
துருவா , வெண்பா, சார்லி, மறைந்த நடிகை கல்பனா , லிங்கா , ஜெயகணேஷ் மற்றும் பலர் நடித்திருக்கும் இப்படத்தை புதுமுக இயக்குநர் துவாரக் ராஜா இயக்கியுள்ளார் . துருவா இதற்கு முன் திலகர் படத்தில் கதாநாயகனாக நடித்திருக்கிறார்.
வெண்பா கற்றது தமிழ் படத்தில் அஞ்சலியின் கதாபாத்திரத்திற்கு குழந்தை நட்சத்திரமாக நடித்தவர் இப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகிறார். அதே கண்கள் மற்றும் ‘சேதுபதி ‘ படத்தில் மூர்த்தியாக நடித்த லிங்கா ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் . ‘போடா போடி’, ‘ நாய்கள் ஜாக்கிரதை ‘ படத்திற்கு இசையமைத்த தரண் இசையமைத்திருக்கிறார் . போடா போடி-யில் ‘ஹரே ராம ஹரே கிருஷ்ணா ‘ என்ற பாடலுக்கு பின் இப்படத்தில் ‘I am a Complan Boy’ என்ற பாட்டை பாடியுள்ளார்.
சென்னையை சுற்றி படமாக்கப்பபட்ட இப்படம் 24 நாட்களில் அதிவேகமாக படமாக்கப்பட்டுள்ளது. பாலாஜி மோகன் , கார்த்திக் சுப்பாராஜ் , நலன் குமாரசாமி போன்ற இயக்குனர்களின் வரிசையில் துவாரக் ராஜாவும் குறும்படங்களில் இருந்து வெள்ளித்திரைக்கு அறிமுகமாகிறார் . இயக்குநர் கூறுகையில் ,” காதல் கசக்குதய்யா, அதன் தலைப்பிற்கேற்ற ஒரு குதூகலமான Rom-Com Entertainer. மேலும் இது ஒரு ‘Conversational Film’.
