‘அர்த்தநாரி’ விமர்சனம்

arthanari1குழந்தைத் தொழிலாளர் மீட்பு பற்றிய கதை. சினிமாவுக்கென்று காதல் கசமுசா மசாலா கலந்து படமாக்கியிருக்கிறார்கள.

பகைவர்களால் தாய் தந்தை கொலை செய்யப்பட தனியனாகிறார் நாயகன் ராம்குமார். சிறுவயதில் பெற்றோரை இழந்த நாயகன் , நாசர் வைத்துள்ள குழந்தைகள் காப்பகத்தில் வளர்ந்து ஆளாகிறார். வளர்ந்தவர்   அருந்ததியைக் காதலிக்கிறார் .அருந்ததியோ ஒரு போலீஸ். பல வழக்குகளில் துப்பு துலக்க அலைபவர்.  ஒருநாள் திடீரென நாசர் இறக்கிறார். இயற்கை மரணம் என்று நினைத்த நாயகனுக்கு அது கொலை என்பது  பிறகு தெரிகிறது.

கொலைக்கான காரணத்தைத் தேடிய போது குழந்தைகளை விலைக்கு வாங்கி கொத்தடிமைகளாய் வேலைக்கு வைக்கப் பட்டிருந்த சிறுவர்களை மீட்கப் போனவருக்கு இந்த முடிவு என்பது புரிய வருகிறது.

இப்படியான குழந்தை கடத்தல்,இளம்பெண்கள் கடத்தல் என்கிற நெட் ஒர்க்கின் மூலகர்த்தாவை ராம்குமார்  மற்றும் போலீஸ் காதலி அருந்ததி கண்டு பிடிக்க முயற்சி செய்கிறார்கள். இம் முயற்சியில் துரோகி போலீஸ் ஒருவன் அருந்ததியை போட்டுத்தள்ள முயல்கிறான். முடிவு என்ன  என்பதே ‘அர்த்தநாரி’ க்ளைமாக்ஸ்.

போலீசாக வரும் அருந்ததியை இவ்வளவு கவர்ச்சி காட்டி மலிவாக்கியிருக்க வேண்டாம். அவருக்குப் பலவித பாவங்கள் காட்ட வாய்ப்பு.  நாயகன் புதுமுகம் ராம்குமார். கொடுத்த வேலையை சரியாகச் செய்துள்ளார். நாசர் சிறுவர் இல்லத்து செல்வ மாணிக்கமாக வருகிறார். கூலிப்படைத் தலைவனாக மொட்டை ராஜேந்திரன்.

ஒரு பரபரப்பான ஆக்ஷன் த்ரில்லராக வந்திருக்க வேண்டிய படத்தை வணிக மசாலா கலந்து நீர்த்துப் போக வைத்து விட்டார்கள். குழந்தைத் தொழிலாளர் மீட்பு என்கிற நோக்கம் படத்துக்குப் பலம்தான்.ஆனால்  சொன்னவிதம் பலவீனம். இயக்குநர்  சுந்தர இளங்கோவன் அடுத்த முயற்சியில் குறைகளை சரி செய்யட்டும்.

ஒரு நல்ல படம் வணிக சமரசங்களால் சாதாரண படமாகியுள்ளதை உணர முடிகிறது. aruntathi