லோகேஷ் கனகராஜ், வாமிகா கபி , சஞ்சனா ஏ.கே. கஸ்தூரி ராஜா , தலைவாசல் விஜய், கிரிஷ் தயால்,அவினாஷ் ரகுதேவன் ,
ஜவஹர் சக்தி , ஷரத் ரவி, பிரணவ் தியோஃபைன் , ஏ. ராஜரிஷி , சிங்காரம் தேவி பிரசாத், அட்டுல் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
கதை, திரைக்கதை & இயக்கம்: அருண் மாதேஸ்வரன், ஒளிப்பதிவு: முகேஷ் ஜி, படத்தொகுப்பு: ஜி. கே. பிரசன்னா,* கலை இயக்கம்: கண்ணன் எஸ்., சண்டைப் பயிற்சி: பிசி ஸ்டண்ட்ஸ், சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது.
நாயகன் லோகேஷ் கனகராஜின் சாதாரண வாழ்க்கையை சிறைவாசம் அசாதாரணமானதாக மாற்றுகிறது.போலீஸ் ஆயுதங்களைத் திருடுகிறார்கள் . அதுவே பெரிய பலமாக மாறுகிறது. தொடரும் அவரது குற்ற செயல்களால் காவல்துறை அவரைத் துரத்துகிறது. காவல்துறையிடம் இருந்து தப்பித்து ஓடும் பயணத்தில், பார் பாடகி சஞ்சனாவைச் சந்திக்கிறார். அவருடனான நட்பு அவரது மனநிலையை மாற்றுகிறது.ஒரு சிக்கலான சூழலில் போலீஸின் துப்பாக்கி சூட்டுக்கு சஞ்சனா இறந்து விடுகிறார். தப்பித்து ஓடும் லோகேஷ் கனகராஜ்,பாலியல் தொழிலாளி யாக இருக்கும் வாமிகா கபியைச் சந்திக்கிறார். அந்தக் கொடுமையில் இருந்து அவரை மீட்கிறார்.காப்பாற்றப்பட்ட வாமிகா கபி, போக்கிடமில்லாமல் லோகேஷ் கனகராஜுடன் வந்து விடுகிறார்.போலீஸ் துரத்தும் ஓட்டத்தில் ஓடிக்கொண்டிருக்கும் லோகேஷ் உடன் அவரும் இணைந்து ஓடுகிறார்.இந்த ஓட்டத்தில் பல கொலைகள் நடக்கின்றன. துப்பாக்கி சூடுகள் பொறி பறக்கின்றன.போலீசுக்கும் குற்றவாளிகளுக்கும் இடையே நடக்கும் யுத்தம் தான் தான்இந்த ‘டிசி’.
D C என்றால் என்றால் என்ன? D – தேவதாஸ், C – சந்திரா என்ற இருவரின் கதை எனவும் கூறலாம்.
அழுத்தப்பட்ட ஒருவன் போலீசின் அத்துமீறல்களால் அடக்க முடியாதவனாக மாறுகிறான் என்பதை பிரதான கதையாக எடுத்துக் கொண்டு இயக்கி இருக்கிறார் அருண் மாதேஸ்வரன்.நாயகனாக அறிமுகமாகியிருக்கும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ், தேவதாஸ் என்ற கதாபாத்திரத்தில் பளீரென்று அதிரடியாக அறிமுகமாகியிருக்கிறார்.பேச்சல்ல செயல் மட்டுமே என்று அதிரடி காட்சிகளில் மிரட்டுகிறார் அவரது அலட்சிய தலைமுடியும் இறுக்கமான முகத்தோற்றமும் உடல் மொழியும் வசனங்கள் எல்லாம் இல்லாமலேயே அந்தப் பாத்திரத்தின் உக்கிரத்தைப் பார்வையாளர்கள் மத்தியில் பதிய வைத்து விடுகின்றன.நடிகராக லோகேஷ் வெற்றி பெற்றுவிட்டார் என்றே கூறவேண்டும்.
நாயகியாக நடித்திருக்கும் வாமிகா கபி, பாலியல் தொழில் செய்யும் தனது நரக வாழ்க்கையை வசனங்கள் இல்லாமலே தன் உடல்மொழி மூலம் காட்டிப் பதிய வைத்து விடுகிறார்.
இன்னொரு நாயகியான சஞ்சனா.ஏ.கே, பாந்தமான முகத்துடன் வந்து பாட்டு பாடுகிறார்.அவருக்கு ஏற்பட்ட முடிவு படம் பார்ப்பவர்களை அதிர்ச்சிஅடைய வைக்கும்.
தலைவாசல் விஜய், கஸ்தூரி ராஜா, கிரிஷ் ட்ய்ஹயால், அவினாஷ் ரகுதேவன், ஜவஹர் சக்தி, ஷரத் ரவி, பிரணவ் தியோஃபைன், ஏ.ராஜரிஷி, பாலாஜி தேவிபிரசாத், அட்டுல் போன்ற அனைத்து நடிகர்களும்ஏற்றுக் கொண்டுள்ள துணைப் பாத்திரங்களுக்கு வலு சேர்த்துள்ளார்கள்.
கதையின் ஓட்டத்தையும் ஆக்ஷன் காட்சிகளையும் ரசிக்கும்படி காட்சிகளாக மாற்றிக் கதையின் தீவிரத்தை உணர வைத்துள்ளார் ஒளிப்பதிவாளர் முகேஷ்.ஜி,.
அனிருத்தின் பின்னணி இசை படத்தின் பெரும்பலமாக இருக்கிறது .ஆக்ஷன் காட்சிகளில் தீம் தரிகிட ரிதம் மூலமே டெம்போவை ஏற்றியுள்ளார்.ஒவ்வொரு காட்சிக்குப் பின்னும் ஒளிந்து கொண்டு அனிருத் காட்சிகளைப் பலப்படுத்தி உள்ளார்.
படம் முழுவதும் வன்முறைக் காட்சிகள் நிறைந்துள்ளன.எதார்த்தத்திற்கு நெருக்கமான சண்டைக் காட்சிகள் தடதடக்க வைக்கின்றன.
துளிக் கூடத் தொய்வின்றித் தொகுத்துள்ளார் படத்தொகுப்பாளர் ஜி. கே. பிரசன்னா.
ரத்தம், சதை ,குத்து,வெட்டு, ,உறுப்புகளைத் துண்டித்தல் ,துப்பாக்கிச் சூடு ,தெறிக்கும் குண்டுகள் என்று வன்முறையின் ஆட்டத்தை அதகளப்படுத்தி இந்தப் படத்தை உருவாக்கி இருக்கிறார் இயக்குநர் அருண் மாதேஸ்வரன்.
, போர்க்களத்தில் பூப்பூப்பது போல இத்தனை வன்முறை நடுவே தேவதாஸ் -சந்திரா காதல் காட்சிகளை ரசிக்க வைக்கிறார் இயக்குநர்.
படத்தில் ஏதுமற்றவர்களின் வன்முறையை நியாயப்படுத்தி உள்ளார் இயக்குநர்.
எதார்த்தம் என்கிற பெயரில் அதீத வன்முறையும் ஆபாச பேச்சு மொழிகளும் உள்ளன. இது முழுக்க முழுக்க வயது வந்தவர்களுக்கான படம் என்பதை மறந்துவிட வேண்டாம்.
மொத்தத்தில், ‘டிசி’ ரத்தத்தில் எழுதப்பட்ட காதல் கதை.


