கௌதம் மேனனின் நம்பிக்கை!

tamil-anjalum1பிரபு தேவாவிடம் இணை இயக்குநராக பணியாற்றிய பிரேம் சாய் இயக்கத்தில் கௌதம் மேனன் வழங்கும் ‘தமிழ் செல்வனும் தனியார் அஞ்சலும்’ ‘படப்பிடிப்பு முடிந்து வெளி வரும் தருவாயில் உள்ளது.

முழுக்க முழுக்க   நகைச்சுவை மற்றும் காதல் கலந்த ஜனரஞ்சகமான இந்தப் படத்தில்  ஜெய்  நாயகனாக நடிக்க அவருக்கு ஜோடியாக பிரபல நடிகை யாமினி கௌதம் நடித்து  உள்ளார்.அவர்களுக்குள் நடக்கும் ஒரு இனிமையான காதல் நாடகமும், அதற்கு இணையாக சந்தானம் வி டி வி கணேஷ்  போடும் ரகளையான  நகைச்சுவையும் படத்துக்கு மிக சிறந்த பலமாகும்.

இந்த படத்தின் தெலுங்கு பதிப்பான ‘கொரியர் பாய் கல்யான்’ படத்தின் இசை கடந்த வாரம் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.அதை தொடர்ந்து தமிழ் செல்வனும் தனியார் அஞ்சலும் படத்தின்  பாடல் ஒன்று இன்று மாலை 7 மணிக்கு வெளியாகிறது.
பிரபல பின்னணி பாடகர் கார்த்திக் இசை அமைப்பாளராக அறிமுகமாகும் இந்தப் படத்தை ரசிகர்கள் திரை அரங்கத்துக்கு மீண்டும் மீண்டும் வந்து படை எடுப்பார்கள் என உறுதியுடன் கூறினார் கௌதம் வாசுதேவ மேனன்.