இளமையை மீட்டெடுக்கும் ஓர் அற்புத நிலையம்…!

tamira 28012016 35இளமையாக இருக்க யார் தான் விரும்ப மாட்டார்கள்.. எப்பாடு பட்டேனும் அழகைத் தக்க வைத்துக் கொள்ளவும், இளமையை மீட்டெடுக்கவும் எல்லோரும் ஏதேனும் ஒரு முயற்சியில் ஈடுபடுகிறோம்.

ஹாலிவுட் மற்றும் இந்திய நடிகர்-நடிகைகள் அழகுக்காக அறுவை சிகிச்சை செய்து கொள்வதையும் நாம் படிக்கிறோம். அதற்கான சாத்தியம் உள்ளவர்கள் மட்டும் தான் இத்தகைய சிகிச்சைகளை மேற்கொண்டு தங்களை தன்னம்பிக்கையுடன் கூடிய இளமையாக வைத்திருக்க முடியுமா? என்ற கேள்வி நம்மில் பலருக்கும் உண்டு. இனி அழகாக காட்டிக் கொள்ள அதற்கான அறுவை சிகிச்சைக்கு பொருளாதார வசதிகள் மட்டுமே தடையில்லை என்ற நிலையை உருவாக்க வந்துள்ளது தான் தாமிரா கலைநயம் மையம்..
உள்ளத்தையும் உடலையும் கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்ள என்னவெல்லாம் செய்யலாம்… உடற்பயிற்சி மேற்கொள்ளுதல், முறையான உணவு, சீரான தூக்கம், நேர்மறை எண்ணங்கள் போன்றவற்றை சொல்லலாம். ஆனால் நம்பமுடியாத, அசாதாரணமான மாற்றங்கள் வேண்டும் என்றால் அது அறுவை சிகிச்சையால் மட்டுமே சாத்தியம்.. அத்தகைய இளமையை திரும்ப பெறும் நிலைக்கு அடித்தளம் அமைத்துக் கொடுப்பதற்காகவே சென்னையில் உருவாக்கப்பட்டுள்ளது தாமிரா கலைநயம் மையம். அனைத்து தரப்பு மக்களும் அணுகும் வண்ணம் கடந்து போன இளமையை கண்முன்னே கொண்டு வரும் கலையில் தன்னை அர்ப்பணித்துக் கொண்டுள்ளது தாமிரா.
tamira 28012016 25சென்னை கதீட்ரல் சாலையில் அமைந்துள்ள இந்த தாமிரா கலைநயம் மையத்தை பிரபல அழகுக்கலை அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர். கே. ராமச்சந்திரன் திறந்து வைத்தார். சிம்ஸ் மையத்தின் இயக்குநர் மற்றும் துணைத் தலைவரும், எஸ்ஆர்எம் பல்கலைக்கழகத்தின் மருத்துவ துறைக்கான துணைவேந்தருமான டாக்டர் கே. ஸ்ரீதர், காவேரி மருத்துவமனையின் செயல் இயக்குநர் மற்றும் முதன்மை எலும்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் அரவிந்தன் செல்வராஜ் ஆகியோர் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.
உள்ளத்தாலும், உடலாலும் இளமையாக இருக்க வேண்டும் என்பது மனிதர்களின் அடிப்படையான விருப்பம் ஆகும். இந்த எண்ணத்திற்கு வலுசேர்க்க வருகை தந்துள்ளது தான் தாமிரா. சர்வதேச தரத்தில், நவீன தொழில்நுட்ப வசதிகளுடன், மேல்தட்டு மக்களுக்கு கிடைக்கும் வாய்ப்புகளையும் அனைத்து தரப்பினருக்கும் கொண்டு சேர்க்கும் ஒரு சேவையாக இந்த கலைநயம் மையத்தை உருவாக்கி உள்ளனர்.
இளமையை மீட்டெடுக்கும் அறுவை சிகிச்சையில் 16 ஆண்டுகாலம் அனுபவம் வாய்ந்த பிரபல டாக்டர். ஜெயந்தி ரவீந்திரன் தான், தாமிரா கலைநயம் மையத்தை பார்த்து பார்த்து உருவாக்கியவர். தகுதியான சேவை நமது நாட்டு மக்களுக்கும் கிடைக்க வேண்டும் என்ற அவரது ஆர்வம் தான், தாமிரா கலைநயம் மையமாக உருவெடுத்துள்ளது. நோயாளிகளின் முகத்தில் மகிழ்ச்சியை பார்ப்பது மட்டுமே ஒட்டுமொத்த சேவையின் நோக்கமாக உள்ளதாக கூறுகிறார் டாக்டர் ஜெயந்தி ரவீந்திரன். நம்மை சுற்றியுள்ள மக்களின் வாழ்வில் மாற்றத்தை ஏற்படுத்துவதே எங்களின் இலக்கு என்கிறார் அவர்.
3500 சதுர அடி பரப்பளவில் பரந்து விரிந்துள்ள தாமிரா கலைநயம் மையம் மனதை சாந்தப்படுத்துவதற்கான வடிவமைப்புடன் கட்டப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. தாமிராவுக்கு வருகை தரும் ஒவ்வொருவரையும் தனிப்பட்ட முறையில் அணுகி அவர்களின் தேவைகளை கேட்டறிந்து, அவர்களுக்கு சேவை செய்யும் வகையில் தாமிரா கலைநயம் மையம் உருவாக்கப்பட்டுள்ளது. முகம், உடல் போன்ற பகுதிகளை வாடிக்கையாளரின் தேவைக்கு ஏற்ப அழகுறச் செய்யும் நவீன கருவிகள், அறுவை சிகிச்சையை பாதுகாப்பாக மேற்கொள்வதற்கான உபகரணங்கள் போன்றவை இதன் சிறப்பம்சம் ஆகும். அறுவை சிகிச்சையின் அதிஅற்புத உன்னதத்தை பார்க்க வேண்டும் என்பவர்கள் ஒருமுறை தாமிரா கலைநயத்திற்கு வந்தால் போதும். ஓர் நாள் கூட தங்க வேண்டிய அவசியம் இல்லாதவை தான் இங்குள்ள அறுவை சிகிச்சை முறைகள் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா.. அறுவை சிகிச்சை முடிந்து இயல்புறும் காலம் என்பது ஆச்சர்யமூட்டும் வகையில் வெகுவெகு குறைவான காலகட்டம் ஆகும்.
tamira 28012016 27டாக்டர் ஜெயந்தி ரவீந்திரன் பற்றி
பெல்ஜியம், ஜெர்மனி, சிங்கப்பூர் போன்ற நாடுகளில் சர்வதேச புகழ் பெற்ற மருத்துவர்களான டாக்டர் டான்னர்ட், டாக்டர் குபிஸ்க், டாக்டர் வோபெல்ஸ் வூ போன்றவர்களிடம் பயிற்சி பெற்று இணைந்து பணியாற்றிய சிறப்புக்குரியவர் டாக்டர். ஜெயந்தி ரவீந்திரன். டெல்லி எய்ம்ஸ், ஆஸ்திரேலியாவின் க்ளீவ்லேண்ட் மருத்துவமனைகளில் முத்திரை பதித்தவர் இவர். இங்கிலாந்தின் எடின்பர்க்-ல் உள்ள அறுவை சிகிச்சையாளர்களுக்கான ராயல் கல்லூரி மற்றும் இந்திய பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை மையத்தின்உறுப்பினர் என்பது கூடுதல் சிறப்பாகும்.
இந்தியாவிலேயே கேச சிகிச்சைக்கான பெயர் பெற்ற நிபுணர் டாக்டர் ஜெயந்தி ரவீந்திரன் என்பது குறிப்பிடத்தக்கது. சண்டிகரில் உள்ள கேச அறிவியல் மையம் மற்றும் கொலராடோவில் உள்ள கேச மாற்று மையத்தில் சான்றிதழ் பெற்றவர் இவர்.
​​