விஷ்ணு மஞ்சு, மோகன்லால், அக்ஷய் குமார், பிரபாஸ், பிரீத்தி முகுந்தன், காஜல் அகர்வால் ,மோகன் பாபு, சரத்குமார், மது நடித்துள்ளனர்.முகேஷ் குமார் சிங் இயக்கி உள்ளார்.ஸ்டீபன் தேவசி இசையமைத்துள்ளார். தயாரிப்பு: ஏவிஏ என்டர்டைன்மென்ட், 24 ப்ரேம்ஸ் ஃபேக்டரி -மோகன் பாபு .
கண்ணப்ப நாயனார் கதை தமிழ் மக்களுக்குத் தெரியும்.வேடர் குலத்தில் பிறந்து தனது தூய பக்தியினால் இறைவனுக்குத் தன் கண்களைத் தானமாக அளித்து நாயன்மார்களில் ஒருவராக இடம் பிடித்த கண்ணப்ப நாயனாரின் கதையை அடிப்படையாகக் கொண்டு உருவாகி இருப்பதுதான் இந்த ‘கண்ணப்பா’ படம்.
ஆரம்பத்தில் ஒரு நாத்திகனாக உருவ வழிபாட்டைக் கேலி செய்து அது வெறும் கல் என்று என்றும் உயிர்ப்பலி கேட்பது கடவுளாகாது என்றும் கூறுகிறான் திண்ணன்.அப்படிப்பட்டவன் சிவா என்ற பெயரை உச்சரித்து தன்னை அடைய மனம் மாறும் ஒரு பக்தனாக எப்படி மாறுகிறான் என்கிற கதையை சிவபெருமான் பார்வதிக்குச் சொல்வதாக படம் நகர்கிறது.இடையில் நடந்த ரசமற்றங்கள் என்ன? அவனது மன மாற்றங்கள் என்ன?என்பதைச் சொல்லும் திரைக்கதை செல்லும் பாதை தான் ‘கண்ணப்பா’ திரைப்படம்.
கண்ணப்பரின் கதை தெரிந்தவர்களுக்கும் தெரியாதவர்களுக்கும் இந்த படம் பல சுவாரசியங்களை அளிக்கும் வகையில் உருவாகி உள்ளது.
கதையின் நாயகனாக நடித்திருக்கும் விஷ்ணு மஞ்சு,உருவ வழிபாட்டை எதிர்த்து குழந்தையாக இருக்கும்போதே கேள்வி கேட்கும் ஒருவனாக வளர்கிறார்.மனிதநேய நம்ப வேண்டும் என்று அவர் கொள்கை கொண்டதுடன் தனது பட்டி மக்களுக்கு அரணாக இருக்கிறார். திண்ணனாக வீரம் காட்டும் போதும் கண்ணப்பனாக பக்தியில் உருகும் போதும் இருவேறு அவதாரங்கள் எடுத்து படம் பார்ப்பவர்களைக் கவர்கிறார் அவரது பல்வேறு வகையான நடிப்பு வெளிப்பாடுகளைக் காட்டுவதற்கு ஏற்ற வகையில் அந்தப் பாத்திரம் உருவாக்கப்பட்டுள்ளது .விஷ்ணு மஞ்சு அதில் ஒளி விடுகிறார்.
நாயகியாக நெமிலி பாத்திரத்தில் நடித்திருக்கும் ப்ரீத்தி முகுந்தன் கண்களாலும் உடல் மொழியாலும் பேசுகிறார்.இதிகாச கால நாயகியாக வந்து ஈர்க்கிறார்.
பக்தியை தனியுடைமையாக ஒரு அமைப்பின் உரிமையாக சொந்தம் கொண்டாடும் தற்கால கூட்டத்தின் பிரதிநிதியாக மகாதேவ சாஸ்திரி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் மோகன் பாபு, கதாபாத்திரத்திற்கான கம்பீரம் மற்றும் ஆணவத்தை மிக நேர்த்தியாக வெளிப்படுத்தியிருக்கிறார்.
கிராதா என்ற வேடர் குல வீரராக நடித்திருக்கும் மோகன்லாலின் திரைத்தோற்றம் சிறப்பு.அகில இந்திய படத்திற்கான கூடுதல் பலம்.அவர் பேசும் வசனங்கள் ஆணவத்துக்கு எதிரான சட்டை அடி. ருத்ரா கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் பிரபாஸ்,தோன்றும் காட்சிகளில் ரசிகர்களின் ஆரவாரம் எழும்.விஷ்ணு மஞ்சுவும், பிரபாஸும் பேசிக்கொள்ளும் திருமணம் பற்றிய வசனங்கள் சுவாரசியம் தட்டுபவை. மோகன் பாபு மற்றும் பிரபாஸ் இடையிலான உரையாடல்கள் போலி பத்தி ஆணவத்துக்கு எதிரானது.சிவனாக நடித்திருக்கும் அக்ஷய் குமார் மற்றும் பார்வதியாக நடித்திருக்கும் காஜல் அகர்வால் பொருத்தமான தேர்வு.
விஷ்ணு மஞ்சுவின் தந்தையாக நடித்திருக்கும் சரத்குமார், முதுமைத் தோற்றத்திலும் கம்பீரம் காட்டி படத்திற்குப் பலம் சேர்க்கிறார். ஐந்து குடிகளில் ஒரு குடியின் தலைவராக வரும் சம்பத்ராம்,கவனம் ஈர்க்கிறார்.மதுபாலா, முகேஷ் ரிஷி, பிரம்மாஜி, பிரம்மானந்தம், ரகு பாபு, ஐஸ்வர்யா பாஸ்கரன், தேவராஜ், சிவ பாலாஜி, அர்பித் ரங்கா என மற்ற துணைப்கதாபாத்திரங்களில் நடித்திருப்பவர்கள் ஏற்ற பாத்திரங்களுக்கு நியாயம் செய்துள்ளனர்.
ஒளிப்பதிவாளர் ஷெல்டன் சாவின் கேமரா கண்கொள்ளாத இயற்கை அழகுகளை திரையில் காட்டி கண்களை நிறைக்கிறது. எது உண்மை, எது வி.எப்.எக்ஸ் என்று கண்டுபிடிக்க முடியாதபடி நேர்த்தியாக ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.
இசையமைப்பாளர் ஸ்டீபன் தேவஸீ இசையில் பாடல்கள் அனைத்தும் பிரம்மாண்ட இனிமை.பின்னணி இசையிலும் குறை இல்லை.படத்தொகுப்பாளர் ஆண்டனி,ஒரு பான் இந்தியா படத்திற்கான தீவிரத்தை உணர்ந்து படத்தை தொகுத்துள்ளார்.தத்துவம் பற்றிக் ஆழங்களைக் வினாக்கள் கேட்டு விமர்சனமும் விவாதமும் செய்யும் வசனங்களும் சிறப்பு.
சண்டைப்பயிற்சி இயக்குநர், ஆடை வடிமைப்பாளர், கலை இயக்குநர் மற்றும் வி.எப்.எக்ஸ் பணியாளர்கள், ஒப்பனைக் கலைஞர்கள் என அனைவரது உழைப்பும் திரையில் தெரிகிறது.
இயக்குநர் முகேஷ் குமார் சிங் இயக்கியுள்ள இந்த கண்ணப்பா திரைப்படம் இந்த நூற்றாண்டுக்கு ஏற்ற வகையில் தொழில்நுட்ப நேர்த்திகளுடன் காட்சி அசத்தல்களுடன் அனைவரையும் கவரும் திரையரங்கு அனுபவத்தை பிரமாண்டமாக உணரச் செய்யும் வகையில் உருவாகி உள்ளது.
படம் சற்று நீளமாக இருந்தாலும் அதற்காக உழைத்துள்ள அவர்களது உழைப்பை பார்த்து அதை தகும் என்று நாம் பாராட்டலாம்.மொத்தத்தில், ‘கண்ணப்பா’ பக்தியாக மட்டும் அல்ல பார்ப்பவர்களை வியக்க வைக்கும் ஒரு திரைப்படமாகவும் வியக்க வைக்கிறார்.


