சாதனை படைக்கும் யுவன் சங்கர் ராஜாவின் டாப் டக்கர் ( Top Tucker ) பாடல் !

தென்னிந்திய திரையுலகின் இசைமகன்களில், ஒருவராக விளங்குபவர் யுவன் சங்கர் ராஜா. தமிழகத்தில் அவருக்கு, வெறித்தனமான பெரும் ரசிகர் கூட்டம் இருப்பது அனைவரும் அறிந்ததே. ஆனால் அவர் இசையில் உலகளவில் சாதனை படைத்த “ரௌடி பேபி” பாடலுக்கு முன்னதாகவே, உலகமெங்கும் மொழியை கடந்து, …

சாதனை படைக்கும் யுவன் சங்கர் ராஜாவின் டாப் டக்கர் ( Top Tucker ) பாடல் ! Read More

மாஸ் சினிமாஸ் தயாரிப்பில் சாம் ஜோன்ஸ் – ஆனந்தி நடிக்கும் ‘நதி’

கதாபாத்திரத்தின் தன்மை அறிந்த நடிப்பில் ஈடுபாட்டை செலுத்தி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தவர் நடிகர் சாம் ஜோன்ஸ். ‘ஏமாலி’, ‘லிசா’ உள்ளிட்ட படங்களில் நடித்ததை தொடர்ந்து தற்போது தயாரிப்பாளராகவும் ஜொலிக்க ஆயத்தமாகிவிட்டார். இயக்குநர் மோகன் ராஜாவிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய தாமரைச் செல்வன் …

மாஸ் சினிமாஸ் தயாரிப்பில் சாம் ஜோன்ஸ் – ஆனந்தி நடிக்கும் ‘நதி’ Read More

சேவியர் பிரிட்டோ தயாரிக்கும் ‘அழகிய கண்ணே’ படப்பிடிப்பு துவங்கியது !

பிரபல தயாரிப்பாளர் சேவியர் பிரிட்டோ அவர்கள் “எஸ்தல் எண்டர்டெய்னர்” நிறுவனத்தின் சார்பில் தயாரிக்கும் திரைப்படம் “அழகிய கண்ணே”. இத்திரைப்படத்தை இயக்குநர் சீனு ராமசாமியின் துணை இயக்குநர் R.விஜயகுமார் இயக்குகிறார். சட்டம் ஒரு இருட்டறை படத்தை இயக்கியவர் மாஸ்டர் படத்தின் தயாரிப்பாளர்  சேவியர் …

சேவியர் பிரிட்டோ தயாரிக்கும் ‘அழகிய கண்ணே’ படப்பிடிப்பு துவங்கியது ! Read More

அப்பா – மகள் அன்பின் அழகியலைச் சொல்லும் விறுவிறுப்பான த்ரில்லர் ‘அன்பிற்கினியாள்’

அப்பா – மகள்  இருவரையும் மையப்படுத்திய கதைகளுடன் பல படங்கள் வந்திருக்கின்றன.  ஆனால் அப்பா – மகள் இருவரையும் மையப்படுத்திய த்ரில்லர் கதை என்றால் மிகவும் அரிதானதுதான். அப்படியொரு அற்புதமான கதையை இயக்கியுள்ளார் கோகுல். அவருடைய இயக்கத்தில் வெளியான படங்கள் ஒவ்வொன்றுமே …

அப்பா – மகள் அன்பின் அழகியலைச் சொல்லும் விறுவிறுப்பான த்ரில்லர் ‘அன்பிற்கினியாள்’ Read More

குழலி திரைப்பட இசைவெளியீட்டு விழா !

முக்குழி பிலிம்ஸ் தயாரிக்கும் குழலி திரைப்படத்தை இயக்குநர் செரா .கலையரசன் இயக்குகிறார் . காக்காமுட்டை திரைப்படத்தில் நடித்த விக்னேஷ் கதாநாயகனாக நடிக்கிறார் .இவருக்கு ஜோடியாக  நடிகை ஆரா இணைந்து நடிக்கிறார் . பிரபல இசையமைப்பாளர் DM உதயகுமார் இசையமைக்க, ஷாமிர் ஒளிப்பதிவினையும் …

குழலி திரைப்பட இசைவெளியீட்டு விழா ! Read More

கதிரவன் கதாநாயகனாக நடிக்க ஷரவணன் இயக்கத்தில் சமூக பிரச்சனையை சொல்லும் படம் ‘மீண்டும்’

ஹீரோ சினிமாஸ் சார்பில் சி. மணிகண்டன் தயாரித்துள்ள படம் தான் ” மீண்டும் “ ” அஜித்” நடித்து மாபெரும் வெற்றி பெற்ற ” சிட்டிசன்” மற்றும் சினேகா நடித்து பரபரப்பாக பேசப்பட்ட ” ஏ.பி.சி.டி.” ஆகிய படங்களை டைரக்ட் செய்தவர் …

கதிரவன் கதாநாயகனாக நடிக்க ஷரவணன் இயக்கத்தில் சமூக பிரச்சனையை சொல்லும் படம் ‘மீண்டும்’ Read More

சோஷியல் மீடியாவில் மீண்டும் ஆதிக்கம் செலுத்தவரும் ‘டிக்டாக்’

ஃபேன் மேட் பிக்சர்ஸ் சார்பில் காமெடி கலந்த ஹாரர் த்ரில்லராக தயாராகி வரும் படம் ‘டிக்டாக்’. இந்தப்படத்தை தயாரிப்பதுடன் படத்தை இயக்கியும் உள்ளார் மதன். ‘எங்கிட்ட மோதாதே’ படத்தை இயக்கிய ராமு செல்லப்பா இந்தப்படத்தின் கதையை எழுதியுள்ளார். மூடர்கூடம் ராஜாஜி, கதாநாயகனாக …

சோஷியல் மீடியாவில் மீண்டும் ஆதிக்கம் செலுத்தவரும் ‘டிக்டாக்’ Read More

வித்தியாசமான முறையில் காதலர் தினத்தைக் கொண்டாடிய நடிகை சாக்ஷி அகர்வால்!

‘வேலன்டைன்ஸ் டே’ என்றாலே டேட்டிங் என்ற பெயரில் ஊர் சுற்றுவது என இன்றைய தலைமுறை ஒரு மோசமான ஃபார்முலாவை உருவாக்கி வைத்திருக்கிறது. அதனாலேயே காதலர் தினத்தை வெறுப்பவர்கள் அதிகரித்து வருகிறார்கள். நடிகை சாக்ஷி அகர்வாலும் காதலர் தினக் கொண்டாட்டத்திற்கு முக்கியத்துவம் தருபவர். அவர் காதலிப்பது ஆதரவற்ற குழந்தைகளை என்பது ஹைலைட்! ஆம், காதலர் தினத்தையொட்டி ஆதரவற்ற குழந்தைகளோடு நேரத்தைச் செலவிடுவது, அவர்களுக்கு உணவு வழங்கி மகிழ்வது என்பதை வழக்கமாக வைத்திருக்கிறார் சாக்ஷி. தான் நடித்த ‘குட்டி ஸ்டோரி’ படம் ரிலீஸான உற்சாகத்திலிருக்கும் நேரமாகப் பார்த்து காதலர் தினம் வருகிறது. அதே உற்சாகத்தோடு, சென்னை பெரும்பாக்கத்தில் அமைந்துள்ள ‘நியூ ஹோப் அண்ட் நியூ லைஃப்’ என்ற ஆதரவற்ற குழந்தைகள் காப்பகத்துக்குச் சென்று அங்குள்ளவர்களுக்கு உணவு வழங்கி, கலந்து பழகி, அவர்களோடு விளையாடி மகிழ்வித்து திரும்பியிருக்கிறார். அதுதான் தன்னுடைய காதலர் தினக் கொண்டாட்டம் என்கிறார். அவரிடம் பேசினோம்… ” ‘வேலன்டைன்ஸ் டே’வை  உலகம் பார்க்கிற பார்வை வேற. நான் அதை மனுஷங்க மேல மனுஷங்க அன்பு செலுத்துறதுக்கான தினமாத்தான் பார்க்கிறேன். யார் வேணாலும் யார் மேல வேணாலும் அன்பு செலுத்தலாம். எனக்கு ஆதரவற்ற குழந்தைகள் மேல அன்பு செலுத்துறது பிடிச்சிருக்கு. அவங்கதான் என்னோட காதலர்கள். அதனால, காதலர் தினத்தை அவங்களோட கொண்டாடுறேன்.  மூணு வருஷத்துக்கு முன்னே, ‘ஃபுட் ஃபார் டூ’ங்கிற (Food for Two) கான்செப்ட்ல காதலர் தினத்தைக் கொண்டாடினேன். அதாவது ‘ஒரு மனுஷன் இரண்டு பேருக்கு உணவு கொடுத்தாலே போதும்; நாட்டுல ஏழைகளுக்கு பசி பட்டினி இருக்காது’ங்கிற விழிப்புணர்வை உருவாக்குறதுக்காக பண்ணது அது.  போன வருஷ காதலர் தினத்தை, ‘எய்ட்ஸ்’ பாதித்த பெற்றோருக்கு பிறந்த பிள்ளைகளுக்கான ஒரு காப்பகத்துல அவர்களைத் தொட்டுப் பேசி பழகி, சாப்பாடு கொடுத்து கொண்டாடினேன். ‘எய்ட்ஸ் பாதித்தவங்களை தொடுறதால நமக்கு எய்ட்ஸ் தொற்றாது; அவங்களை தொட்டுப் பழக தகுதியற்றவர்களா நினைக்கிறது தப்பு’ங்கிறதை எடுத்துச் சொல்றதுக்கான முயற்சியா அதை பண்ணேன். இந்த வருஷம், கிட்டத்தட்ட 100 ஆதரவற்ற குழந்தைகள் இருக்கிற ‘நியூ ஹோப் அண்ட் நியூ லைஃப்’ காப்பகத்துல காதலர் தினத்தைக் கொண்டாடினேன். மனசுக்கு அவ்ளோ ஹேப்பி… இது அடுத்தடுத்த வருஷமும் தொடரும்” என்றார். ‘குட்டி ஸ்டோரி’ படத்தையடுத்து சாக்ஷி அகர்வால் நடித்துள்ள ‘சின்ட்ரெல்லா’ படம் விரைவில் ரிலீஸாகவுள்ளது. ஆர்யா ஹீரோவாக நடித்துள்ள ‘டெடி’ படத்தில் குறிப்பிட்டுச் சொல்லும்படியான கேரக்டரில் நடித்துள்ளார். அடுத்ததாக, சாக்ஷி அகர்வால் ஒப்பந்தமாகியுள்ள படம் ‘தி நைட்.’ விலங்கு ஒன்று முக்கிய கதாபாத்திரமாக நடிக்கப் போகிற அந்த படத்தின் படப்பிடிப்பு, பூஜையுடன் இன்னும் சில நாட்களில் துவங்கவிருக்கிறதாம். ‘அரண்மனை 3’யிலும் நடிக்கவிருக்கிறார் என்பது சாக்ஷி பற்றிய அடுத்த அப்டேட்.

வித்தியாசமான முறையில் காதலர் தினத்தைக் கொண்டாடிய நடிகை சாக்ஷி அகர்வால்! Read More

எல்லோருடைய கையிலும் கேமரா போன் இருப்பது ஆரோக்கியமான விஷயம் – ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம்

இந்திய சினிமா உலகில் முன்னணி ஒளிப்பதிவாளராக இருப்பவர் பி.சி.ஸ்ரீராம். இவர் 12 மாடல் அழகிகளை வைத்து 12 விதமான பாரம்பரிய திருமண ஆடைகள் அணிந்து உருவாக்கப்பட்ட தி பிரைட் ஷாப் 2021 ஆண்டிற்கான காலண்டரை சென்னையில் நடைபெற்ற விழாவில் வெளியிட்டார். அதன்பின் …

எல்லோருடைய கையிலும் கேமரா போன் இருப்பது ஆரோக்கியமான விஷயம் – ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம் Read More

டிக் டாக் புகழ் இலக்கியா நடிக்கும் படம் ‘ நீ சுடத்தான் வந்தியா’

டிக் டாக் உலகத்தில் தனது அதிரடியான கவர்ச்சி வீடியோக்கள் மூலம் புகழ்பெற்றவர் இலக்கியா. அவர் திரையுலகில் அறிமுகமாகும் படம்தான் ‘நீ சுடத்தான் வந்தியா?’காடும்  காடு சார்ந்த இடங்களிலும் நடக்கும் சஸ்பென்ஸ் திரில்லர் கதை இது.இப்படத்தை ஆல்பைன் மீடியா நிறுவனம் தயாரிக்கிறது.  எடிட்டிங்கும் …

டிக் டாக் புகழ் இலக்கியா நடிக்கும் படம் ‘ நீ சுடத்தான் வந்தியா’ Read More