பத்திரிகையாளர் ,மக்கள் தொடர்பாளர், நடிகர் விஜயின் மக்கள் தொடர்பாளர் திரைப்பட இயக்குநர், தயாரிப்பாளர்,திரைப்பட வெளியிட்டாளர் என்று பல வகையிலும் பணிபுரிந்து பெயரெடுத்த பி.டி. செல்வகுமார் கலப்பை மக்கள் இயக்கம் என்கிற அமைப்பின் மூலம் பல்வேறு சமூகசேவைகள் செய்து வருகிறார். அவர் அண்மையில் திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைந்தார். அவருக்கு மாநில வர்த்தகர் அணியில் துணைச் செயலாளர் பொறுப்பு கொடுக்கப்பட்டுள்ளது. அதனை முன்னிட்டு சென்னை கோயம்பேடு சென்னை டீலக்ஸ் ஹோட்டலில் நண்பர்கள் ஊடகங்களைச் சந்தித்து நன்றி தெரிவித்தார்.நண்பர்கள் அவரைப் பாராட்டிக் கெளரவித்தார்கள்
இவ் விழாவில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தலைவர் முரளி ராமநாராயணன், துணை தலைவர் தமிழ்க் குமரன், விடியல் ராஜு, ராஜா, முருகன், சி வி குமார், விஷ்ணுஹாசன் நடிகர், ஏ எல் உதயா, நடிகர் விஜித், எம். எஸ். முருகராஜ் ஆசிரியர் கலந்து கொண்டு வாழ்த்தினர்.தங்கள் நினைவுகளைப் பகிர்ந்து கொண்டனர்.
நிகழ்வில் பி.டி. செல்வகுமார் 10 ஏழைப் பெண்களுக்குத் தொழில் செய்ய நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.
நடிகர் விஜய்யின் உதவியாளர் செல்வம் என்பவருக்கு 50,000 நிதி உதவியுடன் படங்களில் பணிபுரிய வேலை வாய்ப்பு ஏற்படுத்தியும் கொடுத்திருக்கிறார். அதோடு
தமிழக அரசின் சிறந்த தயாரிப்பாளர் விருது பெற்ற தயாரிப்பாளர் சோழா கிரியேஷன்ஸ் பொன்னுரங்கம் அவர்களைப் பாராட்டி கௌரவிக்கவும் செய்தார்.


