கிங் பிரதர்ஸ் தயாரிப்பில் பப்ளிக்ஸ்டார் நடிக்கும் ‘காளியாட்டம்’

ராமர் ” பட வெற்றியை  தொடர்ந்து இயக்குநர்  வருண் ஆதிராஜா’  பப்ளிக்ஸ்டார் நடிக்கும் புதிய படத்தை  மிகுந்த  பொருட்செலவில் பிரமாண்டமாக இயக்கி .வருகிறார்.

 கிங் பிரதர்ஸ் சார்பில் R.K..அயோத்தி  தயாரிக்கும் இப்படத்திற்கு  ‘காளியாட்டம் ‘ என பெயர் சூட்டப்பட்டுள்ளது.
 
பப்ளிக்ஸ்டார் கதாநாயகனாக நடிக்க  – நாயகியாக  சமீரா நடிக்கிறார். இவர்களுடன் அனைத்து கதாபாத்திரங்களிலும் 50க்கும் மேற்ப்பட்ட புதுமுகங்கள்  அறிமுகமாகிறார்கள்.
 
ரவுடிகளின்  ஆதிக்கத்தை அடக்கும் போலீஸ்   ,  
போலீஸை மிரள வைக்கும் ரவுடிகள்  – இவர்களின் போராட்டத்தை முற்றிலும் புதிய கோணத்தில், ஜனரஞ்சகமான முறையில் உருவாகிறது இப்படம் …
 
ஒளிப்பதிவு : ஈ.ஜெ..நௌட்ஷா , இசை  : பிரசாத் நிக்கி , எடிட்டிங்  : சுரேஷ் அர்ஸ் , சண்டைப்பயிற்சி : ஆக்க்ஷன் பிரகாஷ் , நடனம்  : ராபர்ட் , மக்கள் தொடர்பு  : நிகில் , தயாரிப்பு :  அயோத்தி ஆர்.கே.  
 
கதை – திரைக்கதை – வசனம் – இயக்கம் –  வருண் ஆதிராஜா
 
இப்படத்தின்  முதல் கட்ட படபிடிப்பு சென்னையில் 40 நாட்கள் நடைபெற்றது. தொடர்ந்து பொள்ளாச்சி , கோவை, ஊட்டியில் நடைபெறுகிறது .