ஸ்ருஷ்டி டாங்கே நடித்துள்ள ‘ஆகன்யா’

தயாரிப்பாளர் திருமலை சிவம் அவர்கள் தயாரிப்பில் ஆகன்யா என்கிற  திரைப்படம் உருவாகியுள்ளது.

இப்படத்தை ஜவஹர் பரமசிவம் இயக்குகிறார். இத்திரைப்படம் ஒரு க்ரைம் திரில்லர் ஆக்சன் படமாகும்.இத்திரைப்படம் பிரம்மாண்ட பொருட்செலவில் பிரபல IT கம்பெனி மற்றும் MALL-களில் படமாக்கப்பட்டுள்ளளது.படத்தின் நாயகிகளாக சுப்ரா அய்யப்பா மற்றும் ஸ்ருஷ்டி டாங்கே நடித்துள்ளனர்.

சுப்ரா அய்யப்பா ஒரு ஆக்சன் நாயகியாக சண்டை காட்சிகளில் மிரட்டியுள்ளார், ஸ்ருஷ்டி டாங்கே சாதுர்யமான நாயகியாகவும் நடித்துள்ளார் .இப்படத்தில் இரண்டு குத்து பாடல்கள் உள்ளன அதில் ஒரு பாடலில் ஸ்ருஷ்டி டாங்கே கலக்கியுள்ளார்.

இப்படத்தில் வரும் காதல் பாடலை பா.விஜய் எழுதியுள்ளார்.இத்திரைப்படம் திரைக்கு வர உள்ளது.

தயாரிப்பு : திருமலை சிவம்
இயக்கம் : ஜவஹர் பரமசிவம்
ஒளிப்பதிவு : கதிரவன்
இசை : சுபாஷ் சந்திரன் (USA)
படத்தொகுப்பு: விக்னேஷ் குமார் PG