ஸ்பெயினை கலக்கிய தமிழிசைப் பயணம்!

ஐரோப்பிய சுற்றுலா பேருந்தில் ஓர் இசைப்பயணத்தை  நடத்தி விட்டு வந்திருக்கிறார் தமிழக இசைக் கலைஞர் ‘செல்லோ’ செல்வராஜ்(cello Selvaraj) தமிழகத்தில் அந்தக் கால கே.வி,  மகாதேவன்  , தொடங்கி எம்.எஸ்.விஸ்வநாதன், இளையராஜா, ஏ.ஆர்.ரகுமான் இந்தக் கால அனிருத் வரை 250 இசையமைப்பாளர்களிடம் இசைக்கருவி வாசிப்பவராகப் பணிபுரிந்த அனுபவம் பெற்றவர் ‘செல்லோ’ செல்வராஜ் . வயலின் முதல் “செல்லோ ” இசைக்கருவி வரை 14 இசைக்கருவிகளை வாசிக்கத் தெரிந்தவர்  இவர். தமிழை தாண்டி தெலுங்கு,கன்னடம்,மலையாளம்,ஒரியா,பெங்காளி ஹிந்தி திரைத்துறைகளுக்கும் பங்காற்றியவர். அதனால் எல்லா இசையமைப் பாளர்களிடமும்  மோஸ்ட்வாண்டட் இசைக் கலைஞர் .  மதுரையை பூர்வீகமாக கொண்ட  இவரது தந்தையும் பல இசையமைப்பாளர்களுக்கு வயலின் வாசித்தவர். சிறு வயதிலேயே இசை ஆர்வம் கொண்ட செல்வராஜ் இடையில் ஒருதிசை மாற்றமாக  திரைப்படங்களில் நடித்தார். கவிஞர் வாலி இயக்கத்தில் வடமாலை திரைப்படத்தில் நாயகனாக அறிமுகமான செல்வராஜ் ,நாயகனாக  20  படங்களில்நடித்துள்ளார். அவரது திரைத்தோற்றத்துக்கு கமலஹாசன் பிண்னனி பாடகராக பாடிய நிகழ்வும் …

ஸ்பெயினை கலக்கிய தமிழிசைப் பயணம்! Read More