ஓட்டலைக் கைவிட்ட கருணாஸ், தொடரும் இன்னொரு கருணா!

karunas-Profile-Imageநடிகர் கருணாஸ்   ஓட்டல் ஒன்று வைத்திருந்தார். சினிமாவில் பிசியானதும் அதை மூடிவிட்டார். அதேபெயரில் சாலிக்கிராமத்தில் ‘கருணாஸ் நாண்’  என்கிற பெயரில் ஒரு ஓட்டல்  இப்போது இயங்கி வருகிறது.

நடிகர் கருணாசைப் பார்ப்பவர்கள் எல்லாரும் உங்கள் ஓட்டலில் சாப்பிட்டேன் என்று கருத்து சொல்லி வருகிறார்களாம். அப்போது அவர் ,’நான் ஓட்டலை விட்டு விட்டேன் ‘என்பாராம்.சில நேரம்  விளக்கம் கொடுக்க நேரமில்லாத  பரபரப்பான சமயங்களில்உங்கள் ஓட்டலில் சாப்பிட்டேன் என்றால்  ‘அப்படியா ? ‘என்பாராம் சமாளிப்பதற்காக.

‘கருணாஸ் நாண்’ என்னும் ஓட்டலை நடத்தி வருபவர் வெற்றிவேல் முருகன் இவரது இயற்பெயர் செந்தில் கருணா.  மன்னார்குடிக்காரர். இவர் ஜெஜெ  டிவி, விஜய்  டிவிகளில் தொழில் நுட்பப் பிரிவில்  வேலை பார்த்தவர். சென்னையில் இரவுநேரங்களில் வியாபாரத்தை முன்னிட்டு இட்லி போடமாட்டார்கள். இரவுநேரங்களில் தோசைதான் இருக்கிறது என்பார்கள்.அதில்தான் அதிக லாபம் என்றுதோசைதான் இருக்கிறது  என்பார்கள். இட்லி கேட்டால் கிடைக்காது.எல்லா ஓட்டல்களிலும் இப்படியே சொன்னதால் ஒரு உணர்ச்சிகர முடிவெடுத்து  வேலையை விட்டுவிட்டு  2005 -ல் ஓட்டலைத் தொடங்கினேன். எங்கள் ஓட்டலில் இரவு 11 மணிக்கும் இட்லி கிடைக்கும்.

முன் அனுபவம் இல்லாமல்தான் தொடங்கினேன்.எங்கள் அம்மாவைக் கேட்டுத்தான் எல்லா பக்குவமும் தெரிந்து கற்றுக்கொண்டு  எல்லா உணவையும் தயாரிக்கிறோம். அதுவே வீட்டில் தாங்கள் உண்ணும் அம்மா சாப்பாடு போல இருக்கிறது என்று சாப்பிடுபவர்கள்  பாராட்டுகிறார்கள். எங்களுக்கு வாடிக்கையாளர்கள் பெருகியிருக்கிறார்கள்.  நாங்கள்  49 ரூபாய்க்கு  வழங்குகிற ‘அம்மா சாப்பாடு’ நல்ல வெற்றி பெற்றுள்ளது.சாதாரண மக்களுக்கான தரமான சாப்பாடு என இதற்கு நல்ல வரவேற்பும் பாராட்டும் கிடைத்துள்ளன.

கருணாஸ் பெயர்க் குழப்பம் நீங்கவே ‘கருணாஸ் நாண்’  என்று பெயர் வைத்தேன்.ஆனாலும் இன்னும் இதை அவர் ஓட்டல் என நினைக்கிறார்கள்.அதற்கும் இதற்கும் சம்பந்தமில்லை.

karuna-nanகருணாஸ் என் நீண்டகால நண்பர்தான். அவரை ‘பாப் சிங்கராக ‘இருந்த  காலத்திலிருந்து எனக்குத் தெரியும்.நாங்கள் ஜெஜெ  டிவியில் வேலை பார்த்திருக்கிறோம்.

ஒருமுறை இங்கு வந்தவர் என்னால் தொடர்ந்து நடத்த முடியவில்லை.நீங்கள் அதே பெயரில் நடத்துவது மகிழ்ச்சிஎன்றார்.

எங்கள் ஓட்டலில் இரவும் இட்லி கிடைக்கும்.மென்மையாக  இருக்கும்,எளிதில் ஜீரணமாகும் .எனவேதான்  அருகிலுள்ள விஜயா,சூரியா ,வாஸன் போன்ற பிரபல மருத்துவமனை டாக்டர்கள் எல்லாம் கூட எங்கள் ஓட்டல் இட்லியைப் பரிந்துரைக்கிறார்கள்.

 

வடிவேல்,செந்தில்,பசுபதி, இயக்குநர் ஹரி,கவிஞர் நா.முத்துக்குமார் போன்ற சாலிக்கிராம்ம்,விருகம்பாகம் பகுதியில் உள்ளவர்கள் வீட்டினர்  எங்கள் இட்லி பிடித்துப்போய் எங்கள் வாடிக்கையாளர்கள் ஆகிவிட்டார்கள்.. அவர்கள் வீடுகளுக்குக் கூட சப்ளை செய்து வருகிறோம்.

இப்போது கேகே நகரிலும்  இன்னொரு கிளை தொடங்கியுள்ளோம். 2005-ன் எங்கள் முதல் வாடிக்கையாளர் கே.கே.விஜயகோபாலை அழைத்து திறப்பு விழா செய்தோம்.சென்னை முழுக்க கையேந்தி பவனைப்போல சிறிய அளவில் சுத்தமான ருசியான ஓட்டல்கள் 25 தொடங்கவுள்ளோம்.” என்கிறார்.