காய்கறி மார்கட் பின்னணியில் நடக்கும் கதை ‘தங்கரதம்’

thangaradham1

என்.டி.சி. மீடியா மற்றும் வீ கேர் புரொடக்சன் சார்பில் வர்கீஸ் தயாரிக்கும் படம் “ தங்கரதம் “

எனக்குள் ஒருவன், ஸ்டாபபெரி போன்ற படங்களில் நடித்த வெற்றி இந்த படத்தில்  நாயகனாக நடிக்கிறார். நீரஜா நாயகியாக  நடிக்கிறார். மற்றும் சௌந்தர்ராஜன், நான்கடவுள் ராஜேந்திரன், ஆடுகளம் நரேன், லொள்ளு சபா சாமிநாதன், பேபி தீபஸ்ரீ ஆகியோர் நடிக்கிறார்கள். மற்றும் டிஸ்கோ சாந்தியின் சகோதரி சுஜித்ரா ஒரு பாடலுக்கு நடனமாடி இருக்கிறார்.

ஒளிப்பதிவு – ஜேக்கப் ரத்தினராஜ்                                                                                         இசை-டோனி பிரிட்டோ ( இவர் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணனின் உதவியாளர்  )

பாடல்கள்                     –        யுகபாரதி, பாலமுருகன்.  கதை, திரைக்கதை, வசனம், இயக்கம்    –        பாலமுருகன்

இவர் இயக்குநர் ஜெகனிடம் உதவி இயக்குநராகவும், ராமன் தேடிய சீதை,புதியகீதை போன்ற படங்களில் இணை இயக்குநராகவும், கோடம்பாக்கம் படத்தில் இணை இயக்குநராகவும் வசனகர்த்தாவாகவும் பணியாற்றியவர்.

அவர் இயக்கும் முதல் படம் இது.

ஒட்டன்சத்திரம் காய்கறி மார்க்கெட்டுக்கு வேனில் காய்கறி ஏற்றிவரும் வேலை செய்யும் நாயகன் வெற்றிக்கும், அதே வேலை செய்யும் இன்னொரு கும்பலுக்கும் நடக்கும் தொழில் போட்டி எப்படி விபரீதமாக மாறுகிறது. அதில் என்ன நடந்தது என்பதுதான் இந்த படத்தின் திரைக்கதை.

ஒட்டன் சத்திரம் மார்கெட்டில் இதுவரை எந்த படத்தின் படப்பிடிப்பும் மார்கெட் இயங்கும் நேரத்தில் நடைபெற்றதில்லை. மாக்ர்கெட் செட் எதுவும் இல்லாமல். நிஜமாக மார்க்கெட் நடக்கும் நேரத்தில் படப்பிடிப்பை 15  நாட்களுக்கு மேல் நடத்தினோம். ஒட்டன்சத்திரம் மார்க்கெட் பின்னணியில் உருவாகும் முதல் படம் இது. காதல், ஆக்ஷன், காமெடி என பக்கா கமர்ஷியல் படமாக உருவாகி உள்ளது தங்கரதம்.

மேலும் இந்த படத்தில்  மொட்ட  ராஜேந்திரன் தனி பாடலில்  நடனமாடி கலக்கி இருக்கிறார்.

படப்பிடிப்பு ஒட்டன்சத்திரம், நாகர்கோவில், பழனி போன்ற இடங்களில் நடைபெற்றுள்ளது.