் சமூக ஊடகங்களின் இன்னொரு முகத்தை தெரிந்து கொள்ள வாய்ப்பாக இந்தப் படம் அனைத்துப் பிராந்திய மொழிகளிலும் வெளிவர வேண்டும்.விழிப்புணர்ச்சியூட்ட வேண்டும்.


