
ரஜினிகாந்த் வெளியிட்ட ‘தரமணி’ பாடல்களை, மறைந்த பாடலாசிரியர் நா முத்துக்குமாருக்கு சமர்ப்பணம் செய்தனர் இயக்குநர் ராமும், இசையமைப்பாளர் யுவன்ஷங்கர் ராஜாவும்.
இயக்குநர் ராம் கூறியதாவது: “தரமணி படத்தின் பாடல்களை ரஜினி சார் வெளியிட்டிருப்பது எங்களுக்கு உற்சாகம் ஊட்டி இருக்கிறது . அதே சமயத்தில், மறைந்த என்னுடைய நண்பர் நா முத்துக்குமாரை நினைத்து என் உள்ளம் வருந்துகிறது. 1500 க்கும் அதிகமான பாடல்கள் மற்றும் இரண்டு தேசிய விருதுகளை பெற்று, தமிழ் திரையுலகில், ரசிகர்களின் உள்ளம் கவர்ந்த பாடலாசிரியராக திகழ்ந்தவர் நா முத்துக்குமார். அவருடைய எழுத்துக்களுக்கு என்றுமே முற்று புள்ளி இருக்காது.
யுவன்ஷங்கர் ராஜா கூறியதாவது: “என்னுடைய இசை பயணத்தில் மிக முக்கிய மைல் கல்லாக இருந்தது, நா முத்துக்குமாரின் பாடல் வரிகள். இந்த ‘தரமணி’ பாடல்களை எங்களின் உள்ளத்தின் ஆழத்தில் இருந்து அவருக்கு சமர்ப்பணம் செய்கின்றோம்.”
எல்லாம் சரி .. நாயகி ஆண்ட்ரியாவை அழைத்துக்கொண்டு போகமறந்தது நியாயமாரே!