இது ஓர் உளவியல் ரீதியான படம்.. வித்தியாசமான கோணத்தில் கொடுத்திருக்கிறார், இயக்குநர் நம்பிக்கை சந்துரு.
பிக்பாஸ் புகழ் சாண்டி, லோன் வாங்கி ஏதாவது தொழில் செய்ய வேண்டுமென இருப்பவர். கதையின் படி கணவனால் கைவிடப்பட்ட சகோதரி, சகோதரியின் மகள் மற்றும் தாய் ஆகியோருடன் சிறு வீட்டில் வசிக்கிறார்.
3.33 மணிக்கு பிறந்த அவருக்குள் அந்த நேரத்தில் ஏதோ ஒன்று நடக்கிறது. பயங்கரமான கனவுகள் வருகின்றன. அவரைச் சுற்றி, ‘எதிர்மறையான தீய’ சக்திகள் அதிகம் உள்ளன என்கிறார் குரு. இது ஒரு உளவியல் ரீதியான பிரச்சினை என்கிறார் மருத்துவர்.
இதனால், மனதளவில் கடும் தடுமாற்றத்தில் இருக்கும் சாண்டி அதிலிருந்து விடுபட்டாரா இல்லையா என்பது தான் மீதிக் கதை.
ஒரு வீட்டுக்குள்ளேயே படத்தை நகர்த்தியிருந்தாலும், வெவ்வேறு கோணங்களால் அலுப்புதட்டவில்லை. சாண்டியும் சிறப்பாக நடித்துள்ளார்.
அவரது தாயாக வரும் ரமா மற்றும் அக்கா ரேஷ்மா ஆகியோரும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள். திடீரென இருவரும் பேயாக மாறி அதிரவைக்கிறார்கள்.
சாண்டியின் காதலியாக வருகிறார் ஸ்ருதி செல்வம். காதலன் சாண்டிக்கு ஆதரவாக இரும் அவரும் திடீரென சாண்டியை பயமுறுத்துகிறார்.
கௌவுதம் மேனன் இரண்டு காட்சியில் வந்தாலும் சிறப்பாக நடித்திருக்கிறார்.
சரவணன், மைம் கோபி ஒரே ஒரு காட்சியில் வந்து போகின்றனர்.
இசையமைப்பாளர் ர்ஷவர்தன் ரமேஷ்வர் அதிரடியாக இசையமைத்துள்ளார். சதீஷ் மனோகரன் ஒளிப்பதிவு சிறப்பு.
வித்தியாசமான படம்!