குரங்குகளுக்கு சரக்கு கொடுத்து நடிகர் மயில்சாமி செய்த சேட்டை!

vajram-audio.sit2எஸ்.டி.ரமேஷ் செல்வன் இயக்கத்தில் ‘வஜ்ரம்’ படம் உருவாகியுள்ளது. இதில் ‘பசங்க’ ,’கோலி சோடா’ வில் நடித்த பசங்களான  ஸ்ரீராம், பாண்டி போன்ற நால்வர் மற்றும் தம்பிராமையா, மயில்சாமி நடித்துள்ளனர்.

இதன் ஆடியோ விழா நிகழ்ச்சியில் பாண்டியராஜன், எஸ்.தாணு ,சினேகன், எஸ்.டி.தம்பிராமையா,ரமேஷ் செல்வன் போன்றோரும் பேசினர்.படம் கல்வி பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதாக படத்தின்  விழாவில் பேசியவர்கள் கூறினார்கள்.  சாய்ராம் சினிமாஸ் சார்பில் தயாரிப்பு ஜெய்சந்த்..

நடிகர் மயில்சாமி பேசும்போது. “படப்பிடிப்புக்கு கூப்பிடும்போது பக்கம் என்று கூறி தூரமாக அழைத்துச்சென்று வாட்டி விடுவார்கள். ‘வஜ்ரம் ‘படப்பிடிப்பு ஜாலியாக இருந்தது. மூணார் போனோம் அங்கே குரங்குகளே இல்லை. ஆச்சரியமாக இருந்தது. குற்றாலத்தில் குரங்குகள் தொல்லை. எதை எடுத்தாலும் தூக்கிச் சென்று சாப்பிட்டுவிடும். அவை எதை வேண்டுமானாலும் தூக்கும்.எதைக் கொடுத்தாலும் சாப்பிடும்  என்றார்கள். எதைக் கொடுத்தாலும் சாப்பிடுமா.. இப்போ பார்க்கலாம் என்று என் உதவியாளாரிடம் 2 முழு பாட்டில் சரக்கை வாங்கிவரச் சொன்னேன். அதை குரங்குகளுக்குக் கொடுத்தேன் .குடித்து விட்டு மயங்கின.உருண்டன.. புரண்டன. இப்படி அதுகளின் கொட்டம் அடங்கியது ” என்றார். ஒன்று மறியா குரங்குகளுக்கு ஆல்கஹால் கொடுத்த மயில்சாமியை என்ன செய்வது.? இது மிருகவதை கிடையாதா?ஆல்கஹால்  குடித்த குரங்குகள் எத்தனை அடிபட்ட தோ?எத்தனை இறந்ததோ? படத்தில் நடிக்க வைக்க ஆயிரம் கட்டுப்பாடுகள் விதிமுறைகள் சொல்லும் விலங்குகள் நல வாரியம்  படப்பிடிப்பிடங்களில்  இப்படி துன்புறுத்தபடும் போது என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது.?