நட்சத்திர நடிகர்களுக்கு சம்பளம் என்ற பெயரில் பெரிய தொகை ஒதுக்கப்படுகிறது – ராதாரவி

wanted-adoசென்னைஆர்.கே.வி.ஸ்டூடியோவின் பிரிவியூ திரையரங்கில் முத்துக்குமார் வான்ட்டேட் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் மாலதி ஜெயமணி மற்றும் விஜயலட்சுமி வேல்முருகன் குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தனர். சிறப்புவிருந்தினர்களாக கலைப்புலி எஸ்.தாணு,ராதாரவி, கங்கைஅமரன்,பெப்சிசிவா, இயக்குநர் அரவிந்த்ராஜ், ஜாக்குவார் தங்கம்‌,பாடகர் நரேஷ் ஐயர், இயக்குநர் எஸ்.என்.சக்திவேல், கே..எஸ்.ஜி.வெங்கடேஷ்,தயாரிப்பாளர் ஜே.எஸ்.கே.சதிஷ்குமார்,பி.ஜெகதீஷ்‌,சி.டி.பாண்டி,அசோக் லோதா,நடிகர் செளந்தரராஜா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.s

இப்படத்தின் டிரைலரை நடிகர் ராதாரவி வெளியிட, கங்கை அமரன் பெற்றுக்கொண்டார்

இசைத்தகட்டினை கங்கை அமரன் வெளியிட பின்னணி பாடகர் நரேஷ் ஐயர் பெற்றுக்கொண்டார்

விழாவில் பேசிய கங்கை அமரன்‌, “மலேசியாவிலிருந்து வந்திருக்கும் இந்தப் படக்குழுவினர், இங்கு  வெற்றி பெற வேண்டும், முன்பெல்லாம் மலேசிய வாசுதேவன் போன்றோர் இங்கு வெற்றி பெறுவதற்கு கஷ்டப்பட்டார்கள்‌.ஆனால் இப்போது தமிழ் சினிமாவின் டிரண்ட் மாறிவிட்டது. திறமையுள்ளவர்கள் ஜெயித்துக்கொண்டிருக்கிறார்கள். இதனால் இப்படக்குழுவினரும் வெற்றி பெற்று தமிழ் சினிமாவின் உச்சத்தை அடைய வேண்டும் “என வாழ்த்தினார்

 இதனைத்தொடர்ந்து பேசிய ராதாரவி,குறைந்த பட்ஜெட்டில் திரைப்படம் எடுக்க கேட்டுக்கொண்டார். பெரிய பட்ஜெட் படங்கள் எளிதாக வெற்றி பெறுவதில்லை என்றும் காரணம் உச்ச நட்சத்திர நடிகர்களுக்கு சம்பளம் என்ற பெயரில் பெரிய தொகை ஒதுக்கப்படுகிறது எனக் கூறினார். இதனால் அதுபோல் அல்லாமல் சிறிய பட்ஜெட் படங்கள் எடுத்து வெற்றி பெற கேட்டுக்கொண்டார். தமிழ்நாட்டைச் சேர்ந்த நடிகை நடிகர்களை பயன்படுத்த வேண்டும் என்றார்.