பத்மபூஷண் டாக்டர் பத்ரிநாத் சிலை திறப்பு மற்றும் நூல் வெளியீட்டு விழாவில் கவிஞர் வைரமுத்து பங்கேற்றுச் சிறப்பித்தார்.
நிகழ்வு குறித்து அவர் ட்விட்டரில் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியிருப்பதாவது:
‘சங்கர நேத்ராலயா
பத்மபூஷண்
டாக்டர் பத்ரிநாத்தின்
சிலை திறந்தோம்;
நூலும் வெளியிட்டோம்
‘ராஜராஜ சோழனின்
அரண்மனை அழிந்துபட்டது;
ஆலயம் நிலைத்துவிட்டது; ஏன்?
அரண்மனை தனியுடைமை;
ஆலயம் பொதுவுடைமை
சமுதாய நிறுவனங்கள்
அழிவதில்லை;
மக்களே காப்பாற்றுவார்கள்.
சங்கர நேத்ராலயா
சமுதாய நிறுவனமாகிவிட்டது;
நிலைக்கும்’ என்றேன்
உடன்
டாக்டர் சுரேந்திரன்,
டாக்டர் கிரிஷ் ஷிவா ராவ்,
ஜி.ஆர்.டி நிறுவனர் ராஜேந்திரன்,
நல்லி குப்புசாமி,
எழுத்தாளர் சிவசங்கரி,
நூலாசிரியர் இருங்கோவேள்,
டாக்டர் நிர்மலா சுப்ரமணியம் ‘
இவ்வாறு கூறியுள்ளார்.