தனுஷ் படத்தில் பணிபுரியும் ஹாலிவுட் சண்டைப்பயிற்சியாளர் !

சத்யஜோதி பிலிம்ஸ்தயாரிப்பில்டி.ஜி. தியாகராஜன் வழங்க செந்தில்தியாகராஜன் மற்றும் அர்ஜுன்தியாகராஜன்  தயாரிக்கவிருக்கும்புதியபடத்தினை இயக்குநர் பிரபுசாலமன் இயக்க தனுஷ் கதாநாயகனாக  நடிக்க கீர்த்தி சுரேஷ் கதாநாயகியாக நடிக்கின்றார்.

hollywoor-masterமிகுந்த பொருட்செலவில் மிகவும் பிரம்மாண்டமான முறையில் தயாராகும் இப்படத்தை  மைனா, கும்கி, கயல் வெற்றிக்கு பிறகு இயக்குநர் பிரபுசாலமன் இயக்குகிறார்.

எக்ஸ்மேன், ஷங்கய்நூண், பேட்மேன்பிகின்ஸ், ஜேம்ஸ்பாண்ட் சீரியஸின் ஸ்கைஃபால் போன்ற உலகபுகழ் பெற்ற படங்களுக்கு சண்டைப்பயிற்சியாளராக பணிபுரிந்த ரோஜர்யுவான் இப்படத்தில் பிரம்மாண்டமான முக்கிய சண்டைக்காட்சிகளுக்கு பணிபுரிகிறார்.

அனைத்து தரப்பு மக்களையும் கவரும் வண்ணம் கம்ர்சியல் ஆக்ஷன் த்ரில்லராக இப்படம் உருவாகிறது.

இசையின் வெற்றிக்கூட்டணியான பிரபுசாலமன்  டி.இமான் இப்படத்தில் மூலம் மீண்டு ம்இணைந்துள்ளனர்.

ஒளிப்பதிவு வி. மகேந்திரன், படத்தொகுப்பு  தாஸ், கலை இயக்குநர் – வைரபாலன், நிர்வாகதயாரிப்பு  ராகுல்.

இணைதயாரிப்பு ஜி. சரவணன் மற்றும் திருமதி செல்விதியாகராஜன்.

இப்படத்தின் மற்ற நடிகர் நடிகைகளின் தேர்வு நடை பெற்று வருகிறது.