![](https://tamilcinemareporter.com/wp-content/uploads/2017/08/Captain-Son-team-2-300x225.jpeg)
இந்த நிகழ்ச்சியில் சென்னை ஸ்மஷர்ஸ் அணியின் உரிமையாளர் விஜயபிரபாகரன் உட்பட 8 அணிகளின் உரிமையாளர்கள் கலந்து கொண்டனர். வரும் டிசம்பர் மாதம் முதல் ஜனவரி மாதம் வரை இப்போட்டி நடைபெற உள்ளது.
இந்த ஆண்டு பேட்மிண்டன் போட்டி சென்னையில் நடைபெறவுள்ளது குறிப்பிடதக்கது மேலும் இந்த போட்டிக்கு இதுவரையில் பேட்மிண்டன் போட்டியில் இல்லாத அளவுக்கு 6 கோடி ரூபாய் வரையிலான பரிசு தொகை நிர்ணயிக்கப்பட்டுள்ளது
நிகழ்ச்சிக்கு பின் செய்தியாளர்களை சந்தித்த சென்னை ஸ்மாஷர்ஸ் அணியின் உரிமையாளரும் கேப்டன் விஜயகாந்த் மூத்த மகனுமான
விஜயபிரபாகரன்
” இந்த முறை சென்னையில் போட்டி நடைபெறவுள்ளது எங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது பொங்கல் விழாவுடன் இணைந்து இந்த பேட்மிண்டன் போட்டியையும் நடைபெற உள்ளதால் மக்கள் பொங்கல் விழா கொண்டாட்டமாக இந்த ஆட்டத்தை கண்டு மகிழலாம் என்றார்.
மேலும் கடந்த ஆண்டு சில காரணங்களால் சென்னையில் இந்த போட்டி நடத்தமுடியாத சூழல் ஏற்பட்டது.ஆனால் இந்த ஆண்டு போட்டி சென்னையில் நடைபெறவுள்ளதால் சென்னை அணி நிச்சயமாக வெற்றி பெரும் என்று நம்பிக்கை தெரிவித்தார்..
![](https://tamilcinemareporter.com/wp-content/uploads/2017/08/Captain-Son-team-1-300x225.jpeg)
கடந்த ஆண்டு 6 அணிகள் பங்கேற்ற நிலையில் இந்த ஆண்டு புதிதாக 2 அணிகள் சேர்க்கப்பட்டு 8 அணிகள் பங்கேற்கவுள்ளது குறிப்பிடத்தக்கது..