ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷ்னல் சார்பில் நடிகர் கமல்ஹாசன் தயாரிப்பில், சிவகார்த்திகேயன் நடிப்பில், ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘அமரன்’. இது ஒரு பயோபிக் ரக படமாக உருவாகி உள்ளது.வீரமரணம் அடைந்த மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கையை மையமாக கொண்டு உருவாகியுள்ள இப்படம் நடிகர் சிவகார்த்திகேயனின் 21 வது படமாகும்.
நாட்டுக்காக ராணுவத்தில் உயிர்த்தியாகம் செய்த முகுந்த் வரதராஜனின் வாழ்க்கைக் கதையை அடிப்படையாக வைத்து உருவாகி இருக்கும் படம் ‘அமரன்’.
தீபாவளியை முன்னிட்டு இன்று (அக்.31) முதல் உலகம் முழுவதும் வெளியாகியுள்ள நிலையில் இப்படத்தின் முதல் காட்சியை முதல்வரிடம் காட்டி மகிழ்ந்தது படக் குழு . ‘அமரன்’ திரைப்படம் முதல் திரையிடல் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு திரையிடப்பட்டுள்ளது. துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் உடன் ‘அமரன்’ சிறப்புக் காட்சியில் பங்கேற்று படம் பார்த்த முதல்வர் மு.க.ஸ்டாலின், தயாரிப்பாளர் ஆர்.மகேந்திரன், நடிகர் சிவகார்த்திகேயன், இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி உள்ளிட்ட படக்குழுவினரை மகிழ்ந்து நெகிழ்ந்து பாராட்டியுள்ளார்.
மேலும், படம் முடிந்தவுடன் படம் மற்றும் படக்குழுவினரை வாழ்த்தியதோடு, படத்தின் தயாரிப்பாளர் கலமல்ஹாசன் அவர்களை கைப்பேசி மூலம் தொடர்புக் கொண்டு படம் சிறப்பாக இருப்பதாக பாராட்டியதோடு, படத்தின் கிளைமாக்ஸ் காட்சியை குறிப்பிட்டு பாராட்டினார்.
சிவகார்த்திகேயன் நடித்த படங்களிலேயே அதிகமான எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் ‘அமரன்’ திரைப்படத்தின் டிக்கெட் முன்பதிவுக்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்திருக்கும் நிலையில், வசூல் ரீதியாக படம் பல சாதனைகள் படைக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.ஒரு வணிக திரைப்படத்தின் கதாநாயகனாக முழுக்க முழுக்க கேளிக்கை ரகப் படங்களில் இதுவரை நடித்து வந்த சிவகார்த்திகேயன் இப்படத்தின் மூலம் தனது நடிப்புப் பயணத்தில் பல படிகள் ஏறி மேலே உயர்ந்துள்ளார் எனலாம்.