ரிலீசுக்கு தயாராகும் ஆர் .பி சௌத்ரியின் சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரிக்கும் “களத்தில் சந்திப்போம்” .ஜீவா – அருள்நிதி இணைந்து நடிக்க . N ராஜசேகர் இயக்குகிறார் . பல மாதங்களுக்குப் பிறகு திரையரங்குகளில் படங்கள் ரிலீஸ் ஆகப்போகும் சூழலில் சூப்பர்குட் ஃபிலிம்ஸ் ஆர்.பி. சௌத்ரியின் 90வது படமான ‘களத்தில் சந்திப்போம்’ திரைப்படம் தீபாவளிக்கு ரிலீஸ் ஆகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஜீவா , அருள்நிதி இருவரும் கதாநாயகர்களாக நடிக்கிறார்கள் .முதன் முறையாக இருவரும் இணைந்துContinue Reading

இந்தியத் தொலைக்காட்சிகளில் முதல் முறையாக திரைக்கு வந்து சில நாட்களே ஆன படம் சன் டிவியில் வெளியாவதாக கம்பீரமான அறிவிப்பைக் கேட்டிருப்பார்கள்.இந்தியத் தொலைக்காட்சிகளில் முதல் முறையாக நேரடியாகவே சன் தொலைக்காட்சியில் வெளியாகும் படம் தான் ‘நாங்க ரொம்ப பிஸி’.சுந்தர் .சி யின் அவ்னி மூவிஸ் நிறுவனம் சார்பில் தயாரிக்கப்பட்டுள்ள இப்படத்தை இயக்குநர் பத்ரி இயக்கியுள்ளார். இப்படத்தில் பிரசன்னா, ஷாம் , அஸ்வின் காக்கு மனு, யோகி பாபு, சிங்கம்புலி, மொட்டைContinue Reading

அமெரிக்காவில் ‘ ஏலேலோ’ என்கிற தமிழ் இசை ஆல்பம் உருவாகி இருக்கிறது. இதில் இந்திய ,அமெரிக்கக் கலைஞர்கள் பங்கேற்றுள்ளனர்.உலகமயமாக்கல் மற்றும் ஊடக வளர்ச்சியின் காரணமாக இப்போது உள்ளூர் மொழியான தமிழுடன் உலகமொழி ஆங்கிலமும் கலந்து பேசிப் புழங்கி  பயன்படுத்தப்பட்டு வருகிறது. அவ்வகையில் தமிழ் ஆங்கிலம் இணைந்த ஆல்பமாக ‘ஏலேலோ’ உருவாகியிருக்கிறது.இது ஒரு தமிழ் ஆல்பம் தான் என்றாலும் ஆங்கிலமும் கலந்து வருவதால் இதை மொழி கடந்து பலராலும் ரசிக்கப்படும் என்றுContinue Reading

ரா கிரியேஷன்ஸ் மற்றும் ஃப்ரைடே பிலிம் பேக்டரி இணைந்து தயாரிக்கும் சைக்கோ திரில்லர் திரைப்படம் ரா கிரியேஷன்ஸ் மற்றும் ஃப்ரைடே பிலிம் பேக்டரி சார்பில் பிரகாஷ் மற்றும் கேப்டன் எம்.பி ஆனந்த் ஆகியோர் இணைந்து தயாரிக்கும் முதல் திரைப்படம் புரடக்ஷன் நம்பர் ஒன். இப்படத்தின் துவக்க விழா இன்று காலை 9 மணி அளவில் சென்னை கைகான் குப்பத்தில் உள்ள பிள்ளையார் கோவிலில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினர்களாக தயாரிப்பாளர்Continue Reading

நடிகர் கிஷோர், சார்லி , நகுலன் வின்சென்ட், ஜெய்பாலா நடித்திருக்கும்  இந்த திரைப்படம் இந்திய சினிமாவிக் ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்ட முதல் கமர்சியல் படம் . எட்டு மணி நேரத்தில் இந்தப்படம் எடுக்கப்பட்டிருக்கிறது.நூற்றி எண்பது நாட்கள் நடிப்பு மற்றும் தொழில்நுட்ப ரிகர்சல் செய்து அதன் பின்னர் படப்பிடிப்பு நடைபெற்றிருக்கிறது. படத்தின் இயக்குநர் அஜூ இதுபற்றி கூறுகையில்…கிஷோர் , சார்லி போன்ற அனுபவமிக்க நடிகர்கள் இப்படிப்பட்ட சவாலான படப்பிடிப்பிற்கு ஒத்துழைத்து நடித்ததேContinue Reading

சிறப்பு எபிசோடுகளுடன் நவராத்திரியை கொண்டாடும் இதயத்தை திருடாதே; தனக்கே உரித்தான பாணியுடன் நகைச்சுவையை வாரி வழங்கி கொண்டாட்டத்தில் கலந்துகொள்ளும் நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கர் ~ நவராத்திரி சிறப்பு நிகழ்ச்சிகளை கண்டு ரசிக்க 2020, அக்டோபர் 24 முதல் 28 வரை இரவு 8.30 மணிக்கு கலர்ஸ் தமிழ் அலைவரிசையை பாருங்கள் ~  இதயத்தை திருடாதே என்ற பெயரில் குதூகலம் நிறைந்த நவராத்திரி சிறப்பு நிகழ்ச்சி ஒன்றை கலர்ஸ் தமிழ் அதன் பார்வையாளர்களுக்கு வழங்கவிருப்பதால் இந்த சிறப்பான கேளிக்கை நிகழ்வை கண்டுகளிக்க தயாராகுங்கள்.  அக்டோபர் 24 சனிக்கிழமை முதல் தொடங்கி அக்டோபர் 28 புதன்கிழமை வரை நடைபெறுகின்ற இந்தவார எபிசோடுகளில் மகிழ்வூட்டும் துடிப்பான கொண்டாட்டங்கள் இடம்பெறுகின்றன.  பிரபல நகைச்சுவை நடிகரான ரோபோ சங்கரின் சிறப்பு நகைச்சுவை நிகழ்ச்சியும் இதில் உள்ளடங்கும்.  கலர்ஸ் தமிழின் இத்தகைய நிகழ்ச்சியில் முதன்முறையாக தோன்றுகின்ற பிரபல நகைச்சுவை நடிகரான ரோபோ சங்கர்  அவரது தனித்துவமான நகைச்சுவை உணர்வால் பார்வையாளர்களை பரவசப்படுத்துவது நிச்சயம்.  இவரது வரவால் நிகழ்ச்சியின் கொண்டாட்டங்கள் இன்னும் களைகட்டும் என்பதில் ஐயமில்லை.  தனது தனித்துவமான இந்நிகழ்ச்சி பற்றி பேசிய நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கர், “பல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நான் தொடர்ந்து அங்கம்வகித்து வந்திருக்கிறேன்.  எனது திறமையை இந்த உலகம் கவனித்து கருத்தில்கொள்ளுமாறு செய்த செயல்தளம், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் தான்.  எனினும், கலர்ஸ் தமிழின் ஒரு  புனைவு நிகழ்ச்சியில் இதுவே எனது முதல் அறிமுகமாகும்.  இதயத்தை திருடாதே நிகழ்ச்சியின் ஒரு அங்கமாக இருப்பதில் உள்ளபடியே மற்றற்ற உற்சாகமும், மகிழ்ச்சியும் எனக்கிருக்கிறது. இந்நிகழ்ச்சியில் எனது பங்கானது பார்வையாளர்களை மகிழ்விக்கும் மற்றும் இந்நிகழ்ச்சிக்கு கலகலப்பை கொண்டு வருவதன் மூலம் புத்துணர்வூட்டும் திருப்பத்தை நான் வழங்குகிறேன்.  உண்மையிலேயே இது எனக்கு ஒரு குதூகலமான அனுபவமாக இருந்தது.  இந்நிகழ்ச்சிக்காக நடித்தபோது நான் மகிழ்ச்சியடைந்ததைப்போலவே எனது நடிப்பையும் பார்வையாளர்கள் அதே அளவிற்கு மகிழ்ந்து கொண்டாடுவார்கள் என்று நான் நம்புகிறேன்,” என்று கூறினார்.  ரோபோ சங்கரின் சிறப்பு தோற்றம் மட்டுமன்றி, பல்வேறு கொண்டாட்டங்களின் தொகுப்பையும் உள்ளடக்கியதாக இந்நிகழ்ச்சி இருக்கிறது.  மிகப்பெரிய குழு அமைப்பு மற்றும் அதைத்தொடர்ந்து நடைபெறும் சிறப்பு பூஜை சடங்குகள், இந்த நவராத்திரி திருவிழாவின் முக்கிய அம்சங்களையும், வரலாற்று பின்னணியையும் நினைவுப்படுத்துவதாக இருக்கும்.  மட்டற்ற பொழுதுபோக்குக்கு உத்தரவாதம் அளிக்கும் இந்த எபிசோடு, ரோபோ சங்கருடன் இணைந்து பார்ப்பவர்களையும் எழுந்து நடனமாடச் செய்யும் தாண்டியா தாள நடன நிகழ்ச்சியும் இடம்பெறுகிறது.  2020 அக்டோபர் 24 முதல் 28 ஆம் தேதி வரை  ஒவ்வொரு நாளும் இரவு 8.30 மணிக்கு கலர்ஸ் தமிழின் இதயத்தை திருடாதே நிகழ்ச்சியின்போது நவராத்தியின் கொண்டாட்டங்களை கண்டு மகிழ மறக்காதீர்கள். கலர்ஸ் தமிழ், கீழ்க்கண்ட அனைத்து முன்னணி வலையமைப்புகளிலும் மற்றும் அனைத்து டிடீஹெச் தளங்களிலும் கிடைக்கிறது.  சன் டைரக்ட் (CH NO 128), டாடா ஸ்கை (CHN NO 1515), ஏர்டெல் (CHN NO 763), டிஷ் டிவி (CHN NO 1808) மற்றும் வீடியோகான் D2H (CHN NO 553).Continue Reading

தமிழ் சினிமாவில்  தனித்துவமான கதாபாத்திரங்களைத் தேர்வு செய்து நடிப்பவர்கள் சிலர் தான். அதில் பாபி சிம்ஹாவும் ஒருவர். தனக்கான கதாபாத்திரம் எதுவாக இருந்தாலும்  அதில் தன் நடிப்புத்திறமையால் முத்திரை பதிப்பவர். தமிழ், தெலுங்கு என பிஸியாக இருக்கும் பாபி சிம்ஹா இப்போது புதிய படமொன்றில் மீண்டும் தன்னை நீருபிக்க தயாராகியுள்ளார்.5 ஆண்டுகளுக்கும் மேலாக விளம்பரப்பட உலகில் பிரபலமான விக்ரம் ராஜேஷ்வர் இப்படத்தை இயக்கவுள்ளார்.இக்கதக்காக பாபி சிம்ஹாவை அணுகியுள்ளார் இயக்குநர் விக்ரம்Continue Reading

பாக்யா சினிமாஸ் பட நிறுவனம் சார்பில் விக்னேஷ் ஏலப்பன் தயாரிப்பில் சக்திசிதம்பரம்  இயக்கியுள்ள படம் பேய்மாமா. யோகிபாபு கதையின் நாயகனாக நடித்துள்ள இப்படம் முழுக்க முழுக்க பொழுதுபோக்கு அம்சமுள்ள படமாக உருவாகி இருக்கிறது. நேற்று  இப்படத்தின் ஆடியோ வெளியிட்டு விழா சென்னையில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில் நடைபெற்றது. விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு பேசியதாவது.. புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்Continue Reading

வாழ்க்கையில் ஒவ்வொரு பிரச்சினையின் போதும் நாம் மிகவும் சுருண்டு விடுகிறோம். அப்படி சுருண்டு விடும் போது நமது மனதை அமைதிப்படுத்த சில பாடல்கள் கேட்போம், மீண்டு எழ சில பாடல்களைக் கேட்போம். நமக்குள்ளும் சக்திகள் இருக்கிறது, அதை நமக்கே சில பாடல்கள் உணர்த்தும். அப்படியொரு பாடலாக அமைந்துள்ளது ‘எழுந்து வா’. இந்தப் பாடல் குறித்து ‘எழுந்து வா’ பாடல் குழுவினரிடம் கேட்ட போது “சுதந்திரம் என்பது நமது மனதில் இருந்தேContinue Reading

தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு காலத்தில் சுந்தர்.சி தயாரிக்கும் பெயரிடப்படாத புதிய படத்தின் படப்பிடிப்பு அரசு அறிவித்துள்ள பாதுகாப்பு விதிமுறைகளின்படி நடைபெற்று வருகிறது. சுந்தர். சியின் அவ்னி மூவிஸ் தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தை பத்ரி இயக்குகிறார்.இப்படத்தில் பிரசன்னா, ஷாம் ,அஸ்வின் காக்குமனு, யோகி பாபு, ரித்திகா சென்,ஸ்ருதி  மராத்தே ஆகியோர் நடித்து வருகிறார்கள். இந்தப் படப்பிடிப்பு தொடர்ந்து 26 நாட்களாக நடைபெற்று வருகிறது. சென்னை ஈசிஆர் சாலையில் ரோஸ் கார்டன்எம்ஜிஎம்Continue Reading