பொதுமக்கள் மத்தியில் நடந்த ‘நித்தம் ஒரு வானம் ‘படத்தின் அறிமுக விழா!

வருகிற நவம்பர் நான்காம் தேதி வெளியாகவுள்ள
‘நித்தம் ஒரு வானம்’ படத்தின் ‘பிரீ ரிலீஸ் ஈவன்ட்’ என்று சொல்லப்படும் படம் வெளியாவதற்கு முன்பான அறிமுக விழா சென்னை நெக்சஸ் விஜயா மாலில் நடைபெற்றது.இப்படத்தை ரா. கார்த்திக் இயக்கியுள்ளார். வயாகாம் 18 ஸ்டுடியோஸ்

மற்றும் ரைஸ் ஈஸ்ட் என்டர்டெய்ன்மென்ட்

தயாரித்துள்ளது.சினிமாக்காரன் நிறுவனம் திரையரங்குகளில் வெளியிடுகிறது.

இந்த நிகழ்ச்சியில் ‘நித்தம் ஒரு வானம் ‘படத்தின் தயாரிப்பு நிறுவனத்தின் சார்பில் சாகர், இயக்குநர் ரா. கார்த்திக், படத்தின் கதாநாயகன் நடிகர் அசோக்செல்வன் கதாநாயகிகள் நடிகை ரீத்து வர்மா , சிவாத்மிகா ராஜசேகர், இசை அமைப்பாளர் தரண்குமார் ,மற்றும் படத்தில் பணியாற்றிய தொழில்நுட்பக் கலைஞர்கள் கலந்துகொண்டு படம் பற்றிய தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டனர்.படத்தின் சில பாடல் காட்சிகள் ஒளிபரப்பப்பட்டன. சில பாடல்கள் நேரடியாக மக்கள் முன் பாடகர்கள் மூலம் பாடப்பட்டன.

மாலின் நாலா பக்கங்களில் இருந்தும் தளங்களின் மாடங்களில் இருந்த ரசிகர்கள் முன்னிலையில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது.

ஞாயிறு மாலை தங்களுக்கு ஜாலியான கலகலப்பான மாலைப் பொழுதாக மாறிய அனுபவத்துடன் நிகழ்ச்சியைக் கண்டு களித்தவர்கள் சென்றார்கள்.

ஒரு காலத்தில் யாரும் நுழைய முடியாத ஒரு துறையாக இருந்த திரையுலகம் இப்போது மாறி விட்டது. திரை அனுபவம்
மக்களைத் தேடி வருகிறது என்பதற்கு இந்நிகழ்ச்சி ஒரு சான்றாக இருந்தது.