மன்சூரலிகான் வழக்கில், பெப்ஸிக்கு நீதிமன்றம் உத்தரவு!

 

மன்சூரலிகானின் ராஜ்கென்னடி பிலிம்ஸ்தயாரிக்கும் ‘அதிரடி’ திரைப்படத்திற்கும், mansoor1

அல்லது அதன் பிறகு ராஜ்கென்னடி பிலிம்ஸ்தயாரிக்கும் எந்த ஒரு

திரைப்படத்திற்கும், ‘பெப்ஸி’ அமைப்பைச் சேர்ந்தவர்கள் யாரும் எந்த இடையூறும்

செய்யக்கூடாது. ராஜ்கென்னடி பிலிம்ஸ் எந்தத் தொழிலாளிகளைம் வைத்தும்

வேலை வாங்கிக் கொள்ளலாம்.எந்த புதிய தொழிலாளிகளை வைத்தும் படத்தை

ஆரம்பிக்கலாம், படத்தை முடிக்கலாம், ஷுட்டிங் நடத்தலாம்.

This is interim injection from High Court, CS.No. 169/2015,  JusticeSubbiah,  என்று இன்று

ஆர்டர் கொடுத்துள்ளார்கள்.

இது பற்றி மன்சூரலிகான்  விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

மௌமிதா சௌத்ரி ,பூவிஷா ,சஹானா ,மன்சூரலிகான்

தயாரித்து, நடிக்கும் அதிரடி படத்தின் ஷூட்டிங்குக்கு பிப்ரவரி 27ம்

தேதியிலிருந்து மார்ச் 27ம் தேதிவரைக்கும் ஒருமாதம் ஷெட்யூல் போட்டு,

ஹீரோயினை வரவழைத்து, மும்பையில் இருந்து வில்லனை வரவழைத்து,

லாட்ஜ்ல ரூம்போட்டு, ஒன்றரை மாதமாஅசெம்பள் பண்ணி, அட்வான்ஸ்

கொடுத்து, காமிராக்கு, ஆர்ட் டைரக்டருக்கு, டைரக்டருக்கு எல்லாருக்கும்

அட்வான்ஸ் கொடுத்து, பெப்ஸிஆளைவச்சிட்டுத்தான் ஷுட்டிங்போனேன்.

120 பேர் வரைக்கும் ஷுட்டிங்போனோம், திருவள்ளூர் மாவட்டம்

திருமழிசையில ஷுட்டிங்.   27ம் தேதி சாங் ஷுட்டிங் , 28ம் தேதி 5.30 மணிக்கு

ஷுட்டிங் வரமாட்டோம்னு பாய்காட்பண்றாங்க. யாரும் வரமாட்டோம்,

மன்சூரலிகான் மன்னிப்புக்கேட்கணும்னு சொல்றாங்க. நான் ஆயிரக்கணக்கான

தொழிலாளிக்கு வேலை கொடுக்கறவன்.

mansoor2

மூணு மாசத்துக்கு முன்னாடி வந்து ராதாரவி ஷுட்டிங்கில கேரவன் கேட்டாங்க.

மேக்கப்மேனுக்கு தனி கார் வேணும், காஸ்ட்டியூமருக்கு தனிகார் வேணும்,

அதெல்லாம் முடியாது, உங்க காசுல தனியாவாங்கிக்குங்க.8000,10,000ம்னு

வாங்கறீங்க, 50,000, 75000ம்னு சம்பளம் கொடுக்கறேன், மேக்கப்புக்கு ஆள்

சரியா இருக்கு, புரொடக்ஷனுக்கு ஆள் கம்மியா இருக்குன்னு புரொடக்ஷன்

ஆளுங்களுக்கு போன் போட்டு வரவச்சாங்க. அவங்க தயாரிப்பாளரா

என்னை பார்த்திருக்கணும், நான் தொழிலாளர் அமைப்புக்கு எதிரானவன்

கிடையாது. நான் பெப்ஸி அமைப்புல பல வருஷம் இருந்திருக்கேன்.நான் ஒரு

டான்சர், டான்ஸ் மாஸ்டர் கார்டு வச்சிருக்கேன்.சினி டான்சர், சினி டான்ஸ்

மாஸ்டர் அசோசியேஷன்ல மெம்பரா இருக்கேன்.சினி மியூசிஷியன்ல

மெம்பர்.ஆர்ட்டிஸ்ட் அசோசியேஷன்ல லைப்மெம்பர், ஆர்ட்டிஸ்ட் அன்ட் டப்பிங்

யூனியன்ல மெம்பர், 1988ல இருந்து,தயாரிப்பாளர் சங்கத்துல மெம்பர், பிலிம்

சேம்பர்ல மெம்பர், நான் பெப்ஸி அமைப்பைச்சேர்ந்தவன்.

தலைமையில் உள்ள சில புல்லுருவிகள் தவறான வழிகாட்டி, அவங்க

சுயநலத்துக்காக என்னை தப்பா பணியவைக்கப் பார்த்தாங்க, நான்

பணிஞ்சிபோறவன் கிடையாது.சிவா, நடிகர்சங்கத்துல ராதாரவியோட வலதுகை,

இடதுகைன்னு சொல்லப்படற கே.ஆர்.செல்வராஜ் செக்ஷன்ல

இருக்கலாம்.அவர்கிட்ட பேசச்சொன்னாங்க. நான் எதுக்குப் பேசணும், நான்

பேசமாட்டேன்னு சொன்னேன்.சிவா கிட்ட பேசச்சொன்னாங்க, சரின்னு

காலையில 5.30 மணிக்கு போன் அடிச்சி சிவா கிட்ட பேசினேன்.அன்னைக்கு

எனக்கு தொண்டை ரொம்ப கம்மியிருந்தது.கேட்டாரு, மன்சூரலிகான்

பேசறன்னன், அப்படியே போனை வச்சிட்டாரு, அதுக்கப்புறம் அவர்

எடுக்கவேயில்லை.

அதுக்கப்புறம் நான்எல்லா ஆர்ட்டிஸ்ட்டையும் பேக்பண்ணி அனுப்பிட்டு,

அன்னைக்கு ஷுட்டிங்கேன்சல், அதுக்கு நஷ்டஈடு 25 லட்சரூபாய்

கேட்டிருக்கேன்.அதுக்கான எல்லா செலவினங்களையும் நீதிமன்றத்துல தாக்கல்

பண்ணியிருக்கேன்.அது கேஸ் நடந்து முறைப்படி அவங்க இழப்பீடு தந்தே

ஆகணும், நான் விடமாட்டேன்.