பாலா தயாரிப்பில் மிஷ்கின் இயக்கியுள்ள படம் ‘பிசாசு’ இப்படத்தில் நாகா, பிரயாகா நடித்துள்ளனர். ஆரால் கொரளி இசையமைத்துள்ளார். ரவிராய் ஒளிப்பதிவு செய்துள்ளார்.முரளி ராமநாராயணன் வெளியிடுகிறார்.
‘பிசாசு’ படத்தின் ஊடக சந்திப்பு நடைபெற்றது. அப்போது மிஷ்கின் நீட்டி முழக்காமல் அடக்கியே வாசித்தார்.
“ஓநாயும் ஆட்டுக் குட்டியும்’ நினைத்தமாதிரி ஓடவில்லை, பத்திரிகைகள் மீடியாக்கள் ஒட்டு மொத்தமாக பாராட்டின.ப்படி இருந்தும் ஓடவில்லை. அதற்கு சிலரின் சதிதான் காரணம். நான் கைவிடப்பட்ட வனாக கீழேகிடந்தேன்.
கலங்கி நின்ற போது கைகொடுத்து வாய்ப்பு கொடுத்தவர்தான் பாலா. அவருக்கு நான் கடமைப் பட்டிருக்கிறேன்.
இந்தப் படத்துக்காக எல்லாரும் நிறைய உழைத்து இருக்கிறார்கள். இசையமைப்பாளர் ஆரால் கொரளி (Arrol Corelli) என் ஆபீஸில் தங்கி இரவு பகலாக உழைத்தான். இளையராஜாவுக்குப் பின் மிரள வைத்தான்.நாயகனும் அப்படித்தான். பிரயாகா எழுபது அடி உயரத்தில் கயிறு கட்டி . கீழே விழுந்து அடிபட்டு ரத்தம் சிந்தி உழைத்திருக்கிறார்.
இதைப் பார்த்து பிரயாகாவின் அம்மா அப்பா அழுதார்கள். நான் திரும்பிப் பார்க்கவில்லை. தமிழச்சியை பாலா அறிமுகம் செய்ய வேண்டியது. எனக்காக விட்டுக்கொடுத்து பெயர் வாங்க வைத்தார். அவர் வாள் வீச்சு போன்ற வரிகள் கொடுத்துள்ளார்.
ரவிராய் ஒளிப்பதிவில் படத்துக்கு ஒளி தந்து இருக்கிறார். “ஓநாயும் ஆட்டுக் குட்டியும்’ பிடித்தவர்களுக்கு இதுவும் பிடிக்கும். இது ஒரு எளிமையான படம் ” இவ்வாறு மிஷ்கின் பேசினார்.
நிகழ்ச்சியில் பாலா, ஒளிப்பதிவாளர் ரவிராய், கவிஞர் தமிழச்சி தங்கபாண்டியன் ,நாகா, பிரயாகா ஆகியோரும் பேசினார்கள்.