விஜய்சேதுபதி. நயன்தாரா, ராதிகா, பார்திபன் நடிப்பில்.நடிகர் தனுஷின் வுண்டர்பார் தயாரிப்பில் லைக்கா புரொடக்ஷன்ஸ் வெளியிடும் படம் ‘நானும் ரௌடிதான்’ .
இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு இன்று பிரசாத் லேப் திரையரங்கில் நடந்தது.
நிகழ்ச்சியில் படத்தின் நாயகன் விஜய் சேதுபதி பேசும் போது ” இந்தப் படம் எனக்கு முக்கியமான படமாக இருக்கும்.
பார்த்திபன் சார், மன்சூர் சார், அழகம் பெருமாள்சார், நயன்தாரா,,ராதிகா என்று நான் ரசித்த பலருடன் இதில் பணியாற்றியது மகிழ்ச்சியான அனுபவம்.
இந்தக்கதையை முதலில் பிப்டிபிப்டி அளவில்தான் பிடித்தது. போகப்போக இயக்குநர் மெருகு ஏற்றி வி ட்டார்.
தனுஷ் சாருடன் புதுப்பேட்டையில் வேலை பார்த்திருக்கிறேன். இந்த பட ஆரம்பத்தில்அவர் போன் செய்து எந்த அசௌகரியம் இருந்தாலும் போன் செய்யுங்க என்றார். நான் படம் முடிந்துதான் போனே செய்தேன்.
அந்த அளவுக்கு நன்றாக போனது .நயன்தாரா சீனியர்நடிகை, நான் வளரும் நடிகர் எப்படி இருப்பாரோ என்று தயக்கமாக பயமாக இருந்தது. முதல்நாளே அதை உடைத்து சகஜமாகி விட்டார். கொஞ்சம் நேரம் இருந்தால் கூட கேரவான் போகமாட்டார் அந்தளவுக்கு ஈடுபாடு காட்டினார்.”என்றார்.
இயக்குநர் விக்னேஷ் சிவன் பேசும்போது-.” போடா போடி’ படத்துக்கு பிறகு அடுத்தபடம் தாமதமானது. அனிருத் நட்பு, தனுஷ் சார் அறிமுகம் என்று வளர்ந்து இந்தப்படம் பண்ணும் அளவுக்கு கொண்டு சென்றது. இதற்கு அனிருத் கொடுத்த அன்பும், நட்பும் ஆதரவும், உதவியும் மறக்க முடியாது.
ஒரு கதை. காமடி பின்னணியில் செய்ய விரும்பி செய்தேன். விஜய் சேதுபதிசாரிடம் முதலில் கதை கேட்கச் சொன்னேன். முன்பே என் ‘போடா போடி’படம் பார்த்து அவர் ‘பீட்ஸா’ ஹீரோ என்று கூறி போன் செய்து பாராட்டி நண்பராகி இருந்தார்.
பலமுறை பல விதமாக இந்தக்தையை அவரிடம் சொல்லி ஒரு கட்டத்தில் நீங்கள்தான் நடிக்க வேண்டும் என்றேன். நயன்தாராவிடம் தனுஷ்சார் மூலம் தயக்கத்துடன்கதை சொன்னேன். அவருக்குப் பிடித்து விட்டது.
பார்த்திபன்சார், உள்பட எல்லாரும் உரிமையோடு நெருக்கத்துடன் வேலைபார்த்தார்கள். ” என்றார்.
பார்த்திபன் பேசும் போது ”10 என்றதுக்குள்ள படமும் ‘நானும் ரௌடிதான்’ படமும்ஒரே நாளில் வெளியாகிறது இரண்டு படங்களுமே ஜெயிக்கவேண்டும்.
தமிழ்நாடு நடிகர் சங்கமா இந்திய நடிகர் சங்கமா என்ற போது கவுண்டமணி நடிகர் சங்கம் என்று சொன்னதுபோல இதில் என்னிடம் ஹீரோவாக நடிக்கிறீர்களா வில்லனாக நடிக்கிறீர்களா என்றால் தெரியாது .நடிக்கிறேன் அவ்வளவுதான்.
தனுசு என்று ஒரு ராசி இருப்பது போல தனுஷுக்கு என்று ஒரு ராசி இருக்கிறது.
இப்படத்தில் தப்பு வர வாய்ப்பு இல்லை.எதையும் எவரையும் ‘கரெக்ட் பண்ணும் திறமை உள்ளவர் இயக்குநர் எனவே இப்படத்தில் தப்பு வர வாய்ப்பு இல்லை.
மன்சூர் சொன்னார்,அடுத்தவர்கள் பற்றி நான் கவனிக்கவே இல்லை ,கவனித்தால் அப்புறம் வருத்தப்பட வேண்டும். அனிருத்தின் ஆண் காதலர்களின் நானும் ஒருவன் இப்படம் அனுபவம் மறக்க முடியாத மகிழ்ச்சி அனுபவம் ” என்றார்.
நிகழ்ச்சியில் அனிருத்,இயக்குநர் அழகம் பெருமாள், ஸ்டண்ட் மாஸ்டர் திலீப் சுப்பராயன், கலைஇயக்குநர் கிரண், நடிகர் ஆர் ஜே. பாலாஜி ஆகியோரும் பேசினார்கள்.