மருத்துவர்களின் திறன் மேம்பாட்டு நூல்கள் : அப்போலோ மருத்துவமனையின் புதிய முயற்சி!

மருத்துவ அறிவின் மூலம் மருத்துவர்களின் திறனை மேம்படுத்துதலை நோக்கமாகக் கொண்டு அப்போலோ கிளினிக்கல் புக் சீரிஸின் ஒரு பகுதியாக அப்போலோ மருத்துவமனைக் குழுமம் ஆறு புத்தகங்களை வெளியிட்டுள்ளது.

அப்போலோ மருத்துவமனைக் குழுமம் தனது புதிய கல்வி முன்முயற்சியான – அப்போலோ கிளினிக்கல் புக் சீரிஸ் (Apollo Clinical Book Series) என்ற திட்டத்தை அறிவித்துள்ளது. நோயாளிகளின் பராமரிப்பை மேம்படுத்துவதற்காக, வளர்ந்து வரும் மருத்துவ நடைமுறைகள் மற்றும் புதிய சிகிச்சை முறைகள் குறித்த சமகால நுண்ணறிவுகளை மருத்துவர்களுக்கு வழங்கும் நோக்கில் ஆறு மருத்துவப் புத்தகங்கள் சீரீஸ் வெளியிடப்பட்டுள்ளன.

இந்த அப்போலோ கிளினிக்கல் புக் சீரிஸ் என்பது மருத்துவச் சிறப்பு, கல்வி மேம்பாடு, மற்றும் தொடர்ச்சியான தொழில்முறைக் கல்வி ஆகியவற்றில் அப்போலோவின் தொடர்ச்சியான அர்ப்பணிப்பைப் பிரதிபலிக்கிறது.

“கார்டியாலஜி அப்டேட் 2026” (“Cardiology Update 2026”) மற்றும் “கண்டெம்பரரி இஸ்யூஸ் இன் நெப்ராலஜி பிராக்டிஸ்” (“Contemporary Issues in Nephrology Practice”) ஆகிய புத்தகங்களுக்கான முன்னுரையை அப்போலோ மருத்துவமனைக் குழுமத்தின் நிறுவனரும் தலைவருமான டாக்டர் பிரதாப் சி. ரெட்டி எழுதியுள்ளார்.

”பிரெஸ்ட் கேன்சர்” (“Breast Cancer”) புத்தகத்திற்கான முன்னுரையை அப்போலோ மருத்துவமனைக் குழுமத்தின் துணைத் தலைவரான டாக்டர் பிரீதா ரெட்டி எழுதியுள்ளார். ”ஸ்ட்ரோக்” (“Stroke”) புத்தகத்திற்கான முன்னுரையை அப்போலோ மருத்துவமனைக் குழுமத்தின் நிர்வாக இயக்குநரான டாக்டர் சுனிதா ரெட்டி எழுதியுள்ளார்; “ஒபிசிட்டி அண்ட் இட்ஸ் கண்டெம்பரரி மேனேஜ்மென்ட்” (“Obesity and its Contemporary Management”) புத்தகத்திற்கான முன்னுரையை அப்போலோ ஹாஸ்பிடல்ஸ் எண்டர்பிரைசஸ் லிமிடெட் ப்ரொமோட்டர் டைரக்டரும் மற்றும் அப்போலோ ஹெல்த் கோ லிமிடெட் செயல் தலைவருமான டாக்டர் சோபனா காமினேனி எழுதியுள்ளார். “டயாபடீஸ் மெலிடஸ்” (“Diabetes Mellitus”) புத்தகத்திற்கான முன்னுரையை அப்போலோ மருத்துவமனைக் குழுமத்தின் இணை நிர்வாக இயக்குநரும் மற்றும் அப்போலோ ஹெல்த் & லைஃப்ஸ்டைல் லிமிடெட் நிர்வாக இயக்குநருமான டாக்டர் சங்கீதா ரெட்டி எழுதியுள்ளார்.

இந்த வெளியீட்டு விழாவில் உரையாற்றிய அப்போலோ மருத்துவமனைக் குழுமத்தின் நிறுவனரும் தலைவருமான டாக்டர் பிரதாப் சி. ரெட்டி அவர்கள் இவ்வாறு கூறினார், “உலகளாவிய சுகாதார முன்னுரிமைகளைத் தொடர்ந்து வடிவமைத்து வரும் முக்கிய சிகிச்சைத் துறைகளில் ஆதாரப்பூர்வமான, நடைமுறையான மற்றும் சமகால மருத்துவ அறிவை வழங்கும் நோக்கில் அப்போலோ கிளினிக்கல் புக் சீரிஸ் உருவாக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு புத்தகமும் முன்னணி அப்போலோ மருத்துவர்கள், கல்வியாளர்கள் மற்றும் துறை சார்ந்த நிபுணர்களின் பங்களிப்புகளை ஒன்றிணைத்து, விரிவான ஆய்வுகள், வளர்ந்து வரும் சிகிச்சை முறைகள், தற்போதைய வழிகாட்டுதல்கள் மற்றும் நிஜ உலக மருத்துவப் பார்வைகளை வாசகர்களுக்கு வழங்குகிறது.”

டாக்டர் பிரீதா ரெட்டி அவர்கள் கூறியதாவது, “பிரெஸ்ட் கேன்சர்” (Breast Cancer) குறித்த இந்தப் புத்தகம் மருத்துவ அறிவியலையும் நோயாளிகளின் விழிப்புணர்வையும் இணைக்கிறது, மேலும் இது முன்கூட்டியே ஆரோக்கியம் சார்ந்த முடிவுகளை எடுக்க ஊக்குவிப்பதோடு, ஆரம்பக்கால கண்டறிதல் விளைவுகளைக் கணிசமாக மேம்படுத்துகிறது என்ற செய்தியை வலியுறுத்துகிறது. சுகாதார வல்லுநர்கள் மார்பகப் புற்றுநோய் சிகிச்சையைத் தொடர்ந்து மேம்படுத்தி வரும் வேளையில், இந்த புத்தகத்தைப் போன்ற கல்வி சார்ந்த முன்முயற்சிகள் விழிப்புணர்வைப் பரப்புவதிலும், இதைப் பற்றிய தயக்கங்களைக் குறைப்பதிலும் மற்றும் தடுப்பு ஆரோக்கியத்தை ஊக்குவிப்பதிலும் முக்கியப் பங்கு வகிக்கின்றன.”

டாக்டர் சுனிதா ரெட்டி அவர்கள் இவ்வாறு கூறினார், “பக்கவாதம் (Stroke) என்பது நேரத்திற்கு முக்கியத்துவம் வாய்ந்த ஒரு நரம்பியல் அவசர நிலையாகும், இதில் உயிர் பிழைப்பதையும் மீண்டு வருவதற்கான விளைவுகளையும் மேம்படுத்துவதற்கு ஆரம்பக்காலக் கண்டறிதலும் உடனடி மருத்துவத் தலையீடும் மிகவும் முக்கியமானவை ஆகும். இந்தப் புத்தகம் பக்கவாதம் சார்ந்த சிகிச்சையில் தடுப்பு, கண்டறிதல், தீவிர மேலாண்மை மற்றும் மறுவாழ்வு பற்றிய விழிப்புணர்வை ஊக்குவிக்கும் ஒரு முக்கியமான கல்வி ஆதாரமாகச் செயல்படுகிறது.”

டாக்டர் ஷோபனா காமினேனி அவர்கள் இவ்வாறு கூறினார், “உடல் பருமன் (Obesity) என்பது ஒரு சிக்கலான, நாள்பட்ட நோயாகும், இது ஒரு விரிவான மற்றும் நீடித்த அணுகுமுறையைக் கோருகிறது. வளர்ந்து வரும் இந்த சவாலை எதிர்கொள்வதற்கான சமீபத்திய ஆதாரங்கள் மற்றும் பல்துறை உத்திகளை மருத்துவர்களுக்கு வழங்குவதற்கு இந்தப் புத்தகம் ஒரு சரியான நேரத்தில் மேற்கொள்ளப்பட்ட முயற்சியாகும்.”

டாக்டர் சங்கீதா ரெட்டி அவர்கள் மேலும் கூறியதாவது, “இந்தியா எதிர்கொள்ளும் மிகப்பெரிய சுகாதார சவால்களில் ஒன்றாக நீரிழிவு நோய் (Diabetes) தொடர்ந்து நீடிக்கிறது. நோயாளிகளின் விளைவுகளை மேம்படுத்துவதற்கும் நீண்டகால சிக்கல்களைக் குறைப்பதற்கும் மருத்துவ அறிவை வலுப்படுத்துவதும், ஆதாரப்பூர்வமான பராமரிப்பை ஊக்குவிப்பதும் முக்கியமானவை ஆகும்.”

அப்போலோ மருத்துவமனை குழுமத்தின் குழும மருத்துவ இயக்குநரான டாக்டர் அனுபம் சிபல் அவர்கள் கூறியதாவது, “இந்த முன்முயற்சி மருத்துவக் கல்வியை மேம்படுத்துவதிலும், மருத்துவச் சிறப்பை வளர்ப்பதிலும், மற்றும் உயர்தர, ஆதாரப்பூர்வமான அறிவைப் பரப்புவதன் மூலம் நோயாளிகளின் விளைவுகளை மேம்படுத்துவதிலும் அப்போலோவின் தொடர்ச்சியான அர்ப்பணிப்பைப் பிரதிபலிக்கிறது.”

அப்போலோ மெடிசின் முதன்மை ஆசிரியரும் மற்றும் மூத்த எலும்பியல் மற்றும் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை நிபுணருமான டாக்டர் ராஜு வைஷ்யா அவர்கள் இவ்வாறு கூறினார், “வேகமாக வளர்ந்து வரும் மருத்துவ அறிவியலுக்கும் அன்றாட மருத்துவ நடைமுறைக்கும் இடையே உள்ள இடைவெளியைக் குறைப்பதே அப்போலோ கிளினிக்கல் புக் சீரிஸ் முன்முயற்சியின் நோக்கமாகும். இந்த புத்தகங்களின் மூலம், சுகாதார வல்லுநர்களுக்கு எளிதில் கிடைக்கக்கூடிய, தற்போதைய மற்றும் பல்துறை சார்ந்த அறிவை வழங்கி அவர்கள் திறனை மேம்படுத்துவதை நாங்கள் நோக்கமாகக் கொண்டுள்ளோம்.”

இந்த நிகழ்வு ஆறு அப்போலோ கிளினிக்கல் புத்தகங்களின் ஆசிரியர்கள் மற்றும் இணை ஆசிரியர்களை ஒன்றிணைத்தது: டாக்டர் சஞ்சய் தியாகி, டாக்டர் சஞ்சீவ் ஜசுஜா, டாக்டர் வினித் சூரி, டாக்டர் அருண் பிரசாத், டாக்டர் எஸ். கே. வாங்னூ (டெல்லியில் இருந்து), டாக்டர் செங்கோட்டுவேலு, டாக்டர் ஒய். வி. சி. ரெட்டி, டாக்டர் ராஜீவ் அண்ணிகேரி, டாக்டர் சப்னா நங்கியா, டாக்டர் ராஜ் பழனியப்பன் (சென்னையில் இருந்து), டாக்டர் மனோஜ் அகர்வால், டாக்டர் கிருஷ்ணா பாட்டீல், டாக்டர் ஜடேஷ்வர் கவுட் (ஐதராபாத்தில் இருந்து), டாக்டர் நிதிஷ் குமார் மொஹந்தி, டாக்டர் சாம்பித் தாஸ் (புவனேஸ்வரில் இருந்து), டாக்டர் ஜோதி பாஜ்பாய், டாக்டர் சஞ்சய் காரே (நவி மும்பையில் இருந்து), டாக்டர் சவ்யசாச்சி பந்தோபாத்யாய் (கொல்கத்தாவில் இருந்து), டாக்டர் ரவிசங்கர் பட் (பெங்களூரில் இருந்து), டாக்டர் பி. சதீஷ் சந்திரா (ஜெயநகரில் இருந்து), டாக்டர் பிந்து மேனன் (நெல்லூரில் இருந்து).
இந்த அப்போலோ கிளினிக்கல் புக் சீரிஸ் முயற்சியானது, முதன்மை ஆசிரியர் டாக்டர் (பேராசிரியர்) ராஜு வைஷ்யா, இணை முதன்மை ஆசிரியர் டாக்டர் (பேராசிரியர்) அனுபம் சிபல் ஆகியோரால் வழிநடத்தப்பட்டது, இவர்கள் மருத்துவர்களை மையமாகக் கொண்ட இந்த உயர்தர வெளியீடுகளின் உருவாக்கத்திற்கு வழிகாட்டியுள்ளனர்.