நான் கள்ளனும் இல்லை… காதலனும் இல்லை! நடிகர் சௌந்தரராஜா

“தர்மதுரை” படத்தில் விஜயசேதுபதியின் தம்பியாகவும், “எனக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது” படத்தில், யங் டிராபிக் ராமசாமியாகவும் அனைவராலும் பாராட்டப்பட்ட மகிழ்ச்சியில் இருக்கிறார், நடிகர் சௌந்தரராஜா.   “கத்திச்சண்டை” படத்தில் விஷாலின் நண்பனாகவும், “கள்ளன்” படத்தில் முக்கிய கதாபாத்திரத்திலும், “ஒரு கனவு போல” படத்தில் கதைநாயகர்களில்ஒருவராகவும் நடித்துள்ளார் சௌந்தரராஜா. அடுத்தடுத்து படங்கள் வெளியாவது ஒரு பக்கம் இருக்க, நாயகனாக நடிக்க கதைகள் வந்துகொண்டிருப்பதில் மிக உற்சாகமாக  இருக்கிறார். ஆனால், ஒரு கனவு போல படத்திலும் மற்றும் “கள்ளன்” படத்திலும் சௌந்தரராஜாவின் கேரக்டர் பற்றி கசிந்துள்ள தகவல்கள் அவரை பரபரப்பிற்கு உள்ளாக்கி இருக்கிறது.   அது பற்றி சௌந்தரராஜாவிடம் கேட்டபோது, “ஒரு கனவு போல” படத்தில் நடித்தது நிஜமாகவே மகிழ்ச்சியான விஷயம். ஸ்ரீதர் சார், பாலசந்தர் சார், பாரதிராஜாசார், பாக்கியராஜ் சார்… படங்கள் போல கதாபாத்திரங்களை உளவியல் ரீதியாக சித்தரிக்கும் படங்கள் இப்போது வருவதே இல்லை. “ஒரு கனவு போல” அப்படிஒரு படமாக இருக்கும். கதாபாத்திரங்களுக்குள் ஏற்படுகிற உளவியல் பிரச்சினைகளை அழகாக சொல்லி இருக்கிறார் ’ஒரு கனவு போல’ படத்தின் இயக்குநர் விஜயசங்கர் சார். “ஒரு கனவு போல” படத்தில் என் கேரக்டர், கள்ளனா? காதலனா? என்பதைப்பற்றி இப்போதைக்கு நான் வெளியே சொல்லமுடியாது. படம்பார்த்துவிட்டு நீங்கள் சொல்லுங்கள்.   இயக்குநர்களில் ஆண், பெண் என்ற வேறுபாடெல்லாம் கிடையாது என்பதை இயக்குநர் சந்திரா அக்காவின் “கள்ளன்” படம் நிரூபிக்கும். “கள்ளன்” படத்தில்,நடித்தது நிஜமாகவே பெருமையான விசயம். .“ஒரு கனவு போல”,“கள்ளன்” இரண்டு படங்களுமே மிகவும் பேசப்படுகிற படங்களாக இருக்கும். இந்த இரண்டு படங்களிலும் என் கதாபாத்திரங்களும் பேசப்படும்.ஹீரோவாக நடிக்க கதைகள் கேட்டுக்கொண்டிருக்கிறேன். என்னைப் பொறுத்தவரை நான் நடிகன். என்னை நம்பி, என்னை ஹீரோவாக, வில்லனாக எப்படி நடிக்கஅழைத்தாலும் அந்த கதாபாத்திரங்கள் எனக்கு பிடித்திருந்தால் உடனடியாக சம்மதிப்பேன்.​​​​​​​​

நான் கள்ளனும் இல்லை… காதலனும் இல்லை! நடிகர் சௌந்தரராஜா Read More

பூனை கூட நடிச்சது சவாலான விஷயம்: மியாவ் நாயகன் சஞ்சய்

சிவகார்த்திகேயன், மாகாபா ஆனந்த் விஜய் டிவி வரிசையென்றால்​, சஞ்சய் சன் டிவி வரிசை.  விஜேவாக இருந்து  ‘​மியாவ்​’​ படத்தில் நான்கு ஹீரோக்களில் ஒருவராக அறிமுகமாகிறார். முதல்பட அனுபவம்?   செம ஜாலியா இருந்துச்சு. படத்துக்கு ஆடிஷன் வெச்சாங்க. மூணாவது ரவுண்ட்ல தான் செலக்ட் …

பூனை கூட நடிச்சது சவாலான விஷயம்: மியாவ் நாயகன் சஞ்சய் Read More

வில்லன் நடிகர்கள் கூட வெளிமாநில இறக்குமதியா: வில்லன் நடிகர்ஆர்யன் குமுறல்!

கஸ்தூரிராஜா மூலம் ‘ட்ரீம்ஸ்’ படத்தில் அறிமுகமான ஆர்யன், விஜய்யுடன் ‘திருப்பாச்சி’ யில் பான்பராக் ரவியாக நடித்தபிறகு  பான்பராக் ரவி என்கிற அந்தப் பெயரே ஒட்டிக் கொண்டு விட்டது. எங்கே போனாலும்அந்தப் பெயர் சொல்லியே  அழைக்கிறார்களாம். இனி ஆர்யனுடன் பேசுவோம்! கொஞ்சம் முன்கதை..?  …

வில்லன் நடிகர்கள் கூட வெளிமாநில இறக்குமதியா: வில்லன் நடிகர்ஆர்யன் குமுறல்! Read More

எனக்கு பெரிசா மியூசிக்கெல்லாம் தெரியாது : விஜய் ஆண்டனி

இசையமைப்பாளராக அறிமுகமாகி அந்தத் துறையிலேயே தனி இடம் பிடித்தவர் விஜய் ஆண்டனி. ஹீரோவாக மாறியபின் நடிப்பிலும் முத்திரை பதித்து வருகிறார். முன்னணி ஹீரோக்களுக்கு செம டஃப் ஃபைட் கொடுக்கும் விஜய் ஆண்டனியிடம் நம்பியார் படத்துக்கு இசையமைத்த அனுபவத்தைக் கேட்டோம். சந்தானத்தை பாட …

எனக்கு பெரிசா மியூசிக்கெல்லாம் தெரியாது : விஜய் ஆண்டனி Read More

ஆர்யா விட்ட டோஸ்… நம்பியார் படத்தில் ஸ்ரீகாந்திற்கு நேர்ந்த ஒரு தர்மசங்கடம்!

அறிமுகமானபோது எப்படி இருந்தாரோ அப்படியே இருக்கிறார் ஸ்ரீகாந்த். இளமையில் மட்டுமல்ல உற்சாகத்திலும்.. காரணம் முதன்முறையாக தயாரிப்பாளராகவும் காலடி எடுத்துவைத்திருக்கும் நம்பியார் படம் ஆகஸ்ட் 19ல் ரிலீஸாகவிருப்பதுதான். அறிமுக இயக்குநர் கணேஷா இயக்கத்தில் ஸ்ரீகாந்த், சந்தானம், சுனைனா நடிப்பில் உருவாகி இருக்கும் நம்பியார் …

ஆர்யா விட்ட டோஸ்… நம்பியார் படத்தில் ஸ்ரீகாந்திற்கு நேர்ந்த ஒரு தர்மசங்கடம்! Read More

நான் சினிமாவை விட்டு எங்கும் போகவில்லை: கௌதமி

மலையாளத்தில் வெளியான “ ஹிஸ் ஹைனஸ் அப்துல்லா , தமிழில் வெளியான இருவர், போன்ற படங்களுக்கு பிறகு.. மோகன்லாலுடன் கெளதமி இணைந்து நடித்திருக்கும் படம் “ நமது “ இது ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கு, மலையாளம் போன்ற மூன்று மொழிகளில் …

நான் சினிமாவை விட்டு எங்கும் போகவில்லை: கௌதமி Read More

பவர்ஸ்டாருக்காக பின்னணி இசையை மாற்றிய ரகுநந்தன்!

தென்மேற்கு பருவக்காற்று படம் மூலம் இயக்குநர் சீனு ராமசாமியால் தமிழ் திரையுலகுக்கு இசையமைப்பாளராக அறிமுகமானவர் தான் என்.ஆர்.ரகுநந்தன். முதல்   படத்திலேயே ‘கள்ளிக்காட்டில் பிறந்த தாயே’ என்கிற வைரமுத்துவின் வைர வரிகளை அருமையான பாடலாக்கி அதற்கு தேசியவிருதும் பெற்றுத்தந்தவர்.   தொடர்ந்து சுந்தரபாண்டியன், …

பவர்ஸ்டாருக்காக பின்னணி இசையை மாற்றிய ரகுநந்தன்! Read More

சிரித்து சிரித்து என்னாலேயே பலமுறை ரீடேக் ஆனது; ‘அட்ரா மச்சான் விசிலு’ ஒளிப்பதிவாளர் காசி விஸ்வா..!

  வரும் ஜூலை-7ஆம் தேதி சிவா-பவர்ஸ்டார் சீனிவாசன் நடிப்பில் ‘அட்ரா மச்சான் விசிலு’ படம் வெளியாக இருக்கிறது. திரைவண்ணன் இயக்கியுள்ள இந்தப்படத்திற்கு என்.ஆர்.ரகுநந்தன் இசையமைத்துள்ளார். இந்தப்படத்தில் ஒளிப்பதிவாளராக பணியாற்றியுள்ளவர் காசி விஸ்வா.. இயக்குநர் ராம.நாராயணனின் ஆஸ்தான ஒளிப்பதிவாளராக விளங்கிய என்.கே.விஸ்வநாதனிடம் சீடராக …

சிரித்து சிரித்து என்னாலேயே பலமுறை ரீடேக் ஆனது; ‘அட்ரா மச்சான் விசிலு’ ஒளிப்பதிவாளர் காசி விஸ்வா..! Read More

அனுஷ்கா-த்ரிஷாவுக்கு ஜோடியாக நடிப்பதுதான் என் லட்சியம் : விசிலடிக்கும் பவர்ஸ்டார்..!

திரைவண்ணன் இயக்கத்தில் மிர்ச்சி சிவா நடிப்பில் சினிமா பின்னணியில் உருவாகி இருக்கும் ‘அட்ரா மச்சான் விசிலு’ படத்தில் ‘சூப்பர் ஸ்டார்’ கேரக்டரில் பட்டையை கிளப்பி இருக்கிறாராம் பவர்ஸ்டார். வருகிற ஜூலை-7ஆம் தேதி படம் ரிலீஸாக இருக்கும் இந்தப்படத்திற்கு தணிக்கை குழு ‘யு’ …

அனுஷ்கா-த்ரிஷாவுக்கு ஜோடியாக நடிப்பதுதான் என் லட்சியம் : விசிலடிக்கும் பவர்ஸ்டார்..! Read More

திரையுலகில் அறிமுகமாகும் ‘மெட்ரோ’ சிரிஷ்!

அண்மையில் வந்துள்ள   ‘மெட்ரோ’ படத்தின் மூலமாக அறிமுகமாகி இருக்கிறார் சிரிஷ். இதுவரை இப்படத்தைப் பார்த்த அனைவருமே படத்தின் கதையம்சம், நடிப்பு, ஒளிப்பதிவு, உருவாக்கம் உள்ளிட்ட விஷயங்கள் தத்ரூபமாக இருப்பதாக பாராட்டியிருக்கிறார்கள். இப்படத்தில் நடித்த அனுபவம் குறித்து சிரிஷ் “எனக்கு 10ம் வகுப்பு …

திரையுலகில் அறிமுகமாகும் ‘மெட்ரோ’ சிரிஷ்! Read More