யூகிசேது, சின்னிஜெயந்த், ராஜ் ஐயப்பா, சம்யுக்தா விஸ்வநாதன் ,நண்டு, தீபக் பரமேஷ், காஜல் சௌத்ரி, பீட்டர் கே, ஷரத் ரவி, அக்ஷிதா போப்பையா , பிரியங்கா சந்திரசேகர் ,பரத் போபண்ணா, விஜிதா வஷிதா நடித்துள்ளனர்.
திலீப் குமார், ஹேமந்த் குமார், சங்கீத், சந்தோஷ் ரவி, ஜெகன் ராஜேந்திரன் என ஐந்து இயக்குநர்கள் இயக்கி உள்ளனர்.சரவண சுப்பிரமணியம் இசையமைத்துள்ளார். ரித்தி சித்தி பிலிம்ஸ் சார்பில் ராஜு ஷெரேகர் தயாரித்துள்ளார்.
’வெளவல்ஸ்’ (Vowels) என்கிற பெயரில் வந்திருக்கும் இது ஒரு ஆந்தாலஜி திரைப்படம் ஆகும்.
ஐந்து இயக்குநர்கள் ஐந்து வெவ்வேறு கதைகளை இயக்கியிருந்தாலும் அவை எந்த ஒரு பொதுத் தன்மையில் ஒன்று படுகின்றன என்றால் காதல் என்கிற உணர்வால் பிணைக்கப்பட்டு ஒரே படமாக இணைக்கப்பட்டு வெளியாகியுள்ளது.ஆங்கிலத்தில் உயிர் எழுத்துகளை வெளவல்ஸ் என்பார்கள். இதில் கதைகள் யாவும் மனித உயிர்கள் சம்பந்தப்பட்டதால் அப்படிப் பெயர் வைத்திருக்கக்கூடும்.
1.அறிவு ஜீவித்தனமான உரையாடல்கள் மூலம் பெண்களை மயக்கி திரைப்படங்களில் வருவது போல் கொலை செய்யும் ஒருவன்.
2. சாலையில் வருபவர்களைப் பற்றி கவலைப்படாமல் சாகசமாகப் பயணித்து மூடத்தனமான விபத்தின் மூலம் பிறருக்குப் பாதிப்பு ஏற்படுத்த ஒருவன்.
3. காதல் போயின் சாதல் என்று மூடத்தனமான முடிவெடுக்கும் வாலிபனைக் காப்பாற்றும் ஒருவர்.
4. அன்பு நம்பிக்கை வயப்பட்டது என்பதைச் சொல்லும் இன்னொருவன்.அன்பிற்கு முன் சந்தேகங்களுக்கு இடமில்லை என்று கூறும் நபர்.
5. பொய்க் காதலை உரித்துப் பார்க்கு நினைக்கும் இன்னொருவன்.
இப்படி ஐந்து கதைகள் மூலம் காதலின் வெவ்வேறு உணர்வுகளை,காதலின் சந்தே திரிந்த வடிவங்களான காமம் மோகம் வெறி போன்றவற்றையும் திரைப்படத்தின் மூலம் பார்வையாளர்களுக்குள் இறக்கிவைக்கும் முயற்சி தான் இந்த ’வெளவல்ஸ்’ (Vowels).
யூகி சேது, சின்னி ஜெயந்த், ராஜ் ஐயப்பா, சம்யுக்தா விஸ்வநாதன், நண்டு, தீபக் ரமேஷ், பரமேஷ், காஜல் செளத்ரி, பீட்டர்.கே, சரத் ரவி, அக்ஷிதா போபையா, பிரியங்கா சந்திரசேகர், பரத் போபண்ணா, விஜிதா வசிதா என இந்த ஐந்து கதைகளில் நடித்திருக்கும் அனைத்து நடிகர், நடிகைகளும் கதாபாத்திரங்களுக்கு ஏற்ப நடித்திருக்கிறார்கள்.
குறிப்பாக யூகி சேதுவின் கதாபாத்திரமும், அவர் பேசும் வசனங்களும் கலகலப்பானவை, கவனிக்க வைப்பவை.
ஒன்றெல்லாம் படங்களில் கல்லூரி மாணவராக வரும் சின்னி ஜெயந்த், இதில் கல்லூரிப் பேராசிரியாக வருகிறார். முதிர் வயதில் வரும் காதலுக்கு இலக்கணமாக இருக்கிறார்.
ஐந்து படங்களின் இயக்குநர்களும் கதாபாத்திரங்களில் செயல்கள் வசனங்கள் போன்றவற்றை விட உணர்வுகளுக்கு முக்கித்து வம் கொடுத்துள்ளார்கள்.
ஆங்கில வழி படித்தவர்கள் இயக்குநர்களாக வரும்போது நேரும் சிக்கல் இது .சில காட்சிகளில் பெரும்பகுதி வசனங்களை ஆங்கிலத்திலேயே பேசிக் கொண்டிருக்கிறார்கள்.வெகு ஜனங்களுக்காக தாங்கள் படம் எடுக்கிறோம் என்பதை மறந்து விடுகிறார்கள். Instinct என்ற வார்த்தை பலமுறை வருகிறது. ஒரு முறை கூட அது உள்ளுணர்வு என்று சொல்லப்படவில்லை.எல்லாருக்கும் புரியுமா இது?
ஒளிப்பதிவாளர்கள் கீர்தன் பூஜாரி மற்றும் சந்தீப் அல்லூரி, ஐந்து கதைகளையும் வித்தியாசப்படுத்தி காட்டுவதோடு, தரம் மிக்கதாகவும் காட்சிப்படுத்தியுள்ளனர்.
ஆந்தாலஜி பட முயற்சியில் இன்னொரு பிரச்சினை என்னவென்றால் ஒரு படத்தைப் பார்க்கும் போது தொடர்ச்சியில்லாததால் முந்தைய படம் மறந்துவிடுகிறது.
சரவண சுப்பிரமணியத்தின் இசை படத்திற்கு மிகப்பெரிய பலம்.
ஹரீஷ் கோம்மே-வின் படத்தொகுப்பு தொய்வின்றிப் படத்தைப் பார்க்க வைக்கிறது.
ஐந்து இயக்குநர்களுமே தொழில்நுட்ப ரீதியில் தெளிவாக இருக்கிறார்கள். ஆனால்,நமது மண் சார்ந்த ,கலாச்சாரம் சார்ந்த கதைகளாக இல்லாமல் ஆங்கிலப் பாதிப்பில் உருவாக்கியது போல் உள்ளது.நமக்கான படங்களாக எடுக்கும்போது தான் அதற்கு அழுத்தமும் ஆழமும் கிடைக்கும் என்பதனை உணர வேண்டும்.
இந்த இயக்குநர்கள் கதைத் தளத்தில் மேலும் தங்களை வலுப்படுத்தி வளப்படுத்திக் கொண்டால் எதிர்காலம் உள்ளது.
மொத்தத்தில், ’வெளவல்ஸ்’ (Vowels) இளைஞர்களின் புதிய முயற்சி.


