UV கிரியேஷன்ஸ், ஃபர்ஸ்ட் பிரேம் என்டர்டெயின்மென்ட் இணைந்து தயாரிக்க, குயின் அனுஷ்கா ஷெட்டி நடிப்பில், கிரியேட்டிவ் இயக்குநர் கிரிஷ் ஜாகர்லமுடி இயக்கத்தில் உருவாகியுள்ள பான் இந்தியா பிரமாண்ட படைப்பான “காதி” (GHAATI) – ஜூலை 11ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.
தென்னிந்திய திரையுலக குயின் அனுஷ்கா ஷெட்டி “காதி” படத்தில் மிரட்டலான அதிரடி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். அவரது பிறந்தநாளில் வெளியிடப்பட்ட படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் கதாபாத்திரத்தை அறிமுகப்படுத்தும் கிளிம்ப்ஸ் வீடியோ, திரை ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைக் குவித்தது.
UV கிரியேஷன்ஸ் வழங்கும் இப்படத்தினை, ராஜீவ் ரெட்டி மற்றும் சாய் பாபு ஜாகர்லமுடி ஆகியோர் இணைந்து தயாரிக்கின்றனர். வேதம் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, அனுஷ்கா மற்றும் கிரிஷ் இப்படத்தில் மீண்டும் இணைந்துள்ளனர். UV கிரியேஷன்ஸ் பேனரில் அனுஷ்கா நடிக்கும் நான்காவது படம் இது என்பது குறிப்பிடதக்கது.
படத்தின் புதிய அப்டேட்டாக, இன்று “காதி” திரைப்படம் ஜூலை 11ம் தேதி திரையரங்குகளில் வெளியாவது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதையொட்டி, புதிய ரிலீஸ் போஸ்டர் வெளியாகியுள்ளது. இதில் அனுஷ்கா, விக்ரம் பிரபு மற்றும் மற்ற நடிகர்கள் ஒரு ஆற்றை கடந்து பயணிக்கின்ற காட்சி இடம்பெற்றுள்ளது, இது படத்தின் தீவிரமான மற்றும் உணர்வுப்பூர்வமான பயணத்தைக் குறிப்பதாக அமைந்துள்ளது.
“காதி” திரைப்படம், மனித இயல்பின் இருண்ட கோணங்களை ஆராயும் ஒரு தீவிரமான பயணமாக இருக்கும். இதில் கதாப்பாத்திரங்கள் தங்கள் கடந்தகாலங்களை நேரில் எதிர்கொண்டு, கடினமான முடிவுகளை எடுக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டு, இறுதியில் மீட்பு தேடக்கூடிய பயணத்தை மேற்கொள்கிறார்கள். காதி ஒரு க்ரிப்பிங் ஆக்ஷன் திரில்லராக உருவாகிறது, கிரிஷ் அனுஷ்காவை முன்னெப்போதும் இல்லாத வகையில் அதிரடி ஆக்சன் நாயகியாக வழங்கியுள்ளார்.
“காதி” திரைப்படத்தில் சிறப்பு மிக்க பிரபலமான தொழில்நுட்பக் குழு பணியாற்றியுள்ளது. மனோஜ் ரெட்டி கடாசானி ஒளிப்பதிவு செய்ய, நாகவெல்லி வித்யா சாகர் இசையமைக்கிறார். படத்திற்கு தோட்டா தரணி கலை இயக்குனராகவும், சாணக்யா ரெட்டி தூறுப்பு படத்தொகுப்பாளராகவும் பணியாற்றுகிறார்கள். சிந்தாகிண்டி ஸ்ரீனிவாஸ் ராவ் கதை வழங்க, சாய் மாதவ் புர்ரா வசனம் எழுதியுள்ளார்.
பான் இந்தியா பிரம்மாண்டமாக உருவாகியுள்ள இப்படம் தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி மொழிகளில் வருகிற ஜூலை 11 ஆம் தேதி வெளியாகவுள்ளது.