என்ன கொடுமை இது? படப்பிடிப்பை ஒரு லைட்மேன் நிறுத்துவதா? தயாரிப்பாளர் ஆவேசம்

 சாமி இயக்கியுள்ள படம் ‘கங்காரு’ .இப்படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா ஆர்கேவி ஸ்டுடியோவில் நேற்று மாலை நடைபெற்றது.  முன்னோட்டத்தை  கலைப்புலி எஸ்.தாணு வெளியிட்டார்.

விழாவில் ‘கங்காரு’ படத்தின்   தயாரிப்பாளர் வி ஹவுஸ் புரொடக்ஷன்ஸ் சுரேஷ் காமாட்சி பேசும் போது IMG_1548 “இந்தக் கங்காருவை ரொம்ப நாள் சுமந்திருந்தேன். நான்கு ஆண்டுகள் முடிந்து இப்போதுதான் சனிப் பெயர்ச்சி நடந்துள்ளது. சினிமாவில் எல்லா சங்கங்களும் இயங்கி வந்தன. தயாரிப்பாளர் சங்கம் மட்டும் இயங்காமல் இருந்தது.


இந்தப் படத்தில் எனக்கு பல அனுபவங்கள்  கிடைத்தன.ஒரு கசப்பான அனுபவம் ,இதைச் சொல்லியே ஆக வேண்டும். கொடைக்கானலில்  மூன்று  நாட்கள் படப்பிடிப்பு நடந்தது. ஒரு நாள் பேட்டா கொடுக்க வில்லை என்று படப்பிடிப்பை நிறுத்தச் சொன்னார்கள். அதுவும் யார்..? லைட்மேன் சங்கம். அந்த சங்கத்தை சேர்ந்த ராஜாராம் என்பவர் போன் செய்து நிறுத்துகிறார். அவர் யாரு? பெப்ஸி தலைவர் அமீரா..? 

ஆனால் அவர்  செல்வமணியா விக்ரமனா யாரிடம் வேண்டுமானாலும் சொல்லுங்கள் என்று திமிராக மிரட்டுகிறார். எல்லா தொழிலிலும் முதலாளிதான் தொழிலாளிகளை கட்டுப் படுத்துகிறார்கள்.
சினிமாவில் மட்டும்தான் தொழிலாளிகள்  முதல் போட்ட முதலாளிகளை கட்டுப் படுத்துகிறார்கள். இது என்ன கொடுமை? இதற்கு விடிவு காலம் என்ன? 150 பேர் வேலை பார்க்கும் ஒரு படப்பிடிப்பை ஒரு தனியாள் நிறுத்த முடியும் என்றால் அதற்கு என்ன அர்த்தம்? ” என்று குமுறினார்.