‘சேர்ந்து போலாமா’ விமர்சனம்

vinay-madhurimaநியூசிலாந்தில் வசிக்கும் தமிழ்க் குடும்பத்து சிறுவர்கள் கோடை விடுமுறையில் கூடி விளையாடுவது வழக்கம். நட்பாகிறார்கள். கால வெள்ளத்தில் பிரிகிறார்கள்.

அவர்களில் ஒருவன் கொலை செய்யப் படுகிறான். நாயகன் போன்ற  ஒருவன் ஒருத்தியைக் காதலிக்கிறான் அவளோ அவனைத் தவிர்க்கிறாள், இன்னொருத்தி அவனைக் காதலிக்கிறாள்.  அந்த ஒருவன் கொலை தொடர்பாக நாயகன்  மீது சந்தேகம் வருகிறது.

யார் கொலை செய்தது? எந்தக் காதல் வென்றது? என்பதுதான் சேர்ந்து போலாமா படத்தின் முடிவு.

நியூசிலாந்தில் எடுக்கப்பட்டுள்ள முழுப்படம். கலர்புல்லாக   ஜாலியான சிறுவயது நிகழ்வுகளுடன் கலகலப்பாக படம் தொடங்குகிறது..

வளர்ந்தபின் ஒருவரை ஒருவர் பார்க்கவிரும்ப .,அவர்களுக்குள் புதைந்த காதல் வெளிப்பட ,புகைந்த பொறாமையும் வெளியாக அதன் சடுகுடு ஆட்டம்தான் திரைக்கதை.

முற்பாதி காதல் காட்சிகளால் கலகலப்பு பிற்பாதியில் சஸ்பென்ஸ் காட்சிகளால் பரபரப்பு என்று போகிறது படம்.

வினய் துறுதுறு இளைஞனாக வருகிறார். காதல், மோதல் என்று கவர்கிறார். மதுரிமா, பிரீத்தி கிறிஸ்டினா பால் இருவரும் கவர்ச்சியோடு நடிப்பையும் காட்டியுள்ளனர். தம்பிராமையா கதையோடு பயணிக்கும் கலகல தர்பார் நடத்துகிறார்.

நியூசிலாந்தின் அழகை கண்முன் நிறுத்தியதில் ஒளிப்பதிவாளர் சஞ்சீவ் சங்கர் பதிகிறார். கா
ட்சிகள் கண்குளிர வைக்கின்றன.பாடல்கள் குறைவு பின்னணி இசையும் அளவோடு உள்ளது.
அனில்குமாரின் முதிர்ச்சியான இயக்கம் நேர்த்தி.